சாத்தானிய இயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாத்தானியவாதிகளின் பெண்டகிராம் சின்னம்

சாத்தானிய இயக்கம் என்பது சாத்தானை அடிப்படையாகக் கொண்ட கருத்தியல் மற்றும் தத்துவ நம்பிக்கைகளின் குழுவாகும். இந்த கருத்துருவுக்கு பல வரலாற்று முன்னுதாரணங்கள் இருந்தாலும், 1966ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவில் அன்டன் லாவே என்பவரால் சாத்தானின் திருச்சபை நிறுவியதிலிருந்து சாத்தானியத்தின் சமகால மத நடைமுறை தொடங்கியது. அதற்கு முன் சாத்தானியம், முதன்மையாக பல்வேறு கிறிஸ்தவ குழுக்களின் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியது. சாத்தானியம் மற்றும் சாத்தானின் கருத்து, கலைஞர்கள் மற்றும் பொழுதுபோக்கு கலைஞர்களால் குறியீட்டு வெளிப்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்டது.

பல்வேறு குழுக்கள் சாத்தான் வழிபாடு (பிசாசு வழிபாடு) நடைமுறைப்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டுகள் கிறிஸ்தவ வரலாற்றின் பெரும்பகுதி முழுவதும் இருந்தது. இடைக்காலத்தில் கத்தோலிக்க திருச்சபையின் தலைமையிலான சமயக் குற்ற விசாரணைக்குழுக்கள், இரகசிய சாத்தானியச் சடங்குகளை செய்ததாக பலர் மீது குற்றம் சாட்டியது. ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா பகுதிகளில் சாத்தான் மீது நம்பிக்கைக் கொண்ட சூனியக்காரர்கள் மீது வெகுஜன சோதனைகளை நடத்தியது. விடுதலைக் கட்டுநர்கள் சடங்குகளில் சாத்தான், லூசிபர் ஆகியோரை வணங்குவதாகக் கூறியது. 1980கள் மற்றும் 1990களில் சாத்தானியக் குழுக்கள் தங்கள் சடங்குகளில் குழந்தைகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்து கொலை செய்கின்றன என்ற அச்சத்தின் மத்தியில், சாத்தானிய சடங்குகள் மீதான வெறி வட அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் முழுவதும் பரவியது. இந்த வழக்குகளில் பெரும்பாலானவற்றில், சாத்தானியவாதிகள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களில் எவரும் சாத்தானிய மதத்தை பின்பற்றுபவர்கள் அல்லது அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகள் என்பதற்கு உறுதிப்படுத்தும் ஆதாரம் எதுவும் இல்லை.

19ஆம் நூற்றாண்டிலிருந்து பல்வேறு சிறிய மதக் குழுக்கள் தோன்றியது. அவைகள் சாத்தானின் உருவப்படத்தைப் பயன்படுத்துகிறது. 1960களுக்குப் பிறகு தோன்றிய சாத்தானியக் குழுக்கள் மிகவும் வேறுபட்டவை. ஆனால் அவை இறையியல் சாத்தானியம் மற்றும் நாத்திக சாத்தானியம் என இரண்டு பிரிவாக செயல்பட்டது.[1] சாத்தானை ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட தெய்வமாக வணங்குபவர்கள் அவரை சர்வ வல்லமையுள்ளவராகக் கருதவில்லை. மாறாக ஒரு பிதாமகனாகக் கருதினர். நாத்திக சாத்தானியவாதிகள், சாத்தானை சில மனித குணாதிசயங்களின் அடையாளமாக கருதுகின்றனர்.[2] 2012இல் சாத்தான் கோயில் நிறுவப்பட்டதிலிருந்து, உலகம் முழுவதும் நூறாயிரக்கணக்கான இறை நம்பிக்கையற்ற உறுப்பினர்களை ஈர்த்தது.[3]

சாத்தானியம் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பா பகுதிகளில் வேகமாக பரவத் தொடங்கியது. முக்கியமாக போலந்து மற்றும் லிதுவேனியா மற்றும் பெரும்பான்மையாக உரோமைக் கத்தோலிக்கம் பின்பற்றும் ஐரோப்பிய நாடுகளில் 1990களில் சாத்தானியம் வேகமாக பரவியது. [4][5]

வரையறை[தொகு]

புனித வுல்ப்காங் மற்றும் சாத்தான்

சாத்தானியம் என்ற சொல் தாங்கள் விரும்பாதவர்களுக்கு எதிராக மக்களால் பயன்படுத்தப்பட்ட ஒரு வரலாற்றைக் கொண்டுள்ளது; இது 'மற்றவர்களுக்கு' பயன்படுத்தப்படும் சொல்" என்று பீட்டர்சன் கூறுகிறார்.[6] சாத்தானியத்தின் கருத்து கிறித்தவத்தின் ஒரு கண்டுபிடிப்பாகும். ஏனெனில் இது சாத்தனை நம்பியிருக்கிறது. இது கிறிஸ்தவ இலக்கியங்களிலிருந்து பெறப்பட்ட ஒரு தொன்மவியல் பாத்திரமாகும்.[7]

1994ஆம் ஆண்டில், இத்தாலிய சமூகவியலாளர் மாசிமோ இன்ட்ரோவிக்னே, சாத்தான் அல்லது லூசிபர் என்ற பெயருடன் அடையாளம் காணப்பட்ட பாத்திரத்தின் வழிபாடு ஆகும் என வரையறுத்தார்.

வரலாறு[தொகு]

சரித்திர மற்றும் மானுடவியல் ஆராய்ச்சிகள், கிட்டத்தட்ட அனைத்து சமூகங்களும், சமூகத்திற்குள் தன்னை மறைத்துக் கொள்ளக்கூடிய ஒரு கெட்ட மற்றும் மனித-விரோத சக்தியின் கருத்தை உருவாக்கியுள்ளது என்று கூறுகிறது.[8] இது பொதுவாக சூனியக்காரர்கள் மீதான நம்பிக்கையை உள்ளடக்கியது. அவர்கள் சமூகத்தின் விதிமுறைகளை மாற்றியமைத்து, தங்கள் சமூகத்திற்கு தீங்கு விளைவிக்க முற்படும் தனிநபர்களின் ஒரு குழு ஆகும். உதாரணமாக ஊடாடுதல், கொலை மற்றும் நரபலி இடுதல், நர மாமிசம் உண்ணுதல் போன்ற செயல்களில் ஈடுபவர்.[9] சூனியம் பற்றிய குற்றச்சாட்டுகள் வெவ்வேறு காரணங்களைக் கொண்டிருக்கலாம் மற்றும் ஒரு சமூகத்தில் வெவ்வேறு செயல்பாடுகளைச் செய்யலாம். அவை சமூக நெறிமுறைகளை நிலைநிறுத்தவும்,[23] தனிநபர்களுக்கிடையே நிலவும் மோதல்களில் பதற்றத்தை அதிகரிக்கவும் அல்லது பல்வேறு சமூகப் பிரச்சனைகளுக்காக சில நபர்களை பலிகடா ஆக்கவும் உதவலாம்.

சாத்தானியத்தின் கருத்துக்கு மற்றொரு பங்களிக்கும் காரணி என்னவென்றால், துரதிர்ஷ்டம் மற்றும் தீமையின் ஒரு முகவர் அண்ட அளவில் செயல்படுகிறார், பாரசீக மதமான ஜோராஸ்ட்டிரிய சமயக் கடவுள் அகுரா மஸ்தாவிற்கு எதிராகத் தோன்றிய தீயசக்தியே [10][11] சாத்தான் எனும் கருத்து யூதம் மற்றும் ஆரம்பகால கிறிஸ்தவம் ஆகியவற்றால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும் இது விரைவில் யூத சிந்தனையில் ஓரங்கட்டப்பட்டாலும், அண்டம் பற்றிய ஆரம்பகால கிறிஸ்தவ புரிதல்களுக்குள் இது அதிக முக்கியத்துவம் பெற்றது.[27] பிசாசு பற்றிய ஆரம்பகால கிறிஸ்தவ யோசனை நன்கு வளர்ச்சியடையவில்லை என்றாலும், அது நாட்டுப்புறக் கதைகள், கலை, இறையியல் ஆய்வுகள் மற்றும் அறநெறிக் கதைகள் ஆகியவற்றின் மூலம் படிப்படியாகத் தழுவி சாத்தானிய வாதம் விரிவடைந்தது.

சாத்தானின் கோயில்[தொகு]

சாத்தானியத்தின் தந்தை என குறிப்பிடப்படும் அன்டன் லாவே 1966இல் சாத்தானின் திருச்சபையை நிறுவியதன் மூலமும், 1969இல் சாத்தானிய நூல்[12] வெளியிட்டதன் மூலமும் தனது சாத்தானிய சமயத்தை ஒருங்கிணைத்தார். சாத்தானிய சமய நிறுவனர் அன்டன் லாவியின் போதனைகள் கீழ்வருமாறு: "இன்பம்", " முக்கிய இருப்பு", "மாசற்ற ஞானம்", "தகுந்தவர்களிடம் கருணை", "பொறுப்புக்கு பொறுப்பு", மற்றும் "கண்ணுக்குக் கண்" நெறிமுறைகள், குற்ற உணர்வு, "ஆன்மீகம்" ஆகியவற்றின் அடிப்படையிலான "மதுவிலக்கை" தவிர்த்து, "நிபந்தனையற்ற அன்பு", "அமைதிவாதம்", "சமத்துவம்", "மந்தை மனப்பான்மை" மற்றும் "பலியிடுதல்" ஒரு சாத்தானியவாதியை ஒரு உடல் மற்றும் நடைமுறைக்குரிய உயிரினமாகக் கருதினார்.

சாத்தானின் சின்னம்

அவர் ஒரு தனிநபரின் பெருமை, சுயமரியாதை மற்றும் சுய-உணர்தல் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக மனித அகங்காரத்தைப் பாராட்டினார். மேலும் அதற்கேற்ப மனித ஆசைகளை திருப்திப்படுத்துவதில் நம்பினார்..[13] Satan is thus used as a symbol representing "the eternal rebel" against arbitrary authority and social norms.[14][15][110] சுய-இன்பம் விரும்பத்தக்க பண்பு, மற்றும் வெறுப்பு மற்றும் ஆக்கிரமிப்பு ஆகியவை தவறான அல்லது விரும்பத்தகாத உணர்ச்சிகள் அல்ல, ஆனால் அவை உயிர்வாழ்வதற்கு அவசியமானவை மற்றும் சாதகமானவை என்று அவர் கூறினார். அதன்படி, அவர் ஏழு கொடிய பாவங்களை தனிநபருக்கு நன்மை பயக்கும் குணங்கள் என்று புகழ்ந்தார்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாத்தானிய_இயக்கம்&oldid=3777395" இருந்து மீள்விக்கப்பட்டது