உள்ளடக்கத்துக்குச் செல்

சாங்யெங்கைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாங்யெங்கைட்டு
Zhanghengite
விண்கற்களில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய சாங்யெங்கைட்டு கனிமம் (CuZn). பழைய வியட்நாமிய சேகரிப்பில் இருந்து இப்போது கிடைக்கிறது. கனிமமானது நல்ல வெளிர்-மஞ்சள் தங்கம் போன்ற நிறத்தைக் கொண்டுள்ளது மற்றும் சாதாரண கண்களுக்கு நன்கு தெரியும்.
பொதுவானாவை
வகைதாயகத் தனிமக் கனிமம்
வேதி வாய்பாடுCuZn
இனங்காணல்
நிறம்தங்க மஞ்சள்
படிக அமைப்புசம அளவு கனசதுரம்
பிளப்புஇல்லை
மோவின் அளவுகோல் வலிமை3.5
மிளிர்வுஉலோகத்தன்மை
கீற்றுவண்ணம்வெண்கலம்
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது
ஒப்படர்த்தி3.92
புறவூதா ஒளிர்தல்ஒளிராது
மேற்கோள்கள்[1][2]

சாங்யெங்கைட்டு (Zhanghengite) என்பது CuZn என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். 80% தாமிரம் மற்றும் துத்தநாகம், 10% இரும்பு மற்றும் 10% குரோமியம் மற்றும் அலுமினியம் என்ற அளவில் பிற தனிமங்கள் இக்கனிமத்தில் கலந்துள்ளன. சாங்யெங்கைட்டு கனிமம் தங்க மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. இது 1986 ஆம் ஆண்டில் போ சியன் விண்கல்லின் பகுப்பாய்வின் போது கண்டுபிடிக்கப்பட்டது. பண்டைய சீன வானியலாளர் சாங் எங் நினைவாக கனிமத்திற்கு சாங்யெங்கைட்டு எனப் பெயரிடப்பட்டது. பன்னாட்டு கனிமவியல் சங்கம் Zhg என்ற குறியீட்டால் இதை அடையளப்படுத்துகிறது. [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://webmineral.com/data/Zhanghengite.shtml Webmineral
  2. Mindat.org
  3. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாங்யெங்கைட்டு&oldid=3806171" இலிருந்து மீள்விக்கப்பட்டது