உள்ளடக்கத்துக்குச் செல்

சாஜி செரியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாஜி செரியன்
பிணறாயி விஜயனின்
இரண்டாவது அமைச்சரைவையில்
மீன்வளத்துறை
துறைமுகப் பொறியியல்
மீன்வள பல்கலைக்கழகம்
கலாச்சாரத் துறைகளுக்கான
அமைச்சர்,
கேரள அரசு
பதவியில் உள்ளார்
பதவியில்
20 மே 2021 (2021-05-20)
முதலமைச்சர்பிணறாயி விஜயன்
முன்னையவர்
கேரள சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
4 ஜூன் 2018
முன்னையவர்கே. கே. இராமச்சந்திரன் நாயர்
தொகுதிசெங்கன்னூர்
பின்னவர்பதவியில் உள்ளார்.
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு28 மே 1965 (1965-05-28) (அகவை 59)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
துணைவர்கிரிஸ்டினா செரியன்
வாழிடம்(s)கொழுவளூர், செங்கன்னூர்

சாஜி செரியன் (Saji Cheriyan) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் கேரள அரசில் மீன்வளத்துறை, துறைமுகப் பொறியியல், மீன்வள பல்கலைக்கழகம், கலாச்சாரம், கேரள மாநில திரைப்பட மேம்பாட்டுக் கழகம், கேரள மாநில சாலசித்ரா அகாதமி, கேரள மாநில கலாச்சார ஆர்வலர்கள் நல நிதி வாரியம், இளைஞர் விவகாரம் போன்றதுறைகளின் அமைச்சராக பணியாற்றுகிறார்.[1] கேரள சட்டமன்றத்தில் செங்கன்னூர் சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[2] [3]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

சாஜி செரியன் ஆலப்புழா மாவட்டம் கொழுவளூரில் மே 28, 1965 இல் பிறந்தார். இவர் மாவேலிக்கரை பிஷப் மூர் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். இவர், கிறிஸ்டினா என்பவரை மணந்தார். இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.

அரசியல் வாழ்க்கை

[தொகு]

இவர், இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் (மார்க்சிசம்) மாணவர் குழுவான இந்திய மாணவர் சங்கம் மூலம் அரசியலில் நுழைந்தார். இதில் இவர் ஒரு முறை ஆலப்புழா மாவட்டச் செயலாளராகவும் பின்னர் தலைவராகவும் இருந்தார். பின்னர், இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் (மார்க்சிசம் இளைஞர் பிரிவான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவரானார். 1995இல் மாவட்டப் பேரூராட்சித் தேர்தலில் முளகுழாப் பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். மேலும், உள்ளாட்சி அமைப்பில் வளர்ச்சி நிலைக்குழுவின் தலைவரானார். 2001இல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) செங்கன்னூர் பகுதிச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் (மார்க்சிசம்) பகுதிக் குழுவின் செயலாளர், ஆலப்புழா மாவட்ட பேரூராட்சி உறுப்பினர், கேரள பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர், இந்திய தொழிற் சங்க மையத்தின் மாவட்டத் தலைவர் போன்ற பதவிகளையும் இவர் வகித்துள்ளார்.

2006இல் செங்கன்னூர் தொகுதியிலிருந்து கேரள சட்டமன்றத்திற்கு போட்டியிட்ட இவர் இந்திய தேசிய காங்கிரசின் பி.சி. விஷ்ணுநாத்திடம் 5321 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். பின்னர், கே. கே. ராமச்சந்திரன் நாயரின் மறைவால் 28 மே 2018 அன்று நடந்த இடைத்தேர்தலில் இவர் செங்கன்னூர் தொகுதியிலிருந்து கேரள சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4] இவர் இந்திய தேசிய காங்கிரசின் டி. விஜயகுமார் என்பவரைவிட 20956 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். செங்கன்னூரில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி வேட்பாளாக இவர் ஓர் சிறந்த வெற்றி விகிதத்தைப் பதிவு செய்துள்ளார்.

17 ஆகஸ்ட் 2018 அன்று, இவரது சர்ச்சைக்குரிய முகநூல் பதிவு சமூக ஊடகங்களில் பரவியது. 2018 ஆம் ஆண்டு கேரள வெள்ளத்தின் போது மிகவும் ஆபத்தான மண்டலமாக இருந்த தனது தொகுதி குறித்து, தனது உதவியற்ற தன்மையையும், மத்திய அரசிடம் கோரிக்கையையும் குறிப்பிட்டிருந்தார். அதன் பின், செங்கன்னூரை காப்பாற்றுவதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

2021இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், செங்கன்னூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து இருந்து இவர் தனக்கு அடுத்த வந்த இந்திய தேசிய காங்கிரசு போட்டியாளரான எம். முரளியை 30000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து பிணறாயி விஜயன் அரசில் மீண்டும் மீன்வளத்துறை, துறைமுகப் பொறியியல் கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சராக பொறுப்பேற்றார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Notifications - Government of Kerala, India". kerala.gov.in. Archived from the original on 2021-05-17. பார்க்கப்பட்ட நாள் 2021-05-21.
  2. "CPI(M)-led LDF's Saji Cheriyan wins Chengannur Assembly bypoll by huge margin". DNA India.
  3. "LDF wins Chengannur in record majority". https://english.mathrubhumi.com/news/kerala/ldf-wins-chengannur-in-record-majority-1.2851830. பார்த்த நாள்: 2019-02-11. 
  4. "Kerala: CPM's Saji Cheriyan sworn in as Chengannur MLA". The New Indian Express.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாஜி_செரியன்&oldid=3553636" இலிருந்து மீள்விக்கப்பட்டது