சாந்தி சித்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாந்திசித்ரா
பிறப்பு24 ஏப்ரல் 1978 (1978-04-24) (அகவை 45)
சென்னை, இந்தியா
தொழில்எழுத்தாளர், பேராசிரியர்
மொழிஆங்கிலத்தில்
கல்விPh.D., M.Phil., M.A
கல்வி நிலையம்பாரதிதாசன் பல்கலைக்கழகம்
வகைபுனைகதை, மெய்யியல்
குறிப்பிடத்தக்க படைப்புகள்ஃபிராக்டல்கள்[1] லோன்லி மேரேஜ்ஸ் ISBN 978-1-948473-49-1
குடும்பத்தினர்[[கருணாகரன் (நடிகர்) |கருணாகரன்]] (சகோதரன்)

சாந்தி சித்ரா (பிறப்பு 24 ஏப்ரல் 1978) இந்தியாவின் தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்தவரும், பேராசிரியருமான இவர், ஆங்கில புத்தகங்களை எழுதியுள்ள எழுத்தாளரும் ஆவார், 2016 ம் ஆண்டில் வெளியான தி பிராக்டல்கள்: குற்ற உணர்ச்சியின் ஒருபோதும் முடிவடையாத முறை என்பதே இவரின் அறிமுக புதினமாகும். இந்நாவல் 2018 ஆம் ஆண்டில் நோஷன்பிரஸ் வெளியீட்டாளர்களால்மீண்டும் வெளியிடப்பட்டது. அவரது இரண்டாவது புதினம் 'லோன்லி மேரேஜஸ்', என்பதும் 2018 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நாவல்களின் மூலம், இந்திய ஆங்கில எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்த இடத்தை அடைந்துள்ளார்.  நாவல்களை எழுதுவதோடு, இவர் பல்வேறு செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளுக்கு பல தலைப்புகளிலும், வகைகளிலும் சிறுகதைகளை எழுதியுள்ளார். மேலும் பல்வேறு இலக்கிய மற்றும் நிகழ்வு மற்றும் இருத்தலியல் போன்ற கருத்தியல்களைப் பற்றி விமர்சன ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்.

சாந்தி சித்ரா, 2012 ம் ஆண்டு முதல் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

சாந்தி சித்ரா, தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்தவர். அவரது தந்தை இந்திய அரசின் ரா பிரிவில் வேலைசெய்தபடியால் ஏற்பட்ட இடமாற்றம் காரணமாக, அவரது குழந்தைப் பருவத்தின் ஒரு பகுதியை நாகாலாந்திலும், பின்னர் டெல்லியிலும் வளர்த்துள்ளார். அங்கேயே பள்ளிப்படிப்பையும் முடித்துள்ளார். இப்படியாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குப் பயணம் செய்ததால்,அங்குள்ள கலாச்சாரங்கள், அதன் பண்புகள், கூறுகள் மற்றும் உளவியலில் ஆர்வம் ஏற்பட்டதாக கூறியுள்ளார். மீண்டும் தமிழ்நாட்டிற்க்கே சென்று கல்லூரிப்படிப்பை தொடர்ந்துள்ளார். 2002 ம் ஆண்டில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் ஹோலி கிராஸ், திருச்சி கல்லூரியில் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். அதைத்தொடர்ந்து ஆலோசனை மற்றும் உளவியல் சிகிச்சையைப் படிக்க முடிவு செய்து படித்துள்ளார்,

2011 ம் ஆண்டில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் பிஷப் ஹீபர் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.[2]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

சாந்தி சித்ரா தமிழ் திரைப்பட நடிகர் கருணாகரனின் சகோதரி ஆவார்.

தொழில் வாழ்க்கை[தொகு]

படித்து முடிந்ததில் இருந்து பல ஆண்டுகள் ஆங்கில இலக்கிய ஆசிரியராக பணியாற்றியுள்ள இவர், ஆகஸ்ட் 2012 ம் ஆண்டு முதல் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார்.[3] அத்தோடு புனைவெழுத்துகளில் படைப்புகளையும் எழுதி வருகிறார்.

சாதனைகள்[தொகு]

பிஷப் ஹீபர் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் முனைவர் படிப்பில் முதலிடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. ஃபிராக்டல்கள், ISBN 978-1-948372-77-0
  2. "???? 2016" (PDF). SRM University. Archived from the original (PDF) on 30 May 2016.
  3. 3.0 3.1 Dr. K. Shantichitra பரணிடப்பட்டது 2019-04-09 at the வந்தவழி இயந்திரம், SRM University, Retrieved 24 April 2016
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாந்தி_சித்ரா&oldid=3686574" இலிருந்து மீள்விக்கப்பட்டது