சானிமோல் உசுமான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சானிமோல் உசுமான்
Shanimol Osman
ഷാനിമോള്‍ ഉസ്മാൻ
கேரள சட்டமன்றம்
பதவியில்
28 அக்டோபர் 2019 – 24 மே 2021
முன்னையவர்ஏ. எம். ஆரிப்
பின்னவர்தலீமா
தொகுதிஅரூர் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு30 மே 1966 (1966-05-30) (அகவை 57)
ஆலப்புழா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வாழிடம்ஆலப்புழா
தொழில்அரசியல்வாதி, சமூக சேவகர்

சானிமோல் உசுமான் (Shanimol Usman) என்பவர் கேரளாவைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். சானிமோல் 2019-ல் நடந்த இடைத்தேர்தலில் அரூரி சட்டமன்றத் தொகுதியிலிருந்து கேரள சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

அகில இந்திய காங்கிரசு கட்சியின் செயலாளராகக் கேரளாவிலிருந்து நியமிக்கப்பட்ட முதல் பெண் தலைவர் இவராவார்.[2] சானிமோல் இளநிலை சட்டம் பட்டம் பெற்றவர்.[3] இவர் 2019 தேர்தலில் இந்தியத் தேசிய காங்கிரசு வேட்பாளராக ஆலப்புழா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு அட்வரிடம் தோல்வியடைந்தார். இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் ஏ. எம். ஆர்ப் 9213 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் 2019-ல் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) வேட்பாளர் மனு சி. புலிக்கலையினை 2,079 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[4]

2016 கேரள சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனநாயக முன்னணி ஒரே பெண் சட்டமன்ற உறுப்பினர் சானிமோல் உசுமான் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Shanimol Usman 'right candidate' for Ottappalam, Shanta out". Deccanchronicle.com. 10 April 2016. பார்க்கப்பட்ட நாள் 4 September 2017.
  2. "Congress leader from Kerala, Shanimol Usman was inducted into the reconstituted Congress Working Committee as AICC Secretary today". Times of India. http://m.timesofindia.com//articleshow/7627445.cms. பார்த்த நாள்: 4 September 2017. 
  3. പോരിന് മുമ്പെ ചര്‍ച്ചയായത് സ്ഥാനാര്‍ഥി നിര്‍ണയം. Madhyamam.com. Archived from the original on 4 செப்டம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 4 September 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Congress Defeats CPI-M In Kerala's Aroor Seat After 18 Years". NDTV.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சானிமோல்_உசுமான்&oldid=3697425" இலிருந்து மீள்விக்கப்பட்டது