சாத்பிர் விலங்கியல் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாத்பிர் விலங்கியல் பூங்கா
மகேந்திர சவுத்ரி விலங்கியல் பூங்கா
Chhatbir Zoo, Chandigarh.jpeg
திறக்கப்பட்ட தேதி1977[1]
இடம்சாத்பிர் விலங்கியல் பூங்கா, சிராக்பூர், மொகாலி மாவட்டம், பஞ்சாப் இந்தியா
அமைவு30°36′13″N 76°47′34″E / 30.6036°N 76.7928°E / 30.6036; 76.7928ஆள்கூறுகள்: 30°36′13″N 76°47′34″E / 30.6036°N 76.7928°E / 30.6036; 76.7928
உறுப்பினர் திட்டம்CZA[2]
முக்கிய காட்சிகள்சபாரி சிங்கம்
சாத்பிர் விலங்கியல் பூங்கா நுழைவாயில்

சாத்பிர் விலங்கியல் பூங்கா (ChattBir Zoo) (முறையாக மகேந்திர சவுத்ரி விலங்கியல் பூங்கா) இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொகாலி மாவட்டத்தில் இருக்கும் சிராக்பூரில் அமைந்துள்ள ஒர் உயிரியல் பூங்காவாகும். பல்வேறு வகையான பறவைகள், பாலூட்டிகள் மற்றும் ஊர்வன வகை விலங்குகளுக்கு இப்பூங்கா ஓர் இருப்பிடமாக விளங்குகிறது. ஆப்பிரிக்க சிங்க வகையான சபாரி சிங்கம் இப்பூங்காவின் சிறப்பம்சம் ஆகும். எழுபதுகளில் ஆரம்பிக்கப்பட்ட இப்பூங்கா தற்சமயம் மிகவும் வளர்ச்சியடைந்த விலங்கியல் பூங்காவாக விளங்குகிறது. ராயல் பெங்கால் புலிகள், சாத்பிர் விலங்கியல் பூங்காவிற்கு மேலும் பெருமை சேர்க்கின்றன. ஆசிய சிங்கங்கள் பாதுகாப்பிடமான இப்பூங்காவிற்கு வருகை தருபவர்கள், கர்சனையுடன் விலங்குகள் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கும் சூழலில் சாகசப் பயணத்தை அனுபவிக்க முடியும். மேலும், வெவ்வேறு வகையான பறவை இனங்களையும் அவர்கள் இங்கே காணலாம். சாக்பிர் பூங்கா திங்கள் தவிர வாரம் முழுவதும் பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும்.

வங்காள வெள்ளைப்புலி
சிட்டால் மான்
அமாதிரையாசு பபூன்
பறக்கும் நரி
நரி

உலர்ந்த புதர்நிலங்கள் கொண்ட இப்பகுதி காட்டு விலங்குகளுக்கு ஏற்ற ஒரு சரியான தங்குமிடமாக எவ்வாறு மாறியது என்பதே ஒரு ஆச்சரியமான செய்தியாகும். சுற்றுச்சூழல் நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் ஓர் அழகான படம் அதன் அற்புதமான பின்னணியில் முரண்படுவது இல்லை. இங்குள்ள விலங்குகளும் நடத்தை மற்றும் உடலியல் தேவைகளை பொறுத்தவரையில் அவற்றிற்கான இயற்கையான சூழலிலேயே இருக்கின்றன.

அமைவிடம்[தொகு]

சண்டிகரில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில், சண்டிகர் – சிராக்பூர் – பாட்டியாலா சாலையில் சாத்பிர் விலங்கியல் பூங்கா அமைந்துள்ளது.

பூங்காவின் சிறப்பியல்புகள்[தொகு]

தனித்துவம் மிக்க ராயல் பெங்கால் புலிகளைப் பார்க்கவேண்டுமென்றால் அதற்குரிய ஒரே இடமாக சாத்பீர் விலங்கியல் பூங்கா திகழ்கிறது. இங்கு அடைக்கலம் புகுந்துள்ள இப்புலிகளை பார்வையாளர்கள் அவர்களின் இருசக்கர வாகனத்தில் சென்று மிக அருகாமையில் காணமுடியும். என்பது மிகவும் சிறப்பம்சமாகும். சண்டிகர் பூங்காவில் உடைமையாக உள்ள வண்ணமயமான ஊர்வன விலங்குகள், 80 வகை அரிய பறவைகள் மற்றும் விலங்குகள் வேறு எங்கும் காணக்கிடைக்காதவைகளாகும்.

சண்டிகர் பூங்காவின் அலுவலர்கள் கடினமான தங்களுடைய உழைப்பால் விலங்குகளின் இருப்பிடங்களை முடிந்தவரை அவற்றின் இயற்கை வாழ்விடங்களுக்கு நெருக்கமாக வைத்துக் கொள்ள வைத்துள்ளார்கள்., பெரிய குழுக்களாக விலங்குகள் வாழ்வதற்கு ஏற்ற சூழலில் பசுமை உணர்வு மிகுந்திருப்பதால் ஒரு தீவு போன்ற தோற்றத்தை இப்பூங்கா அளிக்கிறது.

சாத்பிர் விலங்கியல் பூங்காவில் நீர்நிலைகள், பெரிய பூங்காக்கள் மற்றும் பூங்காவைச் சுற்றிலும் காடுகள் சூழ்ந்து இருப்பதால் சுற்றுலாப் பயணீகளுக்கு ஏற்ற இடமாக இருக்கிறது. நாள் முழுவதும் இனிமையான காலநிலை நிலவுவதால் குளிர்காலத்தில் போக்குவரத்து நெரிசல் இங்கு மிகுதியாகிறது. பல்வேறு வகையான விலங்கினங்களைப் பற்றி ஆய்வு மேற்கொள்ள விலங்கியலாளர்கள் இப்பூங்காவிற்கு வருகை தருகின்றனர்.

பூங்காவிலுள்ள விலங்குகளின் பட்டியல்[தொகு]

அருகிவரும் இனமான கரியால் வகை முதலை உட்பட 85 வகையான இனங்களைச் சேர்ந்த சுமார் 950 விலங்குகள் மற்றும் பறவைகள் நூற்றுக்கு மேலான இருப்பிடங்களில் இங்கு காணப்படுகின்றன. பெரும்பாலான விலங்குகள் இவ்விடத்தில் பிறந்தனவாகவும் மற்ற பூங்காக்களில் இருந்து கொண்டு வரப்பட்டனவாகவும் உள்ளன,

பார்வை நாட்கள்[தொகு]

திங்கள் கிழமை தவிர வாரம் 6 நாட்கள் திறந்திருக்கும்.

  • நேரம்: 9.00 மு.ப- 5.00 பி.ப
  • குடியரசு நாள், சுதந்திர தினம் மற்றும் காந்தி பிறந்த நாள் விடுமுறை
  • சிற்றுண்டி, உணவு வசதிகள், உண்டு

அனுமதிக் கட்டணம்[தொகு]

  • 3 முதல் 12 வயது வரை ரூ20
  • 12 வயதுக்கு மேல் ரூ 50
  • சபாரி சிங்கம் நபர் ஒருவருக்கு ரூ50

சாத்பீர் விலங்கியல் பூங்கா வரைபடம்[தொகு]

குறிப்புரை[தொகு]

  1. "List of Zoos in India, from 1800 until now". kuchbhi.com. Kuchbhi. 21 அக்டோபர் 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 4 July 2011 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. "Search Establishment". cza.nic.in. CZA. 4 July 2011 அன்று பார்க்கப்பட்டது.

புற இணைப்புகள்[தொகு]