சாதிவாரி நிலக்கிழாரிய படைகள் (பீகார்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாதிவாரி நிலக்கிழாரிய படைகளின் ஆதிக்கம் நிறைந்த பீகாரிய மாவட்டங்கள் சிகப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளன.

பீகாரிய சாதிவாரி நிலக்கிழாரிய படைகள் எனப்படுபவை 1970களின் இறுதியில் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் சாதிக்கொன்றாக அமைத்துக்கொள்ளப்பட்ட தனியார் நிலக்கிழாரிய படைகளைக் குறிக்கும். பெரும் நிலக்கிழார்களைக் கொண்ட பிராமண மற்றும் ஆதிக்க சாதி மக்களால் இந்த படைகள் தோற்றுவிக்கப்பட்டன. அந்தக் காலக்கட்டத்தில் பீகாரிய உழைக்கும் மக்களிடத்தில் அதிக செல்வாக்கை பெற்றிருந்த பொதுவுடமைவாதிகள் மற்றும் தாழ்த்தப்பட்ட விவசாயக்கூலிகளுக்கு எதிராக இந்த படைகள் செயல்பட்டன[1][2].

வரலாறு[தொகு]

1962ல் ஏற்பட்ட இந்திய சீனப் போரை தொடர்ந்து இந்திய பொதுவுடமைக் கட்சி இரண்டாக பிரிந்தது. இது மார்க்சிய லெனினிய இயக்கங்களின் தோற்றத்திற்கு அடிகோலாக அமைந்தது. ஆயுதம் தாங்கிய இந்த புரட்சிக் குழுக்கள் முதலில் மேற்கு வங்கத்தை அடிப்படையாக கொண்டு செயல்படத் தொடங்கின. பின்னர் 1970களின் ஆரம்பத்தில் இவை பீகார் மாநிலத்திலும் தனது ஆதிக்கத்தைப் பரவலாக்கின. அடித்தட்டு மக்களின் சார்பாக இயங்கிய இந்த அமைப்புகள், பெரும் நிலக்கிழார்களிடமிருந்த நிலங்களைப் பிடுங்கி ஏழை மக்களுக்கு பகிர்ந்தளித்தன. இது பெரும் நிலங்களைச் சொந்தமாகக் கொண்ட பிராமண மற்றும் ஆதிக்க சாதி மக்களுக்கு பெரும் நட்டத்தைத் தோற்றுவித்தது. மேலும் அதிக அளவிலான தாழ்த்தப்பட்ட மக்கள் இவ்வகையான புரட்சி இயக்கங்களில் சேர்வதும், அவற்றின் பலம் பெருகுவதும் தங்களின் நலனுக்கு எதிரானதாக இம்மக்களால் பார்க்கப்பட்டது.

எனவே இந்த இயக்கங்களை எதிர்க்கும் வகையில் தங்களுக்கான தனியார் படையணியை இம்மக்கள் அமைத்துக்கொண்டனர். இது ஒவ்வொரு சாதியிலும் ஒவ்வொரு பிராந்தியத்திலும் இருக்கும் நிலக்கிழார்களின் கூட்டுப் படையணியாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. 1979ல் இராசபுத்திரர்களால் அமைக்கப்பட்ட கவுர் சேனா இந்த வகையான நிலக்கிழாரிய படைகளில் முதன்முறையாக அமைக்கப்பட்டது ஆகும். 1994ல் ஒருங்கிணைக்கப்பெற்ற ரன்வீர் சேனா இப்படைகளுள் மிகப்பெரியதும், நன்கு கட்டமைக்கப்பட்டதும் ஆகும்[3].

படைகளின் அட்டவணை[தொகு]

சாதிவாரி நிலக்கிழாரிய படைகளின் அட்டவணை[4]
பெயர் தொடங்கப்பட்ட ஆண்டு சாதி செயல்பாட்டிலுள்ள மாவட்டங்கள்
கவுர் சேனா 1979 இராசபுத்திரர்கள் போஜ்பூர்
கிசான் சுரக்சா சமிதி 1979 குர்மி பாட்னா, செகனாபாத், கயா
பூமி சேனா 1983 குர்மி பாட்னா, நவாடா, நாலந்தா, செகனாபாத்
லோரிக் சேனா 1983 யாதவ் பாட்னா, செகனாபாத், நாலந்தா
கிசான் சங் 1984 இராசபுத்திரர்கள், பிராமணர் பலமு, அவுரங்காபாத்
சன்லைட் சேனா 1989 பதான், இராசபுத்திரர்கள் பலமு, கார்வா, அவுரங்காபாத், கயா
சுவர்னா லிபரேசன் பிரண்ட் 1990 பூமிகார் கயா, செகனாபாத்
கிசான் மோச்சா 1989-90 இராசபுத்திரர்கள் போஜ்பூர்
கங்கா சேனா 1990 இராசபுத்திரர்கள் போஜ்பூர்
ரன்வீர் சேனா 1994 பூமிகார் போஜ்பூர், பாட்னா, செகனாபாத், ரோதசு, அவுரங்காபாத், கயா
கரம் சுரக்சா பரிசத் 1995 - போஜ்பூர்
மசுதூர் கிசான் சங் 1996 - பெத்தியா

இதையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.dinamalar.com/News_detail.asp?Id=478270
  2. http://satp.org/satporgtp/countries/india/terroristoutfits/Ranvir_Sena.htm
  3. http://satp.org/satporgtp/countries/india/terroristoutfits/Ranvir_Sena.htm
  4. http://indiatoday.intoday.in/story/brahmeshwar-singh-took-up-gun-to-avenge-a-failed-plea-for-a-light/1/144199.html

இது தவறான பதிவு அல்ல மிக மிக சரியானது