சாடி இலக்கிய விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாடி இலக்கிய விருது (Saadi Literary Award) என்பது அனைத்துலக பாரசீக இலக்கியத்திற்காக கொடுக்கப்படும் ஒரு விருது ஆகும். இவ்விருது 2008 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. பாரசீக கவிஞர் சாடி சிராசி அவர்களைச் சிறப்பிக்கும் பொருட்டு அவரின் பெயரால் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த அனைத்துலக விருதை சாடி சிராசியின் பிறந்த நாளன்று ஈரான் அரசு வழங்குகிறது.

தரம் மற்றும் தனித்தன்மை வாய்ந்த பாரசீக இலக்கியங்களை எழுதிய சிறந்த ஆசிய ஆய்வாளர்களுக்கு இந்த இலக்கிய விருது கொடுத்து சிறப்பிக்கப்படுகிறது. [1].

விருது பெற்றவர்கள்[தொகு]

  • கபீர் அகமது செய்சி (2008)[2][3]
  • அசார்மி தக்டு சபாவி (2010)
  • அன்வர் அகமது (2010)[4]
  • இத்ரீசு அகமது (2011)
  • அப்துல்லா சுப்பான் (2011)
  • பேராசிரியர் சந்திர சேகர் (2011)
  • பில்கியூ பாத்திமா உசைனி (2011)
  • சையது ஆசன் அப்பாசு (2011)[5]
  • சரிபியுன்னிசா பேகம் அன்சர்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாடி_இலக்கிய_விருது&oldid=3553324" இருந்து மீள்விக்கப்பட்டது