சானவி அச்சரேக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சானவி அச்சரேகர் (Janhavi Acharekar) (பிறப்பு 1973) புனைகதை மற்றும் பயணத்தின் இந்திய எழுத்தாளர் ஆவார். வாண்டரர்ஸ், ஆல் (2015) என்ற புதினத்தையும் சிறுகதைகளின் தொகுப்பான 'சாரள இருக்கை: நகரத்திலிருந்து விரைவான கதைகள்' (2009), இந்த இரண்டும் ஹார்பர் காலின்ஸ் என்ற நூல் வெளியீட்டு நிறுவனம் வெளியிட்டது. பயண வழிகாட்டியான மூன் மும்பை அன்ட் கோவா (2009) மூன் ஹேண்ட்புக் என்ற நிறுவனத்தல் வெளியிடப்பட்டது. இவரது கட்டுரைகள் தி ஸ்டேட்ஸ்மேன், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, பிப்லியோ, வான்கூவர் சன் மற்றும் பிற வெளியீடுகளில் வெளிவந்துள்ளன. இவர் இந்தியாவில் பல இலக்கிய விழாக்களை மேற்பார்வையிட்டுள்ளார். குழந்தைகளுக்காக இரண்டு புத்தகங்களையும் எழுதியுள்ளார்

ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்[தொகு]

இவர், மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களில் வளர்ந்து, மும்பை புனித சேவியர் கல்லூரியில் ஆங்கிலத்தில் பட்டம் பெற்றார். மும்பை பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டமும், சேவியர் தொடர்பியல் நிறுவனத்தில் மக்கள் செய்தித் தொடர்பியலில் சான்றிதழும் பெற்றார். புனித சேவியரில் மாணவராக இருந்தபோது தி இன்டிபென்டன்ட் பத்திரிகையின் சுயாதீன பத்திரிகையாளராக தனது எழுத்து வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் விளம்பரத்தில் நகல் எழுத்தாளராகப் பணியாற்றினார். 2009ஆம் ஆண்டில் இவரது எழுத்துக்கு ஏசியன் ஏஜ்ஜின் ஆண்டின் ஒன்பது முக்கிய மும்பை குடியிருப்பாளர்களில் ஒருவராக அறிவிக்கப்பட்டார்

தொழில்[தொகு]

அச்சரேகரின் புதினமான வாண்டரர்ஸ், ஆல் ஹார்பர்காலின்ஸ் இந்தியா என்ற புத்தக வெளியீட்டு நிறுவத்தின் மூலம் 2015 இல்[1] வெளியிடப்பட்டது.[2]

அமெரிக்க பயணப் புத்தகத் தொடரான மூன் ஹேண்ட் புக்ஸால் வெளியிடப்பட்ட முதல் இந்திய இலக்கு பயண வழிகாட்டியான மூன் மும்பை & கோவா (அவலோன், 2009) என்ற புத்தகத்தின் ஆசிரியராவார்.[3]

இது பார்வார்டு இதழின் ஆண்டின் சிறந்த புத்தக விருதுகளில் (பொடியா, அமெரிக்கா) பயண வழிகாட்டி பிரிவில் இறுதிப் போட்டியாளராக இருந்தது. [4] ஒரு சுருக்கப்பட்ட பதிப்பு, மூன் ஸ்பாட்லைட் கோவா, 2010 இல் வெளியிடப்பட்டது. அவுட்லுக் டிராவலர் மூலம் இந்தியா முழுவதும் விடுமுறை பயண வழிகாட்டிகளுக்கு இவர் சிறப்பு பங்களிப்பாளராக இருந்தார். [5]

அச்சரேகர் ஒரு சுதந்திர பயண எழுத்தாளரும் கலை பத்திரிகையாளரும் ஆவார். இவர் காண்டே நாஸ்ட் டிராவலர் இந்தியா நிறுவனத்தில் பங்களிப்பு தொகுப்பாளாராக உள்ளார். மேலும் தி இந்துவில் நூல விமர்சனங்களையும் அதன் அம்சங்களையும் எழுதுகிறார். இவரது கட்டுரைகள் தி ஸ்டேட்ஸ்மேன், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, பிப்லியோ, வான்கூவர் சன் மற்றும் பிற வெளியீடுகளில் வெளிவந்துள்ளன. இவர் இந்தியாவில் பல இலக்கிய விழாக்களை மேற்பார்வையிட்டுள்ளார். குழந்தைகளுக்காக இரண்டு புத்தகங்களையும் எழுதியுள்ளார்.[6].

கௌரவங்கள்[தொகு]

2009 இல் இசுடர்லிங் பல்கலைக்கழகத்தில் சார்லஸ் வாலஸ் வருகை எழுத்தாளருக்கான கௌரவம் பெற்றார்.[7] அதே ஆண்டில் இவரது எழுத்துக்கு ஏசியன் ஏஜ்ஜின் ஆண்டின் ஒன்பது முக்கிய மும்பை குடியிருப்பாளர்களில் ஒருவராக அறிவிக்கப்பட்டார். புதுச்சேரியில் உள்ள சங்கம் வீடு, டென்மார்க், லாத்வியாவின் வென்ட்சுபில்சில் உள்ள சர்வதேச எழுத்தாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் இல்லம் ஆகியவற்றுக்கும் இவர் அழைக்கப்பட்டார். இலக்கிய விழாக்களில் அவ்வப்போது பொறுப்பாளாராக இருக்கிறார். இவர் பெங்களூரில் உள்ள இலக்கிய அமைப்பின் நிறுவனர்-கண்காணிப்பாளராக இருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The present overwhelms the past, says, author, Janhavi Acharekar". The Indian Express (in ஆங்கிலம்). 2015-04-20. பார்க்கப்பட்ட நாள் 2021-05-24.
  2. "HarperCollins India". HarperCollins India. Archived from the original on 2 April 2015.
  3. "Moon Travel Guides". Moon Travel Guides. 29 June 2017.
  4. "Win A Book Award". Win A Book Award.
  5. "Outlook Traveller". Outlook Traveller.
  6. "Childrenbooks". Childrenbooks. Archived from the original on 14 April 2015.
  7. "Charles Wallace Fellowship". Charle Wallace Fellowship.

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சானவி_அச்சரேக்கர்&oldid=3792755" இலிருந்து மீள்விக்கப்பட்டது