சாந்தா ராமராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாந்தா ராமராவ்
கல்வி நிலையம் வெல்லெஸ்லி கல்லூரி, மாசச்சூசெட்ஸ்
இலக்கிய வகை பயண எழுத்தாளர், புதின எழுத்தாளர், நாடக ஆசிரியர்
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
This is India (1953) (novel)
A Passage to India (1960) (play adaptation)
துணைவர்(கள்) Faubion Bowers (1951–1966; divorced)
Gurdon Wattles (1970–1995; his death)

சாந்தா ராமாராவ் (24 ஜனவரி 1923   – 21 ஏப்ரல் 2009) [1] இந்தியாவில் பிறந்த அமெரிக்க எழுத்தாளரும் இதழியலாளரும் ஆவார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் பின்னணி[தொகு]

சாந்தா 1923, ஜனவரி 24 ஆம் நாள் பிரித்தானிய இந்தியாவின் மதராசில் பிறந்தார். இவரது தந்தை பெனகல் ராமராவ் ஓர் இந்திய அரசாங்க ஊழியர் ஆவார். அவரது மனைவி தன்வந்தி ராமராவ், வழக்கறிஞராக இருந்தார். சாந்தாவின் தந்தை புகழ்பெற்ற உயர்ந்த இந்தியக் குடிமைப் பணியில் உறுப்பினராக இருந்தார். இவர் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நீண்ட காலமாகப் (1949-57) பணியிலிருந்தார் சாந்தவின் தந்தை குடும்பம் மிகவும் தனித்துவமானது. இவரது தாத்தா, பெனகல் ராகவேந்திர ராவ் மேற்கத்திய மருத்துவம் படித்த மூத்த மருத்துவர்களில் ஒருவராவார். இவரது தந்தையின் மூத்த சகோதரரான பெனகல் நரசிங் ராவ், இந்தியாவின் அரசியலமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்த புகழ்பெற்ற அரசு ஊழியரும், நீதிபதியும், அரசியலாளரும் ஆவார். இவரது சிறிய தந்தை பெனகல் சிவராவ், பத்திரிகையாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாவார்.

சாந்தாவின் தந்தை கர்நாடகத்தின் கனராவைச் சேர்ந்த, தென்னிந்திய சரஸ்வத் பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தாய்மொழி கொங்கணியாகும். இவரது தாயார் காஷ்மீர பண்டிதர் ஆவார். இந்தியாவின் வடக்கே வெகு தொலைவில் பிறந்திருப்பினும் இவர் கர்நாடகாவின் ஹூப்ளியில் வளர்ந்தார். இது கனராவிக்கு அருகிலேயே இருந்தது.[2]

இவரது ஆரம்ப காலங்களில் ராம ராவ் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இந்தியாவில் வாழ்ந்தார். சாந்தாவுக்கு 5 வயதிருக்கும்போது, அவரது 8 வயது சகோதரி பிரமிளாவுடன், சிறிது காலம் ஆங்கிலேய-இந்தியப் பள்ளியில் பயின்றார். அப்பள்ளியில் சாந்தாவின் பெயர் சிந்தியா எனவும் அவளுடைய சகோதரி பிரமிளாஇவருடையா ஆசிரியர் “இந்தியர்கள் ஏமாற்றுவதாக”க் கூறினார். அன்று வீடு திரும்பிய இவர்கள் அதன் பின் பள்ளிக்குச் செல்லவில்லை. இந்த சம்பவம் சாந்தாவின் குறுகிய நினைவூட்டலில் “பை எனி அதர் நேம்” என்ற தலைப்பில் இடம்பெற்றது.

1929 ஆம் ஆண்டில், சாந்தா இங்கிலாந்திற்கு ஒரு அரசியல் பயணத்தில் தன் தந்தையுடன் இணைந்து கொண்டார். அங்கு இவர் புனித பால் மகளிர் பள்ளியில் படித்தார். 1939இல் அப்பள்ளியை விட்டு விலகினார. பின்னர் தென்னாப்பிரிக்காவுக்கு ஒரு குறுகிய பயணம் மேற்கொண்டார். இவர் நினைவிலிருந்ததை விடவும் மாறுபட்ட இடங்களைக் கண்டறிய இந்தியாவுக்குத் திரும்பினார்.அமெரிக்காவில் மாசச்சூசெட்ஸில் வெல்லெஸ்லியில் உள்ள வெல்லஸ்லி கல்லூரியில் சேர விண்ணப்பித்தார், அங்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட முதல் இந்திய மாணவர் இவரேயாவார். இவர் 1944இல் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப் பெற்றார். சிறிது காலம் கழித்து, இவர் தனது முதல் புத்தகமான ஹோம் டூ இந்தியா என்ற நூலை வெளியிட்டார்.

தொழில்[தொகு]

1947 இல் இந்தியா சுதந்திரம் பெற்றபோது, ராமா ராவின் தந்தை ஜப்பான் நாட்டின் முதல் தூதராக நியமிக்கப்பட்டார். தோக்கியோவில் இருந்தபோது, இவரது எதிர்காலக் கணவரும் அமெரிக்கருமான, பேபியோன் போவர்ஸைச் சந்தித்தார். ஆசியா,ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பயணம் செய்த இவ்விணையர் நியூயார்க் நகரத்தில், நியூயார்க்கில் குடியேறினர். சாந்தா 1971 ஆம் ஆண்டில் நியூயார்க்கில் உள்ள பிரான்ஸ்கில்வில் சாரா லாரன்ஸ் கல்லூரியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார். இவர் ஒரு சார்பற்ற சுதந்திர எழுத்தாளராகவும் பணியாற்றினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Santha Rama Rau, Who Wrote of India’s Landscape and Psyche, Dies at 86". https://www.nytimes.com/2009/04/24/arts/24ramarau.html. பார்த்த நாள்: April 27, 2009. 
  2. The postcolonial careers of Santha Rama Rau. Duke University Press. https://books.google.com/books?id=vjetvMK6eV0C&pg=PA116&dq=Santha+Rama+Rau+kashmiri&hl=en&ei=5zPsTJXnIcH78AaM9MWSAw&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CCkQ6AEwAA#v=onepage&q=Santha%20Rama%20Rau%20kashmiri&f=false. பார்த்த நாள்: 2007-03-25. "Here Rama Rau details how her mother's ancestors had fled Muslim invaders three hundred years ago ("to settle inappropriately enough, in another Muslim stronghold, Allahabad"). Despite being migrants-and, of course, because of it-the women of the family preserved Kashmiri customs such as brewing green tea, cooking in ghee as opposed to oil, and preferring a variety of breads to rice. In all of this, their fierce sense of origins, their strong feeling for the "Kashmiri Brahmin" community," remained undiminished even though they were exiled in uncomprehending, if not hostile territory." 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாந்தா_ராமராவ்&oldid=3191983" இருந்து மீள்விக்கப்பட்டது