சாடில் சிகரம் தேசிய பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சாடில் சிகரம் தேசிய பூங்கா (Saddle Peak National Park) என்பது இந்தியாவின் அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள ஒரு தேசியப் பூங்காவாகும். 1979-ஆம் ஆண்டு இப்பூங்கா துவங்கப்பட்டது [1][2].

காலநிலை[தொகு]

இப்பூங்காவின் பரப்பளவு 33 சதுர மைல்கள் (85.47கிமீ²) அகும். குறிப்பாக கடல்சார்ந்த காலநிலையாக இங்கு 200-300 செல்சியசு வெப்பநிலைக்குள் காணப்படும். சூன் முதல் அக்டோபர் வரை இங்கு மழைகாலம் ஆகும்[3].

விலங்குகள்[தொகு]

அந்தமான் காட்டுப் பன்றி, அந்தமான் மலை மைனா, நீர் உடும்பு, டால்பின்கள், சுறா மீன்கள், திமிங்கிலங்கள் மற்றும் உப்பு நீர் முதலை போன்றவை இங்கு காணப்படும் விலங்குகளாகும் [2][3].

தாவரங்கள்[தொகு]

சாடில் சிகரம் தேசிய பூங்காவை சுற்றிலும் இருப்பது ஈரமான, வெப்பமண்டல தாவரங்கள் நிறைந்த இலையுதிர் காடுகள் ஆகும். சிகோலோபியா, கிளெசுடேந்தசு ரோபசுட்டசு போன்ற இந்தியாவில் காணப்படாத தாவரங்கள் இங்கு காணப்படுகின்றன.[4].

மேற்கோள்கள்[தொகு]

  1. Bisht, R.S. (1995). National parks of India. New Delhi: Publications Division, Ministry of Information and Broadcasting, Govt. of India. பக். 71. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8123001789. 
  2. 2.0 2.1 Negi, S.S. (1993). Biodiversity and its conservation in India. New Delhi: Indus. பக். 190. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8185182884. 
  3. 3.0 3.1 Negi, S.S. (2002). Handbook of national parks, wildlife sanctuaries, and biosphere reserves in India (3rd rev. ). New Delhi: Indus Pub. Co.. பக். 52. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8173871280. 
  4. New Reports to the Flora of India from Saddle Peak National Park, North Andaman. Rheedea. Vol. 19 (1 & 2) 69-71. 2009