சாதிச் சான்றிதழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியா, தமிழ்நாட்டில் சமூக மற்றும் பொருளாதார நிலைகளில் கீழாக உள்ளவர்களை முன்னேற்றம் செய்யும் விதமாக கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை மற்றும் சில சலுகைகளை அளித்து அரசு அளித்துள்ளது. இதற்காக தமிழ்நாட்டிலுள்ள சாதிகளை 1. ஆதிதிராவிடர் 2. பழங்குடியினர் 3. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 4. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்), 5. மிகவும் பிற்பட்ட வகுப்பினர் 6. சீர்மரபினர் என ஆறு வகையாகப் பகுத்து தமிழ்நாடு அரசு தமிழ்நாடு சாதிகள் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஒருவரை இந்தப் பட்டியலிலுள்ள குறிப்பிட்ட சாதியினர் எனத் தெரிவித்து வருவாய்த் துறை அளிக்கும் சான்றிதழ் சாதிச் சான்றிதழ் எனப்படுகிறது. இந்த சான்றிதழ்களைக் கொண்டு குறிப்பிட்ட ஒதுக்கீட்டின் கீழாக அரசு அளிக்கும் பல்வேறு சலுகைகளைப் பெற முடியும்.

சாதிகள் இல்லைஅடி பாப்பா

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாதிச்_சான்றிதழ்&oldid=2830354" இலிருந்து மீள்விக்கப்பட்டது