சானோ வாமுசோ
சானோ வாமுசோ | |
---|---|
![]() பத்மசிறீ விருது பெரும் சானோ வாமுசோ | |
பிறப்பு | சனோ இரலூ 27 மார்ச்சு 1940 நாகலாந்து, இந்தியர் |
தேசியம் | இந்தியா |
கல்வி | இளங்கலை குவகாத்தி பல்கலைக்கழகம், இளநிலை கல்வியியல் மும்பை பல்கலைக்கழகம், முதுநிலை (கல்வி) வடகிழக்கு மலைப் பல்கலைக்கழகம் |
பணி | சமூக சேவகர் |
அறியப்படுவது | நிறுவன தலைவர் நாகா தாய்மார்கள் சங்கம் |
வாழ்க்கைத் துணை | வமுசோ பெசாவோ |
விருதுகள் | பத்மசிறீ (2024) |
சனோ வாமுசோ (Sano Vamuzo)(பிறப்பு: மார்ச் 27, 1940) ஓர் இந்தியச் சமூக சேவகரும் அமைதி ஆர்வலரும் ஆவார். இவர் நாகா தாய்மார்கள் சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஆவார். நாகா சமூகத்திற்குள் உள்ள முக்கியமான சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும், அமைதி, ஒற்றுமை, பெண்களின் மேம்பாட்டிற்காக வாதிடுவதிலும் வாமுசோ முக்கிய பங்கு வகித்துள்ளார்.
இளமையும் கல்வியும்
[தொகு]வமுசோ மார்ச் 27, 1940-இல், இந்தியாவின் நாகாலாந்தில், மருத்துவர் செவிலி இரலு மற்றும் விடுனோ இரலு இணையருக்கு மகளாகப் பிறந்தார். இவர் நாகாலாந்தில் தனது கல்வியைத் தொடர்ந்தார். கலை மற்றும் கல்வித் துறைகளில் உயர் கல்வியை முடித்தார். 1980-இல் வடகிழக்கு மலைப் பல்கலைக்கழகத்தில் கல்வியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[1]
தொழில்
[தொகு]1983ஆம் ஆண்டு நாகா தாய்மார்கள் சங்கத்தில் வாமுசோவின் ஆரம்பகால ஈடுபாடு, குடிப்பழக்கம் மற்றும் போதைப் பழக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கான அவரது முயற்சிகளின் தொடக்கத்தைக் குறித்தது. 984 முதல் 1991 வரை இவரது தலைமையின் கீழ், நாகா தாய்மார்கள் சங்கம் சமூக ஒருமைப்பாடு, அமைதி, பெண்களின் அதிகாரமளித்தலை ஊக்குவித்தது.[2]
ஆதரவும் தாக்கமும்
[தொகு]வாமுசோவின் பணி நாகாலாந்தில் அமைதியைக் கட்டியெழுப்பும் செயல்முறைகளுக்குப் பங்களித்துள்ளது, தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பெண்களின் பங்கையும், சமூக சவால்களுக்கு ஒரு கூட்டு அணுகுமுறையின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது. நாகா வரலாறு மற்றும் அடையாளத்தைப் புரிந்துகொள்வதற்கான இவரது வாதமும், நாகா மக்களிடையே ஒற்றுமை மற்றும் நோக்க உணர்வை வளர்ப்பதற்கான அவரது முயற்சிகளின் ஒரு மூலக்கல்லாக இருந்து வருகிறது.
விருதுகள்
[தொகு]இந்தியாவின் மிக உயர்ந்த குடிமக்கள் விருதுகளில் ஒன்றான பத்மசிறீ விருதை 2024ஆம் ஆண்டில் வாமுசோ பெற்றார்.[3][4] இதனை இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.
இந்தப் பாராட்டு, நாகாலாந்தின் சமூகக் கட்டமைப்பிற்கு இவர் ஆற்றிய பங்களிப்புகளையும், அந்தப் பிராந்தியத்திற்குள் சமூக செயல்பாட்டில் ஒரு முன்னணி நபராக இவர் ஆற்றிய பங்கையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.[2]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]1990 முதல் 1992 வரை நாகாலாந்தை வழிநடத்திய இவரது கணவர் வமுசோ பெசாவோ 2000ஆம் ஆண்டில் இறந்தார். வமுசோ பெசோவிற்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்யப்பட்டது.[5][6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sano feted on being conferred Padma Shri". nagalandpost.com. January 27, 2024. Retrieved 2024-04-08.
- ↑ 2.0 2.1 "Naga woman activist Sano Vamuzo honoured with Padma Shri 2024". Nagaland Tribune (in அமெரிக்க ஆங்கிலம்). 2024-01-26. Retrieved 2024-04-08.
- ↑ Hazarika, Joydeep (2024-01-26). "Nagaland's Sano Vamuzo conferred Padma Shri in social work". India Today NE (in ஆங்கிலம்). Retrieved 2024-04-08.
- ↑ Ambrocia, Medolenuo (2024-01-26). "First president of Naga Mothers' Association conferred Padma Shri". EastMojo (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-04-08.
- ↑ "Ex-Nagaland Chief Minister Passes Away". The Telegraph (Calcutta). 22 March 2000. Archived from the original on 30 June 2016. Retrieved 7 December 2024.
- ↑ "Congress targets Nagaland with eye on the past". The Telegraph (Calcutta). 4 January 2008. Archived from the original on 30 June 2016. Retrieved 7 December 2024.