உள்ளடக்கத்துக்குச் செல்

சாணக்யா தேசிய சட்டப் பல்கலைக்கழகம்

ஆள்கூறுகள்: 25°35′38″N 85°07′57″E / 25.5938°N 85.1325°E / 25.5938; 85.1325
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாணக்யா தேசிய சட்டப் பல்கலைக்கழகம்
குறிக்கோளுரைGyandhanam Mahaddhanam
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
Knowledge is the greatest wealth
வகைஅரசு
உருவாக்கம்2006 (2006)
வேந்தர்தலைமை நீதிபதி-பாட்னா உயர் நீதிமன்றம்
துணை வேந்தர்பைசான் முசுதபா[1]
அமைவிடம், ,
வளாகம்உறைவிடப் பள்ளி
சேர்ப்புஇந்திய வழக்குரைஞர் கழகம், பல்கலைக்கழக மானியக் குழு
இணையதளம்www.cnlu.ac.in

சாணக்யா தேசிய சட்டப் பல்கலைக்கழகம் (Chanakya National Law University) என்பது இந்தியாவில் பீகார் மாநிலத்தின் பாட்னாவில் செயல்படும் ஒரு பொது சட்டப் பள்ளி மற்றும் தேசிய சட்டப் பல்கலைக்கழகமாகும். இது 2006ஆம் ஆண்டில் பீகார் அரசாங்கத்தால் (2006ஆம் ஆண்டின் பீகார் சட்டம் 24) சட்டக் கல்வி துறையில் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பொதுப் பல்கலைக்கழகமாக நிறுவப்பட்டது. பாட்னா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இந்தப் பல்கலைக்கழகத்தின் அலுவல்முறை வேந்தராக உள்ளார். இது இந்தியாவின் தன்னாட்சி பெற்ற சட்டப் பள்ளிகளில் ஒன்றாகும். இந்தப் பல்கலைக்கழகத்தின் வளாகம் மிதாபூர் பகுதியில் நகரின் மையப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த வளாகம் சுமார் 18 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது.

வரலாறு

[தொகு]

இந்தப் பல்கலைக்கழகம் 15 ஆகத்து 2006 அன்று இதன் துணைவேந்தர்/இணைவேந்தர் பேராசிரியர் முனைவர் ஏ. இலட்சுமிநாத், நால்சர் சட்டப் பல்கலைக்கழக முன்னாள் புலத்தலைவரும் பதிவாளரும், மனிதவள மேம்பாட்டு முதன்மைச் செயலாளருமான மதன் மோகன் ஜா, 1977 தொகுதி இந்திய ஆட்சிப் பணி அதிகாரியும், பதிவாசிரியருமான விஜய் குமார் ஹிமான்ஷு ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் உருவாக்கப்பட்டது. சாணக்கிய தேசிய சட்டப் பல்கலைக்கழகச் சட்டம், 2006 (பீகார் சட்டம் எண். 24/2006) இன் கீழ் நிறுவப்பட்டுள்ளது. இப்பல்கலைக்கழகம் பீகார் மாநிலம் முழுவதிலும் இதன் அதிகார வரம்பைக் கொண்டுள்ளது.[2]

நிர்வாகம்

[தொகு]

பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்திற்கு தலைமை தாங்குபவர்கள்.

  • வேந்தர்: பாட்னா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி.
  • துணைவேந்தர்: முனைவர் பைசான் முசுதபா
  • பதிவாளர் (பொ): முனைவர் எஸ். பி. சிங் [3]

கல்வி

[தொகு]

சாணக்யா தேசிய சட்டப் பல்கலைக்கழகம் ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பினை பின்வரும் இரண்டு பிரிவுகளாக வழங்குகிறது, அதாவது இளங்கலை, இளங்கலைச் சட்டம். பொது சட்ட சேர்க்கைக்கான நாடு தழுவிய தேர்வு மூலம், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 80,000 மாணவர்களிலிருந்து மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.[4] மொத்தம் 140 இடங்களுக்கானச் சேர்க்கை இப்பல்கலைக்கழகத்தில் வழங்கப்படுகின்றன. இதில் 10 இடங்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் 10 இடங்கள் வெளிநாட்டினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. சில கட்டாய படிப்புகளுடன், மாணவர்கள் பட்டம் பெற ஐந்து ஆண்டுகளில் 200 வரவுகளைப் பெற வேண்டும்.[5]

சாணக்யா தேசிய சட்டப் பல்கலைக்கழகம் ஒரு வருட முதுகலை சட்டப் படிப்பினையும் வழங்குகிறது. இந்த எல். எல். எம். மாணவர் சேர்க்கைக்கு மொத்தம் 40 இடங்கள் உள்ளன. இதற்கு பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வு மூலம் சேர்க்கை நடைபெறும்.

வெளியீடு

[தொகு]
  • சி. என். எல். யூ சட்ட இதழ்[6]
  • ஜெய்ரிபா
  • சாணக்கிய சட்ட மறுஆய்வு

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Kumar, Arun (18 July 2023). "AMU's Prof Faizan Mustafa appointed CNLU vice chancellor". hindustantimes.com. ஹிந்துஸ்தான் டைம்ஸ். Retrieved 1 October 2024.
  2. "CHANAKYA NATIONAL LAW UNIVERSITY" (PDF).
  3. "Administration".
  4. "Home". Archived from the original on 20 December 2018. Retrieved 18 December 2019.
  5. http://cnlu.ac.in/pdf/Academic%20Regulation%20w.e.f%202018%2019.pdf [தொடர்பிழந்த இணைப்பு]
  6. http://cnlu.ac.in/2019/Law%20Journal/CNLU%20Law%20Journal%20Volume%20IX.pdf [தொடர்பிழந்த இணைப்பு]

வெளியிணைப்புகள்

[தொகு]

25°35′38″N 85°07′57″E / 25.5938°N 85.1325°E / 25.5938; 85.1325