சாஜிடேரியா பேபேசிகுலேட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சாஜிடேரியா பேபேசிகுலேட்டா இது இந்திய உருளைக்கிழங்கு அல்லது வாபாடோ என்றும் அழைக்கப்படுகிறது. நஞ்சை நில பகுதிகளில் காணப்படுகிறது. இத்தாவரம் உண்ணத் தகுந்த கிழங்குகளை தோற்றுவிக்கிறது. இவற்றை அமெரிக்க பூர்விக மக்கள் சேகரித்து உணவாக உட்கொள்கிறார்கள். தற்போதைய நிலை: அழிந்துவரும் நிலையில் உள்ளது. இறுதியாக ஜூலை 1979ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்லாண்டு சிறு தாவரம். 35 செ.மீ. உயரம் வரை வளரும். நீண்ட இலைகள், வட்ட வடிவ குறுக்கு வெட்டுத் தோற்றம், இலைகள் நீரில் மூழ்கிய நிலையில் இருக்கும். புதிய இலைகள் தட்டையாக நீள்முட்டை வடிவில் அகலமாக இருக்கும். இத்தாவரம் ஹென்டர்சன் மற்றும் பன்கோம்டா பகுதிகள் (வட கரோலினா மாகாணம்), கிரீன்விலி மற்றும் தெற்கு கரோலினாவின் லாரன்ஸ் பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது.நீர்க்கசிவு உள்ள பகுதிகளிலும் இத்தாவரம் வளர்கிறது. மணற்பாங்கான மண் மற்றும் நிழலான பகுதிகள் இதற்கு உகந்தவையாகும்.