சாந்தா தத்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாந்தா தத்தா
Shanta Dutta
இந்தியப் பெண்
சாந்தா தத்தா
குடியுரிமைஇந்தியா
தேசியம்இந்தியன்
துறைநுண்ணுயிரியியல்
பணியிடங்கள்தேசிய காலரா மற்றும் குடல்சார் நோயியல் நிறுவனம்
கல்விகொல்கத்தா பல்கலைக்கழகம், இளநிலை
மங்களுர் பல்கலைக்கழகம், முதுநிலை
கியுசூ பல்கலைக்கழகம், முனைவர்

சாந்தா தத்தா (Shanta Dutta) என்பவர் ஒர் இந்திய நுண்ணுயிரியலாளராவார். தற்போது தேசிய காலரா மற்றும் நுரையீரல் நோய்கள் நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார். [1] குடல்சார் நோய் குறித்த 23 ஆண்டுகளுக்கும் மேலான ஆராய்ச்சி அனுபவம் இவருக்கு உள்ளது. [2]

கல்வி[தொகு]

1986 ஆம் ஆண்டில் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் தனது எம்.பி.பி.எசு மருத்துவப் படிப்பை இவர் முடித்தார். 1992 ஆம் ஆண்டில் கர்நாடகாவின் மங்களூர் பல்கலைக்கழகத்தில் மருத்துவ நுண்ணுயிரியலை மையமாகக் கொண்டு மருத்துவ முதுநிலை படிப்பை முடித்தார். 2006 ஆம் ஆண்டு இவர் சப்பானின் கியுசூ பல்கலைக்கழகத்தில் மருத்துவ அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார். [1]

தொழில்[தொகு]

1994 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 3 ஆம் தேதியன்று தத்தா இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் சேர்ந்தார். 2016 ஆம் ஆண்டு சூலை மாதம் 12 ஆம் நாள் இவர் பாக்டீரியா நோயியல் பிரிவில் தேசிய காலரா மற்றும் குடல்சார் நோய்கள் நிறுவனத்தில் விஞ்ஞானி (இயக்குநர்) ஆனார். [1]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

2020 ஆம் ஆண்டு சூன் மாதம் 30 தேதியில் சாந்தா தத்தாவிற்கு கொரோனா வைரசு நோய் சோதிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது. [3] iந்த நேரத்தில் நிமோனியா நோயாலும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்பட்டார். [4] பின்னர் குணமடைந்து சூலை முதல் வாரத்தில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "NICED : Scientist : Dr. Shanta Dutta". www.niced.org.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 June 2020.
  2. "Shanta Dutta profile". பார்க்கப்பட்ட நாள் 30 June 2020.
  3. "Niced director shanta dutta's COVID-19 tested positive" (in bn). Sangbad Pratidin. 30 June 2020. https://www.sangbadpratidin.in/kolkata/niced-director-shanta-duttas-covid-19-tested-positive/. 
  4. "করোনার সঙ্গে নিউমোনিয়ার হানা,বেসরকারি হাসপাতালে ভর্তি NICED অধিকর্তা শান্তা দত্ত" (in bn). Hindustan Times. 2 July 2020. https://bangla.hindustantimes.com/bengal/kolkata/niced-director-shanta-dutta-admitted-in-hospital-31593699110997.html. பார்த்த நாள்: 2 July 2020. 
  5. "করোনামুক্ত বেলেঘাটা NICED-এর ডিরেক্টর শান্তা দত্ত" (in bn). Hindustan Times. 9 July 2020. https://bangla.hindustantimes.com/bengal/kolkata/beleghata-niced-director-shanta-dutta-cured-from-covid-19-31594286372726.html. பார்த்த நாள்: 9 July 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாந்தா_தத்தா&oldid=3034822" இலிருந்து மீள்விக்கப்பட்டது