சாதிநூல்
Appearance
சாதிநூல் என்னும் நூலைக் கமலை ஞானப்பிரகாசர் எழுதினார். [1] இந்நூல் சாதிகள் குறித்துப் பேசுகிறது. இதன் காலம் 16-ஆம் நூற்றாண்டு.
அது வடமொழியிலுள்ள ஆகம புராண இதிகாசங்களைப் பின்பற்றி எழுதப்பட்டது. இதனை எழுதியதற்கான காரணம் புலப்படவில்லை.
- உலகநாதர் என்பவரின் தூண்டுதலின் பேரில் இந்த நூல் எழுதப்பட்டதாக ஒரு குறிப்பு உள்ளது.
- விருத்தப்பாவால் ஆன நூல்
- இரு பகுதியாக நூல் உள்ளது.
- நான்கு வருணங்களைச் சொன்ன பின்னர் 81 சாதிகள் இதில் சொல்லப்பட்டுள்ளன.
- திருட்டுத்தனமான ஆண்-பெண் உறவு முறையால் [2] சாதிகள் தோன்றின என இந்நூல் குறிப்பிடுகிறது.
கருவிநூல்
[தொகு]- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 2, 2005