சாத்தான்குளம் இராகவன் பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
 இன்றைய தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் அருணாசலக் கவிராயர் ஆவுடையம்மாள் தம்பதிகளின் மகனாக 1902ஆம் ஆண்டு பிறந்தார். தமிழர்களின் பண்பாட்டு வரலாறு, கலை வரலாறு முதலிய துறைகளில் சிறந்த பங்களிப்பைத் தந்துள்ளார்.

இவர் எழுதிய நூல்கள்:- நம் நாட்டு கப்பற்கலை, தென்னிந்தியக் கோவில் கட்டடக் கலை, கோநகர் கொற்கை, ஆதிச்சநல்லூரும் பொருகை வெளிநாகரிகமும், தமிழ்நாட்டு சாவசக்கலை, திருவிளக்குகள், அணிகலன்கள் படைக்கலன்கள் முதலிய நூல்களை எழுதியுள்ளார்.

அரசியல் ஈடுபாடு:- சுய மரியாதை இயக்கத்தில் பெரியாரும் பொதுவுடைமை இயக்கத்தில் ஜீவாவுடனும் இணைந்து பணியாற்றிய இராகவன்பிள்ளை பிற்காலத்தில் அரசியலிலிருந்து விலகி முழுமையாக கலைநூற்கள் எழுதுவதில் ஈடுபட்டார்.

மேற்கோள் :- நெல்லைத் தமிழ்ச் சான்றோர்கள், ஆசிரியர் இரா.நல்லையா ராஜ், காவ்யா வெளியீடு, சென்னை முதற்பதிப்பு 2011.