சாந்தனு தாக்கூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாந்தனு தாக்கூர்
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் இணை அமைச்சர்[1]
பதவியில் உள்ளார்
பதவியில்
8 சூலை 2021
பிரதமர்நரேந்திர மோதி
அமைச்சர்சர்பானந்த சோனாவால்
முன்னையவர்மன்சுக் எல். மாண்டவியா
மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
23 மே 2019
முன்னையவர்மம்தா தாக்கூர்
தொகுதிபாங்கான்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு3 ஆகத்து 1982 (1982-08-03) (அகவை 41)
தாக்கூர் நகர், வடக்கு 24 பர்கனா மாவட்டம், மேற்கு வங்காளம், இந்தியா
அரசியல் கட்சிபாஜக
துணைவர்
சோமா தாக்கூர் (தி. 2011)
பிள்ளைகள்2 மகன்கள்
வாழிடம்(s)தாக்கூர் நகர், வடக்கு 24 பர்கனா மாவட்டம், மேற்கு வங்காளம், 743287
முன்னாள் கல்லூரிவிக்டோரியா பல்கலைக்கழகம், கருநாடக மாநில திறந்தநிலைப் பல்கலைக்கழகம்
தொழில்அரசியல்வாதி, தர்மகர்த்தா-மாத்துவ மகாசங்கம்
As of 17 ஆகத்து 2019
மூலம்: [1]

சாந்தனு தாக்கூர் (Shantanu Thakur)(பிறப்பு 1982) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார்.[2] இவர் 2019ஆம் ஆண்டு முதல் பாங்கான் மக்களவை உறுப்பினராக உள்ளார்.[3][4][5] தாக்கூர் 7 சூலை 2021 அன்று மோதியின் அமைச்சரவை மறுசீரமைப்பிற்குப் பிறகு துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் இணை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

2019 பொதுத் தேர்தலில், தாக்கூர் பாஜகவின் வேட்பாளராக, பாங்கான் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[6] இத்தொகுதியில் வெற்றி பெற்ற முதல் பாஜக உறுப்பினர் இவராவார். இவர் வங்காள முன்னாள் அமைச்சர் மஞ்சுல் கிருஷ்ணா தாக்கூரின் மகன் ஆவார். இவர் அனைத்திந்திய மாத்துவ மகாசங்கத்தின் தலைவர் ஆவார்.[7][8][9][10]

மாநில அமைச்சர்[தொகு]

சூலை 7, 2021 அன்று நரேந்திர மோதியின் இரண்டாவது அமைச்சரவையின், அமைச்சரவை மாற்றத்தின் போது, இவருக்கு துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Cabinet Reshuffle: The full list of Modi's new ministers and what they got". தி எகனாமிக் டைம்ஸ். 8 July 2021. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/cabinet-reshuffle-meet-some-of-the-faces-from-pm-modis-new-team/articleshow/84203141.cms. பார்த்த நாள்: 8 July 2021. 
  2. "Indian parliament shantanu thakur". www.india.gov.in. பார்க்கப்பட்ட நாள் 6 July 2021.
  3. "Members : Lok Sabha". loksabhaph.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2020-06-04.
  4. "Modi Cabinet: Bengal BJP MPs Shantanu Thakur and Nishith can become authentic Union ministers, this will be beneficial". www.jagran.com. பார்க்கப்பட்ட நாள் 6 July 2021.
  5. "Bengal Polls: শাহের কাছে শান্তনুর ক্ষোভ". www.anandabazar.com. பார்க்கப்பட்ட நாள் 6 July 2021.
  6. "Bangaon Lok Sabha Election Results 2019 West Bengal: BJP's Shantanu Thakur ahead of TMC's Mamatabala Thakur", Daily News and Analysis, 23 May 2019
  7. "Matua Matriarch Binapani Devi's Grandson Demands Probe into Her Death".
  8. "Matuas and Shantanu Thakur are with BJP and CAA will happen,' says Kailash Vijayvargiya". www.thestatesman.com. 12 December 2020. பார்க்கப்பட்ட நாள் 6 July 2021.
  9. "মতুয়াদের নাগরিকত্ব পেতে বাধা দিচ্ছে TMC, সরব শান্তনু ঠাকুর". zeenews.india.com. 14 April 2021. பார்க்கப்பட்ட நாள் 6 July 2021.
  10. "MP Shantanu Takhur PM Modi's visit Orakandi". www.aninews.in. பார்க்கப்பட்ட நாள் 6 July 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாந்தனு_தாக்கூர்&oldid=3903923" இலிருந்து மீள்விக்கப்பட்டது