சாடியா ஆபல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாடியா ஆபல்
Shadia Habbal
பிறப்புகோம்சு, சிரியா
குடியுரிமைசிரியர், அமெரிக்கர்
துறைவான்வெளியியல்
கல்வி கற்ற இடங்கள்சிஞ்சினாட்டி பல்கலைக்கழகம்

சாடியா இரீபாய் ஆபல் (Shadia Rifa'i Habbal) (அரபு மொழி: شادية رفاعي حبال)ஓர் அமெரிக்க-சிரிய வானியலாளரும் விண்வெளி இயற்பியலாளரும் ஆவார். இவர் சூரிய இயற்பியல் பேராசிரியர் ஆவார். இவரது ஆய்வு சூரியக் காற்று, சூரிய ஒளிமறைப்பு ஆகியவற்றில் மையங்கொண்டதாகும்.

இளமையும் கல்வியும்[தொகு]

இவர் சாடியா நாயிம் இரிபாய் என்ற பெயரில் கோம்சு நகரத்தில் பிறந்தார். இங்கு இவர் தன் பள்ளிக் கல்வியை முடித்தார். இவர் தமாசுகசு பல்கலைக்கழகத்தில் இய்ற்பியலில் இளவல் பட்டம் பெற்றார். இவர் அமெரிக்கப் பீய்ரூட் பல்கலைக்கழகத்தில் இயற்பியலிலும் கணிதவியலிலும் முதுவர் பட்டம் பெற்றார். இவர் சிஞ்சினாட்டி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.[1]

வாழ்க்கைப் பணி[தொகு]

இவர் தேசிய வளிமண்டல ஆராய்ச்சி மையத்தில் ஓராண்டு (1977-1978) முடித்துவிட்டு, 1978 இல் ஆர்வார்டு சுமித்சோனிய வானியற்பியல் மையத்தில் சேர்ந்து அங்கே சூரிய-புவபீயற்பியல் ஆராய்ச்சிக் குழுவை நிறுவி 2000 வரை அப்பொறுப்பில் இருந்தார். மேலும், ஆபல் அபேரிசுவித்தில் உள்ள வேல்சு பல்கலைக்கழகத்தின் கணித. இயற்பியல்சார் புலங்கள் நிறுவனத்தின் சூரிய-புவி இயற்பியல் துறையின் பேராசிரியராக இருந்துள்ளார்.[2] இவர் 1995 முதல் 2000 வரை ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாலராக இருந்தார்.[3]

இவர் 2002 இல் புவி இயற்பியல் ஆராய்ச்சி இதழின் விண்வெளவீயற்பியல் பிரிவின் பதிப்பாசிரியராக அமர்த்தப்பட்டார். பேராசிரியர் ஆபல் அமெரிக்க வானியல் கழகம், பன்னாட்டு வானியல் ஒன்றியம், அவாய் வானியல் நிறுவனம், அரசு வானியல் கழகம் ஆகியவற்றைப் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராகவோ ஆய்வுறுப்பினராகவோ இருந்துள்ளார்.[2]

ஆராய்ச்சி[தொகு]

இவர் சூரியக் காற்று, சூரியக் காந்தப் புலங்களின் தோற்றமும் படிமலர்ச்சியும் பற்றிய ஆய்விலும் சூரியஒளிமறைப்பு சார்ந்த முனைவாக்க அளவியல் நோக்கீடுகளிலும் தன் கவனத்தைக் குவிக்கிறார்.[4] இவர்10 சூரிய ஒளிமறைப்புத் தேடாங்களில் கலந்துகொண்டுள்ளார். இதற்காக, இந்தியா (1995),குவாதலவுப்பி (1998),[5] சீனா (2008), பிரெஞ்சு பாலினேசியா (2010) ஆகிய இடங்களுக்குச் சென்றுவந்துள்ளர்.[3] இவர் அவாய் வானியல் நிறுவன குழுவை நாசாவுடன் இணைந்து 2006, 2008, 2009 ஆகிய ஆண்டுகளில் சூரிய ஒளிமறைப்பின்போதான சூரிய ஒளிமுகட்டை நோக்கீடுகள் செய்ய வழிநடத்தியுள்ளார்.[6] மேலும், இவர் நாசாவின் பார்க்கர் சூரிய ஆய்கலத் திட்டத்தில் முதன்மையான பங்களிப்புகள் செய்துள்ளார். இது ஏவப்படும்போது இதுவே சூரிய ஒளிமுகட்டை ஊடுறுவும் முதல் விண்கலமாகும்.[2]

தகைமைகள்[தொகு]

  • முன்னோடி, அராபிய சிந்தனை அறக்கட்டளை, திசம்பர் 2004.[4]
  • எபேயில் அமைந்த சீன அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் விருந்து தகைமைப் பேராசிரியர் சான்றிதழ், செப்டம்பர் 4, 2001.[4]
  • நாசா குழு சாதனை விருது, இசுபார்ட்டன் 201 வெண்ணொளி முகட்டுவரை குழு, வாழ்சிங்டன் டி.சி. , ஆகத்து 14, 2000.[4]
  • முனைவான பெண் விரிவுரைத் தொடர் விருது, வானியற்பியலுக்கான ஆர்வார்டு- சுமித்சோனிய மைய மகளிர் திட்டக் குழு, ஜூன் 8, 1998.[4]
  • நிகரற்ற சேவை, ஆதரவு பாராட்டுச் சான்றிதழ் - வானியற்பியலுக்கான ஆர்வார்டு- சுமித்சோனிய மையம், திசம்பர் 19, 1997.[4]
  • நிகரற்ற சேவைப் பாராட்டுச் சான்றிதழ் Certificate of Appreciation for outstanding service –தேசிய ஆராய்ச்சு மன்றம், வளிமண்டலவியல்,காலநிலை குழுமம், 1996.[4]
  • உயர் செந்தரச் சாதனையைக் காட்டும் சிறப்புப் பெருமதிக்கான விருதுச் சான்றிதழ், சுமித்சோனிய நிறுவனம்,ஜூலை 25, 1993.[4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாடியா_ஆபல்&oldid=2899047" இருந்து மீள்விக்கப்பட்டது