உள்ளடக்கத்துக்குச் செல்

சானி உதியார்

ஆள்கூறுகள்: 29°46′16″N 79°52′14″E / 29.77115°N 79.87059°E / 29.77115; 79.87059
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சானி உதியார்
सानि उडियार
Location in Uttarakhand, India
Location in Uttarakhand, India
சானி உதியார்
உத்தராகாண்டம் மாநிலத்தில் சானி உதியாரின் அமைவிடம்
Location in Uttarakhand, India
Location in Uttarakhand, India
சானி உதியார்
சானி உதியார் (இந்தியா)
ஆள்கூறுகள்: 29°46′16″N 79°52′14″E / 29.77115°N 79.87059°E / 29.77115; 79.87059
நாடு இந்தியா
மாநிலம்உத்தராகண்டம்
கோட்டம்குமாவுனி
மாவட்டம்பாகேசுவர்
பரப்பளவு
 • மொத்தம்216.48 km2 (83.58 sq mi)
ஏற்றம்
520 m (1,710 ft)
மக்கள்தொகை
 (2011)[2]
 • மொத்தம்394
 • அடர்த்தி1.8/km2 (4.7/sq mi)
 பாலின விகிதம் 1021/1000 /
மொழிகள்
 • அலுவல்இந்தி
சமசுகிருதம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
263631[3]
தொலைபேசி இணைப்பு எண்05963
வாகனப் பதிவுஉகே 02
இணையதளம்uk.gov.in

சானி உதியார் (Sani Udiyar) என்பது இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தில் பாகேசுவர் மாவட்டத்தில் காந்தா வட்டத்தில் [1] அமைந்துள்ள ஒரு ஊராகும். இது காந்தாவிலிருந்து 15 கிலோமீட்டர் (9.3 மைல்) தொலைவிலும், பாகேசுவரிலிருந்து 36 கிலோமீட்டர் (22 மைல்) [1] தொலைவிலும் அமைந்துள்ளது. ஒரு நடுத்தர கிராமமான இதில், மொத்தம் 88 குடும்பங்கள் வசிக்கின்றன. [4] இது அட்டவணை சாதியைச் சேர்ந்த மக்களின் கணிசமான மக்கள்தொகையைக் கொண்டுள்ளது.

நிலவியல்

[தொகு]

பாகேசுவர் மாவட்டத்தின் நிர்வாக தலைமையகமான சானி உதியார் 29.77115 ° வடக்கிலும் 79.87059 ° கிழக்கிலும் அமைந்துள்ளது. [5] இது சராசரி கடல் மட்டத்திலிருந்து 520 மீட்டர் (1,710 அடி) உயரத்தில் உள்ளது. கிராமத்தின் மொத்த புவியியல் பரப்பளவு 216.48 ஹெக்டேர் ஆகும்.[1]

புள்ளிவிவரங்கள்

[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 394 என்ற அளவில் இருக்கிறது.[2][4] மொத்த மக்கள் தொகையில் அட்டவணை சாதியினர் 34.52% இருக்கின்றனர். கிராமத்தின் பாலின விகிதம் 1021, இது மாநில சராசரியான 963 ஐ விட அதிகமாகும்.[4] 0-6 வயதுடைய குழந்தைகளின் எண்ணிக்கை 66 ஆகும். இது கிராமத்தின் மொத்த மக்கள் தொகையில் 16.75% ஆகும்.[4] உத்தராகண்டம் மாநிலத்துடன் ஒப்பிடும்போது கிராமத்தில் அதிக கல்வியறிவு உள்ளது. 2011 ஆம் ஆண்டில், கிராமத்தின் கல்வியறிவு விகிதம் 89.33% ஆகவும், உத்தராகண்டம் 78.82% ஆகவும் இருந்தது. [4]

போக்குவரத்து

[தொகு]

உத்தராகண்டம் மாநிலம் மற்றும் வட இந்தியாவின் முக்கிய இடங்களுடன் கிராமம் சாலைகள் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. பஸ் சேவைகள் வழங்கப்படுகின்றன உத்தரகண்ட் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் மூலம் தில்லி, ஆனந்த் விஹார் போன்ற இடங்களுக்கு பேருந்து சேவைகளை வழங்குகிறது. வழக்கமான டாக்சிகள் காந்தாவிற்கும், மேலும் பாகேஸ்வர் மற்றும் சௌகோரி வரை கிடைக்கின்றன. பந்த்நகர் வானூர்தி நிலையம் குமாவுன் பகுதி முழுமைக்கும் முதன்மை விமான சேவையை வழங்குகிறது. தில்லியில் அமைந்துள்ள இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையம் அருகிலுள்ள சர்வதேச விமான நிலையமாகும். கத்கோடம் தொடர்வண்டி நிலையம் அருகிலுள்ள ரயில் நிலையமாகும்.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 "Sani Udiyar Village in Kanda (Bageshwar) Uttarakhand". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 21 October 2016.
  2. 2.0 2.1 2.2 District Census Handbook part-B: Bageshwar (PDF). Directorate of Census Operations, Uttarakhand. pp. 78–83. பார்க்கப்பட்ட நாள் 21 October 2016.
  3. "Pin Code of Sani Udiyar in Bageshwar, Uttarakhand". www.mapsofindia.com. பார்க்கப்பட்ட நாள் 21 October 2016.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 "Sani Udiyar Village Population - Kanda - Bageshwar, Uttarakhand". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 21 October 2016.
  5. "Sani Udiyar Pin Code, Sani Udiyar, Bageshwar Map, Latitude and Longitude, Uttarakhand". www.indiamapia.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சானி_உதியார்&oldid=3243562" இலிருந்து மீள்விக்கப்பட்டது