சாதாரண ஐரோப்பிய வைப்பர்
சாதாரண ஐரோப்பிய வைப்பர் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Vipera |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/ViperaV. berus
|
இருசொற் பெயரீடு | |
Vipera berus (Linnaeus, 1758) | |
வேறு பெயர்கள் [2] | |
Species synonymy
|
சாதாரண ஐரோப்பிய வைப்பர் ( Vipera berus, common European adder [3] மற்றும் common European viper[4] என்றும் அறியப்படுவது, வைப்பரைடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நச்சுப் பாம்பு இனம் ஆகும். இந்த இனம் மிவும் பரவலாக நடு ஐரோப்பா மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளிலும், கிழக்கு ஆசியா வரையிலும் காணப்படுகிறது. இதுல் மூன்று அங்கீகரிக்கப்பட்ட துணையினங்கள் உள்ளன.
சாதாரண ஆடர் மற்றும் சாதாரண வைப்பர் உட்பட பல பொதுவான பெயர்களால் அறியப்படும், ஆடர் பிரிட்டன் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளின் நாட்டுப்புறக் கதைகளில் இடம்பெற்றுள்ளது.[5] குறிப்பாக இது ஆபத்தானதான விலங்காக கருதப்படுவதில்லை;[3] பாம்பு ஆக்ரோசமானதாக இல்லை. பொதுவாக உண்மையில் அது தூண்டப்பட்டால், மிதிக்கும்போது அல்லது பிடிக்கும்போது மட்டுமே கடிக்கும். கடித்தால் மிகவும் வேதனை ஏற்படும், ஆனால் அரிதாகவே மரணம் ஏற்படும்.[6] இதன் சிற்றினப் பெயரான, பெரஸ், புதிய லத்தீன் சொல்லாகும். மேலும் இது ஒரு காலத்தில் பாம்பைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது, ஒரு கால் புல் பாம்பு, நாட்ரிக்ஸ் நாட்ரிக்ஸ் போன்ற பாம்புகளை குறிக்கப்பபயன்படுத்தப்பட்ட சொல்லாக இருக்கலாம்.[7]
இந்தப் பாம்பு வெவ்வேறு நிலப்பரப்புகளில் காணப்படுகிறது. இது சிறிய பாலூட்டிகள், பறவைகள், பல்லிகள், நீர்நில வாழ்வன மற்றும் சில சந்தர்ப்பங்களில் சிலந்திகள், புழுக்கள், பூச்சிகள் ஆகியவற்றிறை உணவாக கொள்கிறது. இது, மற்ற வைப்பர்களைப் போலவே, உள்பொரி முட்டை கொண்டு குட்டியிடக்கூடியன. பெண் பாம்புகள் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இனப்பெருக்கம் செய்கிறன. வடக்கு அரைக்கோளத்தில் கோடையின் பிற்பகுதியிலிருந்து இலையுதிர்காலத்தின் தொடக்கத்தில் குட்டிகள் பொதுவாக பிறக்கும். குட்டிகள் மூன்று முதல் 20 வரை இருக்கும், குட்டிகள் சில நாட்கள் தாயுடன் தங்கும். வளர்ந்த பாம்புகளின் மொத்தம் (வால் உட்பட) 60 முதல் 90 cm (24 முதல் 35 அங்) நீளம் வரை வளரும். மேலும் 50 முதல் 180 g (1.8 முதல் 6.3 oz) நிறை இருக்கும். இங்கு விவரிக்கப்பட்டுள்ள வைப்பரா பெரஸ் பெரஸ், உள்பட பரிந்துரைக்கபட்ட மூன்றுதுணையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. சில நாடுகளில் இவை பாதுகாக்கப்பட்ட இனமாக அறிவிக்கபட்டாலும், இந்தப் பாம்புகள் அச்சுறுத்தப்பட்டதாக கருதப்படவில்லை.
குறிப்புகள்
[தொகு]- ↑ Isailovic JC, Vogrin M, Corti C, Sá-Sousa P, Cheylan M, Pleguezuelos JM, Tomović L, Sterijovski B, Joger U, Westerström A, Borczyk B, Schmidt B, Meyer A, Sindaco R, Jelić D (2009). "Vipera berus ". IUCN Red List of Threatened Species 2009: e.T157248A5059709. https://www.iucnredlist.org/species/157248/5059709. பார்த்த நாள்: 13 January 2020.
- ↑ McDiarmid RW, Campbell JA, Touré TA (1999). Snake Species of the World: A Taxonomic and Geographic Reference, Volume 1. Washington, District of Columbia: Herpetologists' League. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-00-6 (series). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-01-4 (volume).
- ↑ 3.0 3.1 Mallow D, Ludwig D, Nilson G (2003).
- ↑ Stidworthy J (1974).
- ↑ "Everyday Adders – the Adder in Folklore". The Herpetological Conservation Trust. Archived from the original on 3 October 2009. பார்க்கப்பட்ட நாள் 7 February 2010.
- ↑ Warrell, David A. (2005). "Treatment of bites by adders and exotic venomous snakes". British Medical Journal 331 (7527): 1244–1247. doi:10.1136/bmj.331.7527.1244. பப்மெட்:16308385.
- ↑ Gotch, Arthur Frederick (1986).
வெளி இணைப்புகள்
[தொகு]- தமிழ்க் கலைக்களஞ்சியம் முதல் தொகுதியில் ஆடர் என்ற தலைப்பில் இந்த பாம்பு குறித்த கட்டுரை உள்ளது.