சாடிவயல்

ஆள்கூறுகள்: 10°56′28″N 76°43′35″E / 10.9412°N 76.7264°E / 10.9412; 76.7264
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாடிவயல்
Sadivayal
புறநகர்ப் பகுதி
சாடிவயல் Sadivayal is located in தமிழ் நாடு
சாடிவயல் Sadivayal
சாடிவயல்
Sadivayal
ஆள்கூறுகள்: 10°56′28″N 76°43′35″E / 10.9412°N 76.7264°E / 10.9412; 76.7264
நாடு இந்தியா
மாநிலம்Tamil Nadu தமிழ்நாடு
மாவட்டம்கோயம்புத்தூர் மாவட்டம்
ஏற்றம்523 m (1,716 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்641114
அருகிலுள்ள ஊர்கள்கோயம்புத்தூர், தொண்டாமுத்தூர், காந்திபுரம், பேரூர், செல்வபுரம், உக்கடம்
மாவட்ட ஆட்சித் தலைவர்திரு. கிராந்திகுமார் பாடி, இ. ஆ. ப.
மக்களவைத் தொகுதிபொள்ளாச்சி மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிதொண்டாமுத்தூர் (சட்டமன்றத் தொகுதி)
மக்களவை உறுப்பினர்கு. சண்முகசுந்தரம்
சட்டமன்ற உறுப்பினர்எஸ். பி. வேலுமணி
இணையதளம்https://coimbatore.nic.in

சாடிவயல் (ஆங்கில மொழி: Sadivayal) என்பது தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் தெற்கு வட்டம், தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியம், மத்துவராயபுரம் ஊராட்சியில் அமைந்த சிற்றூர் ஆகும். இது கோயம்புத்தூர் நகரத்திற்கு மேற்கே 34 கிலோ மீட்டர் தொலைவிலும், தொண்டாமுத்தூரிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவிலும், மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 523 மீட்டர் உயரத்தில், 10°56′28″N 76°43′35″E / 10.9412°N 76.7264°E / 10.9412; 76.7264 என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, சாடிவயல் புறநகர்ப் பகுதி அமையப் பெற்றுள்ளது.

ரூ.8 கோடி செலவில், சாடிவயல் பகுதியில் புதிய யானைகள் முகாம் ஒன்று அமைக்கப்பட தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.[1]

சாடிவயல் பகுதியானது, தொண்டாமுத்தூர் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்குட்பட்டதாகும். மேலும், இப்பகுதி பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி சார்ந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "கோவை சாடிவயலில் புதிய யானைகள் முகாம் - அரசாணை வெளியீடு". ETV Bharat News. பார்க்கப்பட்ட நாள் 2023-08-26.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாடிவயல்&oldid=3781520" இலிருந்து மீள்விக்கப்பட்டது