சாடில் முனை தேசியப் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சாடில் முனை தேசியப் பூங்கா(Saddle Peak National Park) என்பது இந்தியாவின் அந்தமான் நிகோபார் தீவுகள் கூட்டத்தில் அமைந்துள்ள ஒரு தேசியப் பூங்கா ஆகும். இப் பூங்கா 1979 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.[1][2]

காலநிலை[தொகு]

இப் பூங்கா 33 சதுர மைல்கள் (85.47 கிலோமீட்டர்) பரப்பளவு கொண்டதாகும். இங்கு பொதுவாக கடல் காலநிலையாகும். தட்பவெப்பநிலை வழக்கமாக 20 முதல் 30 டிகிரி செல்சியசு ஆகவும் 68 முதல் 86 டிகிரி பாரன்யீட் ஆக இருக்கும்.[3] சூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை மழைக்காலமாகும். [3]

விலங்குகள்[தொகு]

அந்தமான் காட்டுப் பன்றி, அந்தமான் மலை மைனா, அந்தமான் ஏகாதிபத்தியப் புறா, நீர் தலைவன், திமிங்கலங்கள், மீன்வகைகள் மற்றும் கடல்நீர் முதலைகள் போன்ற பல்வேறு விலங்குகள் இத் தீவில் உள்ளன.[2][3]

தாவரங்கள்[தொகு]

சாடில் முனை தேசியப் பூங்காவைச் சுற்றி ஈரமான காலநிலையே நிலவும். மேலும் வெப்பமண்டல தவரங்கள் மற்றும் பசுமைமாறா இளையுதிர் காடுகளால் சூழப்பட்டுள்ளது. [2][3] இத்தீவில் தாவர வகைகளான கொலோபியா புசில்லா மற்றும் கிலைதாந்தசு ரொபசுடசு போன்ற தாவர வகைகள் இங்கு காணப்படுகின்றன. இத்தாவர வகைகளை இந்தியாவின் முக்கிய நிலப்பரப்புகளில் காணமுடிவதில்லை.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Bisht, R.S. (1995). National parks of India. New Delhi: Publications Division, Ministry of Information and Broadcasting, Govt. of India. பக். 71. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8123001789. 
  2. 2.0 2.1 2.2 Negi, S.S. (1993). Biodiversity and its conservation in India. New Delhi: Indus. பக். 190. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8185182884. 
  3. 3.0 3.1 3.2 3.3 Negi, S.S. (2002). Handbook of national parks, wildlife sanctuaries, and biosphere reserves in India (3rd rev. ). New Delhi: Indus Pub. Co.. பக். 52. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8173871280. 
  4. New Reports to the Flora of India from Saddle Peak National Park, North Andaman. Rheedea. Vol. 19 (1 & 2) 69-71. 2009