உள்ளடக்கத்துக்குச் செல்

சாதியா டேனிஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாதியா டேனிஷ்
கில்கிட்-பால்டிஸ்தான் சட்டமன்றத்தின் துணை சபாநாயர்
பதவியில் உள்ளார்
பதவியில்
17 ஜூலை 2023
முன்னையவர்நசீர் அகமது
கில்கிட்-பால்டிஸ்தான் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
25 நவம்பர் 2020
தொகுதிபெண்களுக்கானத் தொகுதி
பதவியில்
2009–2014
தொகுதிபெண்களுக்கானத் தொகுதி
தகவல் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர்
பதவியில்
2009–2014
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்பாக்கித்தானியர்
அரசியல் கட்சிபாக்கித்தான் மக்கள் கட்சி

சாதியா டேனிஷ் (Sadia Danish) ஓர் பாக்கித்தானிய அரசியல்வாதி ஆவார். பாக்கித்தான் மக்கள் கட்சிப் பதவிகளில் பணியாற்றிய பிறகு, இவர் 2009 இல் கில்கிட்-பால்டிஸ்தான் சட்டமன்றத்தில் பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட தொகுதி ஒன்றில் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், தகவல் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சராகவும் பணியாற்றினார். 2023 ஆம் ஆண்டில், கில்கிட்-பால்டிஸ்தான் சட்டமன்றத்தின் துணை சபாநாயகராகவும் இவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் இவர்தான்.

வாழ்க்கை வரலாறு

[தொகு]

சாதியா டேனிஷ் கில்கித்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.[1] பாக்கித்தான் மக்கள் கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்து பின்னர் கட்சியின் தகவல் செயலாளராகவும், பெண்கள் பிரிவின் மாகாணத் தலைவராகவும் பணியாற்றினார்.[2][3] 2009 கில்கிட்-பால்டிஸ்தான் சட்டமன்றத் தேர்தலில், பிரச்சாரத்தின் தலைவராக இருந்தார்.[4]

2009 ஆம் ஆண்டில் முதல் கில்கிட்-பால்டிஸ்தான் சட்டமன்றத்தில் ஒதுக்கப்பட்ட பெண்கள் இருக்கை உறுப்பினராக பாக்கித்தான் மக்கள் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார், 2014 வரை இப்பதவியில் இருந்தார்.[1][5] சட்டமன்ற உறுப்பினராக தனது முதல் பதவிக்காலத்தில், சாதியா 2009 முதல் 2014 வரை கில்கிட்-பால்டிஸ்தானின் தகவல் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சராகப் பணியாற்றினார்.[1] 2013 ஆம் ஆண்டில் பெண்களின் நிலை குறித்த தேசிய ஆணையத்தின் உறுப்பினரானார்.[2][3] பின்னர், 2020 இல் கில்கிட்-பால்டிஸ்தான் சட்டமன்றத்திற்குத் திரும்பினார்.[1]

எதிர்க்கட்சி உட்பட இவரைத் தவிர வேறு எவரும் இப்பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை என்பதால் ஜூலை 17,2023 அன்று, சபாநாயகர் நசீர் அகமது, சட்டமன்றத்தின் துணை சபாநாயகராக சாதியா டேனிஷ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்தார்.[1][6] இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் இவர்தான், பாக்கித்தானிய இதழான தி நேஷன் இதை ஒரு “குறிப்பிடத்தக்க மாற்றம் ” என்று எழுதியது.[1][2] துணை சபாநாயகராக பதவியேற்ற பிறகு, மாகாணத்தில் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மீது கவனம் செலுத்துவதற்கான தனது விருப்பத்தை சாதியா அறிவித்தார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 3 4 5 6 7 Nagri, Jamil (2023-07-18). "Sadia Danish becomes GB’s first woman deputy speaker" (in en). Dawn. https://www.dawn.com/news/1765392.
  2. 1 2 3 "Sadia Danish becomes GB's first woman deputy speaker" (in en-US). The Nation (Pakistan). 2023-07-18. https://www.nation.com.pk/18-Jul-2023/sadia-danish-becomes-gb-s-first-woman-deputy-speaker.
  3. 1 2 Annual Report 2013 (PDF) (Report). National Commission on the Status of Women. 2013. p. X. Retrieved 2023-11-07.
  4. Annual Report 2013 (PDF) (Report). National Commission on the Status of Women. 2013. p. X. Retrieved 2023-11-07.
  5. Khan, Zulfiqar Ali (2009-12-08). "EC notifies technocrats and women legislators of GBLA". Pamir Times. https://pamirtimes.net/2009/12/08/ec-notifies-technocrats-and-women-legislators-of-gbla/.
  6. "Sadia Danish elected GB Assembly's first woman deputy speaker" (in en). Dunya News. 2023-07-18. https://dunyanews.tv/en/Pakistan/740251-Sadia-Danish-elected-GB-Assembly/'s-first-woman-Deputy-Speaker-.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாதியா_டேனிஷ்&oldid=4500084" இலிருந்து மீள்விக்கப்பட்டது