சாத்தாத ஸ்ரீ வைஷ்ணவ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாத்தாத ஸ்ரீவைஷ்ணவ என்பது தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரு சாதியாகும். இம்மக்களை இராமானுசர் பூணூல் சாத்தாதா வைணவர்களாக மாற்றினார். எனவே இம்மக்களை சாத்தாத ஸ்ரீவைஷ்ணவர்கள் என்று அழைக்கப்பட்டனர். இம்மக்கள் வடதமிழ்நாட்டின் பழைய தென் ஆற்காடு மாவட்டம் மற்றும் வட ஆற்காடு மாவட்டங்களிலும், திருநெல்வேலி மற்றும் தூத்துகுடி மாவட்டங்களிலும் அதிகம் உள்ளனர். இச்சாதியினர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி பேசுபவர்களாக உள்ளனர். (சில பிரிவினர் தெலுங்கு சோழர்கள் காலத்திலும் , சில பிரிவினர் நாயக்கர் காலத்திலும் திருமால் பூஜை செய்வதற்காக கட்டாய குடியேற்றம் செய்யப்பட்டனர்)

இச்சாதியின் உட்பிரிவுகளாக சதானி, திரு வைணவர் ,சாத்தாத ஶ்ரீ வைஷ்ணவா, வீரவைணவர் சட்டாடி மற்றும் சாத்தாத வைஷ்ணவர் என்பவை உள்ளன.

கோயில் பணிகள்[தொகு]

இந்து சமயத்தின் வைணவப் பிரிவில் ஆழ்வார்களால் பாடப்பெற்றத் திருத்தலங்களில் இருந்து வந்தனர். இவர்களது குலத்தொழில் கோயில்களில் குற்றேவல் பணிகளைச் செய்வது ஆகும். அதாவது ஆழ்வாரகள் அருளிச்செய்த நாலாயிர திவ்யபந்தம் ஓதுதல் , மாலை கட்டுதல், கோயிலைச் சுத்தம் செய்தல், சுவாமி புறப்பாட்டின் போது அறிவிப்பு செய்தல், அரையர் சேவை உடனிருந்து மரியாதை செய்தல், கோயில் பிரசாதப் பொருளை விற்றுக் கணக்கு வைத்தல், சந்தனம் அரைத்துக் கொடுத்தல் போன்ற பணிகளைச் செய்தல்.

சிறப்புகள்[தொகு]

சாத்தாத ஸ்ரீ வைஷ்ணவ சமுதாயத்தினருக்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் கீழ்காணும் நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.[1]

  1. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் விழாவின் இரண்டாம் நாள் சாத்தாத ஸ்ரீ வைஷ்ணவ மண்டபத்தில் ஆண்டாள் எழுந்தருளல் விழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது.
  2. மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கிய பின்பு சாத்தாத ஸ்ரீ வைஷ்ணவ மண்டபத்தில் சுவாமி எழுந்தருளல் விழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது.
  3. ஆழ்வார்திருநகரியில் நம்மாழ்வார் அவதார நிகழ்வில், ஐந்தாம் நாள் நிகழ்வில் தகுதியாராதனை சிறப்பாக நடத்தப் பெறுகிறது.
  4. திருவரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி அன்றும், மறுநாள் துவாதசி அன்றும் சாத்தாத ஸ்ரீ வைஷ்ணவ மண்டபத்தில் தகுதியாராதனை ஆண்டுதோறும் நடைபெறுகிறது.
  5. திருப்பெரும்புதூர் ஸ்ரீ ராமானுஜர் விழாவில் ஐந்தாம் நாள் நிகழ்வு மண்டகப்படி மற்றும் தகுதியாராதனை ஆண்டுதோறும் நடைபெறுகிறது.

திரையுலகப் பங்களிப்புகள்[தொகு]

  • எம்.என்.ராஜம், தமிழ்த் திரைப்பட நடிகை
  • சின்னி ஜெயந்த், தமிழ்த் திரைப்பட நடிகர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. [சாத்தாத ஸ்ரீ வைஷ்ணவ சங்கம் செய்தி மடல் (மடல்1, டிசம்பர் 2011) பக்கம் 7]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாத்தாத_ஸ்ரீ_வைஷ்ணவ&oldid=3709948" இலிருந்து மீள்விக்கப்பட்டது