சானோ குரானா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சானோ குரானா
பிறப்பு1927 (அகவை 96–97)
சோத்பூர், ராஜஸ்தான்
இசை வடிவங்கள்பாரம்பரிய இசை
தொழில்(கள்)பாடகர், இசையமைப்பாளர்
இசைத்துறையில்(1940 முதல் தற்போது வரை

சானோ குரானா (Shanno Khurana) (பிறப்பு: 1927) இவர் பாரம்பரிய இந்துஸ்தானி சையின் ராம்பூர்-சகாசுவன் கரானாவில் ஒரு பிரபலமான இந்திய பாரம்பரிய பாடகரும் மற்றும் இசையமைப்பாளரும் ஆவார். கரானாவின் மேதையான உஸ்தாத் முஷ்டாக் உசேன் கானின் (இறப்பு: 1964), சீடரான இவர் மெல்லிசை மற்றும் அரிய ராகத்தை நிகழ்த்துவதில் பெயர் பெற்றவராயினும் இவரது பாடும் பாணியில் காயல், தரானா, தும்ரி, தாத்ரா, தப்பா, சைட்டி மற்றும் பஜனைகள் போன்ற வகைகளும் இடம்பெற்றுள்ளன. ஜோத்பூரில் பிறந்து வளர்ந்த இவர் 1945 ஆம் ஆண்டில் லாகூரில் அகில இந்திய வானொலியில் பாடத் தொடங்கினார். பின்னர் தில்லிக்கு மாறினார். அங்கு இவர் தில்லி, அகில இந்திய வானொலியின் இசை நிகழ்ச்சிகள் மற்றும் பிற இசை விழாக்களில் தொடர்ந்து பாடினார். இவர் இசைக் கல்வியையும் படித்தார். இறுதியாக தனது முனைவர் பட்டத்தையும் பெற்றார். கைராகர் பல்கலைக்கழகத்தில் இசையில் முனைவர் பட்டத்தில் ராஜஸ்தானின் நாட்டுப்புற இசை குறித்து விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்டார்.

இந்திய அரசு 1991ஆம் ஆண்டில் இவருக்கு பத்மசிறீ விருதும் அதனைத் தொடர்ந்து 2006ஆம் ஆண்டில் பத்ம பூசண் விருதும் வழங்கியது.[1] 2002 ஆம் ஆண்டில், இந்தியாவின் இசை, நடனம் மற்றும் நாடகத்திற்கான தேசிய அகாடமியான சங்கீத நாடக அகாதமி தனது உயர்ந்த கௌரவமான சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் என்ற விருதினை இவருக்கு வழங்கியது.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பயிற்சி[தொகு]

குரானா ராஜஸ்தானின் ஜோத்பூரில் ஒரு பஞ்சாபி குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார்.[2][3] இவரது குடும்பத்தில் எவரும் இசைக்கலைஞர்கள் அல்ல. மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் வெளிநாட்டு சேவைகளில் பணிபுரியும் நபர்களாக இருந்தனர். குவாலியர் கரானாவைச் சேர்ந்த ராஜா பயா பூஞ்ச்வாலின் சீடரும் மருமகனுமான இசையமைப்பாளரும் பாடகருமான பண்டிட் ரகுநாத் ராவ் முசல்கோன்கரிடமிருந்து இவரது சகோதரர் கற்றுக் கொண்டிருப்பதைக் கண்ட இவருக்கு ஆரம்ப ஆண்டுகளில் இசையில் ஆர்வம் அதிகரித்தது. இவரது பழமைவாத குடும்பம் பெண்கள் இசையை கற்க அனுமதிக்கவில்லை. ஆனால் இவர் வானொலியில் பாரம்பரிய இசையை ஆர்வமாகக் கேட்பதைக் கண்டதும், முசல்கோன்கரின் கீழ் இவரது 12 வயதில் தனது இசை பயிற்சியைத் தொடங்க இவரது தந்தை அனுமதித்தார்.[4][5]

தொழில்[தொகு]

குரானா தனது 18 வயதில், இந்திய விமானப்படையில் பணிபுரிந்த ஒரு பல் மருத்துவரைத் திருமணம் செய்து கொண்டு லாகூருக்கு சென்றார். இவர் 1945ஆம் ஆண்டு தொடங்கி லாகூரில் உள்ள அகில இந்திய வானொலியில் தொடர்ந்து பாடினார்.[6] இந்தியா பிரிந்த பிறகு, இவரது குடும்பத்தினர் தில்லிக்கு மாற வேண்டியிருந்தது. அங்கு இவரது கணவர் விமானப்படையை விட்டு வெளியேறி தனியாக மருத்துவ மனையைத் தொடங்கினார். தனது கணவரின் வற்புறுத்தலின் பேரில், இரண்டு இளம் குழந்தைகளும், நோய்வாய்ப்பட்ட மாமியாரும் இருந்தபோதிலும், இவர் மீண்டும் பாடத் தொடங்கினார். இவர் கைம்முரசு இணை மேதை பண்டிட் சதுர் லால் என்பவரிடம் பயிற்சி பெற்றார். இது அடுத்த 16 ஆண்டுகளாக தொடர்ந்தது. பின்னர் வானொலிகளிலும் பாடும் வாய்ப்பாக மாறியது. இதற்கிடையில், அப்போது சங்கீத நாடக அகாதமியின் செயலாளராக இருந்த நிர்மலா ஜோஷி, தில்லியில் உள்ள மண்டி மாளிகையில் உள்ள தனது இசை பள்ளியான சங்கீத பாரதியில் பாரம்பரிய இசையை கற்பிக்க அழைத்தார்.[4][7][8]

குறிப்புகள்[தொகு]

  1. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on நவம்பர் 15, 2014. பார்க்கப்பட்ட நாள் July 21, 2015. {{cite web}}: Unknown parameter |https://www.webcitation.org/6U68ulwpb?url= ignored (help)
  2. "Shanno Khurama". gharanfestival. Archived from the original on 19 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 29 May 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  3. "Tapping tappas". The Hindu. 16 January 2006 இம் மூலத்தில் இருந்து 9 அக்டோபர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131009030622/http://www.hindu.com/mp/2006/01/16/stories/2006011600620100.htm. பார்த்த நாள்: 29 May 2013. 
  4. 4.0 4.1 "It's raining ragas". The Hindu. 20 July 2007 இம் மூலத்தில் இருந்து 6 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121106020550/http://www.hindu.com/thehindu/fr/2007/07/20/stories/2007072050150200.htm. 
  5. "An evening of classical music". The Hindu. 20 August 2005 இம் மூலத்தில் இருந்து 4 செப்டம்பர் 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060904143744/http://www.hindu.com/2005/08/20/stories/2005082002350200.htm. பார்த்த நாள்: 29 May 2013. 
  6. Sangeet Natak Akademi (1969). "Dr. Shanno Khurana". Sangeet Natak (Sangeet Natak Akademi) (11–14): 74, 86. 
  7. "Upon the sands of time". The Hindu. 23 September 2005 இம் மூலத்தில் இருந்து 28 நவம்பர் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071128013033/http://www.hindu.com/fr/2005/09/23/stories/2005092302460300.htm. பார்த்த நாள்: 29 May 2013. 
  8. "Finding her own voice". The Hindu. 17 April 2009 இம் மூலத்தில் இருந்து 21 ஏப்ரல் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090421195450/http://www.hindu.com/fr/2009/04/17/stories/2009041751100100.htm. பார்த்த நாள்: 30 May 2013. 

வெளி இணைப்புகள்[தொகு]

External links[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சானோ_குரானா&oldid=3929695" இலிருந்து மீள்விக்கப்பட்டது