சாத்தானின் திருச்சபை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாத்தானின் திருச்சபை
[[Image:
Baphosimb.svg
|200px|]]
சாத்தான் சபைச் சின்னம்[1]
வகைப்பாடு நாத்திகவாதம
இறையியல் சாத்தானியம்
இறையியல் சூழலியவாதம்
ஆட்சிமுறை மத குரு
கட்டமைப்பு Cabal
சங்கங்கள் Non-ecumenical
புவியியல் பிரதேசம் பன்னாட்டு அளவில்
நிறுவனர் அன்டன் லாவே
ஆரம்பம் 30 ஏப்ரல் 1966
கருப்பு நிற கட்டிடம், சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா
பிரிவுகள் சேத் கோயில் (1975), முதல் சாத்தான் திருச்சபை (1999)
உறுப்பினர்கள் வெளியிடப்படவில்லை
வேறு பெயர்(கள்) சாத்தானின் திருச்சபை
அதிகாரப்பூர்வ இணையத்தளம் www.churchofsatan.com

சாத்தானின் திருச்சபை என்பது ஒரு மதக் குழுவாகும். இச்சபையினர் மக்கள் தங்கள் மனித இயல்பை ஏற்றுக் கொள்ளவும், அவர்களின் தன்முனைப்பு எனும் அகந்தையை உருவாக்கவும் ஊக்குவிக்கிறது, இச்சபையினரின் நூலான சாத்தானிய பைபிள், 30 ஏப்ரல் 1966 அன்று நிறுவப்பட்ட இச்சபையின் அதிகாரப் பூர்வ நூலை, அன்டன் லாவே என்பவர் எழுதினார். இத்திருச்சபையினர் சாத்தானை வணங்குவதில்லை அல்லது நம்புவதில்லை, மேலும் அவர்கள் கடவுளின் இருப்பையும் நம்புவதில்லை. இச்சபையினர் மொழியில் சாத்தான் என்பது விடுதலை மற்றும் அகந்தையின் சின்னமாகும்.

வரலாறு[தொகு]


முதன்முதலில் சாத்தானின் திருச்சபை, ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத் தலைநகரமான சான் பிரான்சிஸ்கோவில் 30 ஏப்ரல் 1966 அன்று, இந்த எதிர் கலாச்சாரக் குழுவானது அன்டன் லாவே (1930-1997) என்பவரால் துவக்கப்பட்டது.. அதன் பெயருக்கு மாறாக, இந்த திருச்சபை "தீமையை" ஊக்குவிக்கவில்லை, மாறாக மனிதநேய விழுமியங்களை ஊக்குவித்தது. இந்த சாத்தான் திருச்சபையின் முதல் தலைமைக் குரு அன்டன் லாவே ஆவார்.[2]இந்த சாத்தான் திருச்சபையினர் 1966 மற்றும் 1970களில் தங்களுக்கென பல நூல்களையும், இதழ்களையும், கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளனர். இத்திருச்சபையினர் 1970-ஆம் ஆண்டில் சாத்தானியர்கள் எனும் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டனர்.[3]

இச்சபையின் தலைமைப் பூசாரி பீட்டர் எச். கில்மோரின் கூற்றுப்படி, சாத்தானியம் நாத்திகத்துடன் தொடங்குகிறது. நாம் பிரபஞ்சத்தில் அலட்சியமாக செயல்படுகிறோம். கடவுள் இல்லை, பிசாசு இல்லை. யாரும் கவலைப்படுவதில்லை![4]

இச்சபையினர் சாத்தானை கிறிஸ்தவ தீமையின் உருவகமாகவோ அல்லது இருக்கும் ஒரு மனிதனாகவோ வணங்கவில்லை. அதற்கு பதிலாக, "அவரது நரக மாட்சிமை" என்பது சுய உறுதிப்பாடு, அநியாய அதிகாரத்திற்கு எதிரான கிளர்ச்சி, முக்கிய இருப்பு மற்றும் "வரையறுக்கப்படாத ஞானம்" போன்ற மனிதநேய மதிப்பீடுகளின் அடையாளமாகும் என்று அன்டன் லாவே கற்பித்தார். [5]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Gilmore, Magus Peter H. "F.A.Q. Symbols and Symbolism". Church of Satan. 7 January 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 4 April 2017 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Official Church of Satan Website". 2012-07-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-04-23 அன்று பார்க்கப்பட்டது.
  3. Interview with Peter H. Gilmore, David Shankbone, Wikinews', November 5, 2007.
  4. Interview with Peter H. Gilmore, David Shankbone, Wikinews', November 5, 2007.
  5. Church of Satan

வெளி இணைப்புகள்[தொகு]