உள்ளடக்கத்துக்குச் செல்

சாந்தீபனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாந்தீபனி
காணாமல் போன சாந்தீபனி முனிவரின் மகனை கிருஷ்ணன் ஒப்படைக்கும் காட்சி
வகைமுனிவர்
நூல்கள்பாகவத புரானம் & ஹரி வம்சம்
சமயம்அவந்தி

சாந்தீபனி (Sandipani (சமக்கிருதம்: सान्दीपनि), கிருட்டிணன், பலராமர் மற்றும் குசேலர் ஆகியோர், மாணவப்பருவத்தில் அவந்தி நாட்டில் உள்ள உஜ்ஜைன் நகரத்தில் குரு சாந்தீபனி முனிவர் ஆசிரமத்தில் தங்கி குருகுல முறையில் வேதம், வானவியல், ஆயுர்வேதம், யானை மற்றும் குதிரையேற்றம் மற்றும் வில் வித்தை போன்ற கல்வியைக் கற்றனர்.[1]

பாகவத புரானத்தில் குரு குலக் கல்வி முடித்த கிருஷ்ணர் சாந்தீபனி முனிவரிடம் குரு தட்சணையாக என்ன வேண்டும் எனக்கேட்ட போது, குரு தட்சனை வேண்டாம் என்று கூறிவிட்டார். மேலும் அழுத்திக் கேட்ட கிருஷ்ணரிடம், குரு பத்தினியான சுமுகி தேவியிடம் அனுப்பி வைத்தார்.

பிரபாசப் பட்டினக் கடலில் குளிக்கச் சென்ற தனது மகனை மீட்டு தருமாறு, குரு பத்தினி சுமுகி தேவி, கிருஷ்னரிடம் கேட்டுக் கொண்டார். கிருஷ்ணர் மற்றும் பலராமர் இருவரும் பிரபாசா பட்டினத்திற்குச் சென்றனர். சாந்தீபனி முனிவர் மகனை அரக்கனான சங்காசூரன் கவர்ந்து சென்றதை அறிந்து, சங்காசூரனை கொன்று, சாந்தீபனி முனிவரின் மகனை திரும்ப சாந்தீபனி முனிவரிடம் ஒப்படைத்தார்.[2]

வெளி இணைப்புகள்

[தொகு]

Main extract of the Bhagavata Purana related to Sandipani

மேற்கோள்கள்

[தொகு]
  1. www.wisdomlib.org (2017-06-19). "Sandipani, Sāndīpani: 5 definitions". www.wisdomlib.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-07.
  2. "Chapter Forty-Five".
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாந்தீபனி&oldid=4126692" இலிருந்து மீள்விக்கப்பட்டது