சானு லகிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சானு லகிரி
பிறப்புசானு மஜூம்தார்
சனவரி 23, 1928(1928-01-23)
கொல்கத்தா
இறப்பு1 பெப்ரவரி 2013(2013-02-01) (அகவை 85)
கொல்கத்தா
தேசியம்இந்தியன்
பணிஓவியர், கலை கல்வியாளர்
அறியப்படுவதுபொது ஓவியம் மற்றும் சுவரெழுத்து கலை

சானு லகிரி (Shanu Lahiri) (பிறப்பு:1928 சனவரி 23 – இறப்பு:2012 பிப்ரவரி 1) இவர் ஒரு பெங்காலி ஓவியரும் மற்றும் கலை கல்வியாளருமாவார். இவர் கொல்கத்தாவின் மிக முக்கியமான பெண் பொது கலைஞர்களில் ஒருவராக இருந்தார். நகரத்தை அழகுபடுத்துவதற்கும் ஆக்கிரமிப்பு அரசியல் முழக்கங்களை மறைப்பதற்கும் கொல்கத்தா முழுவதும் விரிவான சுவரெழுத்து கலைகளை மேற்கொண்டார். [1]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

லகிரி 1928 சனவரி 23 அன்று கொல்கத்தாவில் ஏழு உடன்பிறப்புகளுடன் மஜும்தார் குடும்பத்தில் பிறந்தார். இவரது தாயார் ரேணுகாமோய் மஜும்தார், படிக்காதவராக இருந்தாலும், இரவுகளில் கையெழுத்துப் பயிற்சி மேற்கொண்டார். [2] லகிரிக்கு எழுத்தாளர் கமல்குமார் மஜும்தார் மற்றும் கலைஞர் நிரோட் மஜும்தார் என்ற இரண்டு மூத்த சகோதரர்கள் இருந்தனர். இவர் கொல்கத்தாவின் அரசு கலை மற்றும் கைவினைக் கல்லூரியின் மாணவராக இருந்தார். அங்கு இவர் 1951இல் பட்டம் பெற்றார். அகில இந்திய கவின் கலைகள் மற்றும் கைவினைச் சங்கத்தின் குடியரசுத்தலைவரின் தங்கப் பதக்கத்தைப் பெற்ற கல்லூரியின் முதல் மாணவியாவார். 1951ஆம் ஆண்டில், இவர் பாரிசில் உள்ள எக்கோல் டு லூவ்ரே மற்றும் அகாடமி ஜூலியன் ஆகியவற்றிலிருந்தும் உதவித்தொகை பெற்றார். [3]

சமூக பொறுப்புணர்வு குறித்த தீவிர உணர்வுக்காக இவர் நன்கு அறியப்பட்டார். மேலும் நகரத்தை அழகுபடுத்துவதற்காக கொல்கத்தாவின் சுவர்களில் ஓவியம் வரைவதற்குத் தெருக் குழந்தைகளைத் திரட்டினார். வேறொருவரின் வாழ்க்கைக்கு பயனளிப்பதற்காக இவர் தனது கண்களை தானம் செய்திருந்தார். [4]

தொழில்[தொகு]

லகிரி வங்காள கலைப் பள்ளியின் ஓவியராக இருந்தார். [1] இவரது முதல் ஓவியக் கண்காட்சி 1950இல் நடந்தது. 1960ஆம் ஆண்டில் இவர் பாரிசுக்குச் செல்ல உதவித்தொகை பெற்றார். அதைத் தொடர்ந்து இந்தியாவிலும் வெளிநாட்டிலும் ஓவிய கண்காட்சிகளை நடத்தினார். 1970களின் பிற்பகுதியில், மேற்கில் தனது கல்வி வாழ்க்கையைத் தொடர்ந்து, [5], காட்சி கலைத் துறையில் வாசகராக ரவீந்திர பாரதி பல்கலைக்கழகத்தின் ஆசிரியப் பணியில் சேர்ந்தார். பின்னர் இவர் காட்சி கலை பீடத்தின் தலைவர் ஆனார். [6] [7] [8]

1960களில் கொல்கத்தா முழுவதும் கலைஞர் குழுக்கள் உருவாகத் தொடங்கியிருந்தாலும், சில பெண்கள் அவற்றில் ஒரு இடத்தையோ அல்லது குரலையோ கண்டனர். 1983ஆம் ஆண்டில், கலைஞர் கருணா சகாவின் வேண்டுகோளின் பேரில், லகிரி நகரின் முதல் பெண்கள் மட்டுமே அடங்கிய கலைஞர்கள் குழுவைத் தொடங்கினார். "தி குரூப்" என்று அழைக்கப்படும் இதில் லகிரி, சகா, சந்தோஷ் ரோகத்கி மற்றும் சியாமசிறீ பாசு உள்ளிட்ட நான்கு ஓவியர்கள் மற்றும் ஒரு சிற்பி மீரா முகர்ஜி ஆகியோர் அடங்குவர். உள்ளூர் ஊடகங்கள் இதை பஞ்ச கன்யா (ஐந்து பெண்கள்) என்று அழைத்தன . குழுவின் முதல் கண்காட்சி கொல்கத்தாவின் நுண்கலைகள் கழகத்தில் நடைபெற்றது. [9] 2008ஆம் ஆண்டில், இக்குழு தனது 25வது ஆண்டு நிறைவை நுண்கலைகள் கழகத்தில் கண்காட்சியுடன் கொண்டாடியது. அசல் உறுப்பினர்களில் பெரும்பாலோர் அதற்குள் இறந்துவிட்டாலும், அதில் 17 உறுப்பினர் கலைஞர்கள் மற்றும் ஏராளமான விருந்தினர் கலைஞர்கள் இருந்தனர். [10]

லகிரி தனது கலை மூலம் சமூகத்தின் சமகால யதார்த்தங்களை உரையாற்றினார். [9] இவர் தனது தனித்துவமான பாணியால் அங்கீகரிக்கப்பட்டு, கொல்கத்தாவின் சமகால கலை காட்சியில் சக ஓவியர் சகாவுடன் ஒரு முன்னணி பெண் கலைஞரானார். [11]

விருதுகள்[தொகு]

1951இல், இவர் அகில இந்திய கவின் கலைகள் மற்றும் கைவினைச் சங்கத்தின் குடியரசுத்தலைவர் விருதை வென்றார். [12]

குறிப்புகள்[தொகு]

 1. 1.0 1.1 "Noted painter Shanu Lahiri passes away". India TV. 14 March 2013 அன்று பார்க்கப்பட்டது.
 2. Ghosh, Labonita (10 December 2001). "Canvas of kinship: Shanu Lahiri releases Smritir Collage, organises Mazumdar family exhibition". இந்தியா டுடே. 16 March 2013 அன்று பார்க்கப்பட்டது.
 3. "Noted Painter Shanu Lahiri Dead". Outlook. 1 February 2013. 11 April 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 16 March 2013 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
 4. "Noted painter Shanu Lahiri passes away". www.indiatvnews.com (ஆங்கிலம்). 2013-02-01. 2019-03-12 அன்று பார்க்கப்பட்டது.
 5. Art in Art Colleges of West Bengal: An exhibition presented by Birla Academy of Art & Culture, Kolkata, on 5 to 23 December 2001. https://books.google.com/books?ei=GxpOUfTrCtKA7QbMqoDgAw&id=qr6fAAAAMAAJ&dq=shanu+lahiri&q=lahiri. 
 6. "Shanu Lahiri dead". The Telegraph. Archived from the original on 7 பிப்ரவரி 2013. https://web.archive.org/web/20130207013732/http://www.telegraphindia.com/1130202/jsp/calcutta/story_16510654.jsp#.UUISlTeEnuo. பார்த்த நாள்: 14 March 2013. 
 7. "A riot of colours on the wall". தி இந்து. Archived from the original on 11 ஏப்ரல் 2013. https://archive.today/20130411023601/http://www.hindu.com/mp/2010/11/12/stories/2010111252700500.htm. பார்த்த நாள்: 16 March 2013. 
 8. Bag, Shamik (13 August 2010). "Not another brick in the wall". Mint. 16 March 2013 அன்று பார்க்கப்பட்டது.
 9. 9.0 9.1 "Shanu Lahiri dead". The Telegraph (Calcutta, India). 2 February 2013. Archived from the original on 7 பிப்ரவரி 2013. https://web.archive.org/web/20130207013732/http://www.telegraphindia.com/1130202/jsp/calcutta/story_16510654.jsp#.UUISlTeEnuo. பார்த்த நாள்: 14 March 2013.  பிழை காட்டு: Invalid <ref> tag; name "Telegraph" defined multiple times with different content
 10. "Famous five women". The Telegraph (Calcutta, India). 21 September 2008. http://www.telegraphindia.com/1080921/jsp/calcutta/story_9862275.jsp. பார்த்த நாள்: 16 March 2013. 
 11. Calcutta: Society and Change 1690–1990. https://books.google.com/books?id=y-W6TjM2n1AC&pg=PA147. 
 12. "Shanu Lahiri dead". www.telegraphindia.com (ஆங்கிலம்). 2019-03-12 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சானு_லகிரி&oldid=3337207" இருந்து மீள்விக்கப்பட்டது