சாதியா பாம்பு தூண்
| எழுத்து | மொழி: தாய், எழுத்து: அகோம் வடிவம் |
|---|---|
| உருவாக்கம் | 1532[1] |
| கண்டுபிடிப்பு | சாதியா திபாங் மற்றும் தியோபானி ஆறுகள் |
| தற்போதைய இடம் | அசாம் மாநில அருங்காட்சியகம் |
சாதியா பாம்பு தூண் (Sadiya Serpent Pillar) இந்தியாவின் அசாமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சாதியா பகுதியில் அமைக்கப்பட்ட ஒரு பழமையான எண்கோண கல் தூண் ஆகும். இது அகோம் எழுத்துகளின் ஆரம்ப உதாரணத்தைக் கொண்டுள்ளது. மேலும், தூணில் கி.பி.1532 எனவும் ஆண்டு பொறிக்கப்பட்டுள்ளது.
விளக்கம்
[தொகு]அசாம் கெஜட்டியரின் (1928) கூற்றுப்படி, திபாங் மற்றும் தியோபானி ஆறுகளுக்கு இடையில், சாதியாவிலிருந்து நிஜாம் காட் செல்லும் சாலையின் கிழக்குப் பகுதியில் இந்த தூண் கண்டுபிடிக்கப்பட்டது. தூணிற்கு அருகில் ஒரு கல் பாலம் இருந்தது. மேலும் இந்த பாலத்திலிருந்து அருகிலுள்ள செங்கற்களாலான குளத்திற்குச் செல்லும் சாலையும் இருந்தது.[2][3] பிரித்தானிய ஆய்வாளர் எஸ். எஃப். அன்னே இதே பிராந்தியத்தில் (திபாங் மற்றும் தியோபானி ஆறுகளுக்கு இடையில்) ஒரு செங்கல் நுழைவாயில், கல் பாலம் மற்றும் ஒரு செங்கல் குளம் ஆகியவற்றைக் கண்டுபிடித்தார். ஆனால் உயரமான கோபுரங்களால் வலுவூட்டப்பட்டிருந்தது.[4]
இந்தக் கல் தூணில் 1532 ஆம் ஆண்டு தேதியிட்ட அகோம் கல்வெட்டு ஒன்று உள்ளது.[5][6] இந்த கல்வெட்டு சுகுங்முங் திகிங்கியா என்பவனின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்தது. சாதியாவின் அகோம் ஆட்சியாளர் 1523இல் அங்கிருந்த உள்ளூர் மிஷ்மி பழங்குடியினரை பணியவைத்து செய்து கொண்ட ஒரு ஒப்பந்தத்தின் விதிமுறைகள் பதினொரு அடி உயர கல் தூணில் பொறிக்கப்பட்டுள்ளன். இது ஒரு பெரிய பாம்பின் வடிவமைப்பில் கீழேயிருந்து மேலே வரை சுற்றி வளைந்து செல்லும் வகையில் கட்டப்பட்டது.[7] தூணில் 9 மற்றும் ஒன்றரை வரிகளைக் கொண்ட கல்வெட்டு பிராசென்முங் போர்கோகைன் (சாதியா அகோம் ஆட்சியாளார்) வெளியிட்ட ஒரு பிரகடனமாகும். இது மிஷ்மிகள் வருடாந்திர கப்பம் செலுத்தவும், திபாங் ஆற்றின் ஒரு பக்கத்தில் வசிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.[8]
இந்த பாம்புத் தூண் சாதியாவிலுள்ள தாம்ரேசுவரி கோவிலில் காணப்படும் எண்கோண வடிவிலான பாம்புத் தூண்களை ஒத்ததாக இருக்கிறது.[9] இது 1953 ஆம் ஆண்டில் அதன் அசல் இடத்திலிருந்து அகற்றப்பட்டு அசாம் மாநில அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது.[10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The famous Snake Pillar of Sadiya, dated 1532 AD, erected as a mark of truce between the Ahoms and the Mishmis"(Das 1980, ப. 53)
- ↑ (C. Allen 1928, ப. 18)
- ↑ (Sen 1978, ப. 94)
- ↑ (Prinsep 1838, ப. 676)
- ↑ "The earliest examples of Ahom script are from the sixteenth century: on the Sadiya Snake Pillar (at the Assam State Museum, Guwahati), a lithic inscription most probably made some time after 1524 CE when the area came under Ahom control"(Wharton 2019, ப. 8)
- ↑ (Nath 1948, ப. 20)
- ↑ (Bhattacharya 1977, ப. 142)
- ↑ (Phukan 1997, ப. 7)
- ↑ (C. Allen 1928, ப. 94)
- ↑ (Phukan 1997, ப. 107)
நூல் ஆதாரங்கள்
[தொகு]- Sen, Pada Sen (1978). Sources of the History of India: Assam. Sikkim. Tamilnadu.
- Bhattacharya, Asutosh (1977). The Sun and the Serpent Lore of Bengal. Firma KLM.
- Nath, Rajmohan (1948). The Back Ground Of Assamese Culture.
- Das, Jogesh (1980). Folklore of Assam. National Book Trust.
- C. Allen, B (1928). Assam district gazetteers. Vol. XI. Baptist Mission Press.
- Phukan, J.N. (1997), Studies in some aspects of inscriptions of the Ahom kings, Gauhati University
- Prinsep, F.R.S James (1838) (in en). Journal of the Asiatic Society of Bengal. 7. Asiatic Society (Calcutta, India). https://books.google.com/books?id=gjczAQAAMAAJ&q=Journal+of+the+asiatic+7.
- Wharton, David (2019). Historical Evidence for the Early Lik Tai Scripts.