உள்ளடக்கத்துக்குச் செல்

சாங்டி பள்ளத்தாக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாங்டி பள்ளத்தாக்கு (Sangti Valley) இந்தியாவின் அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் உள்ள மேற்கு காமெங் மாவட்டத்தின் கிழக்கு இமயமலைத் தொடர் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்தப் பள்ளத்தாக்கில் சாங்டி நதி பாய்கிறது.[1]

சாங்டி நதி

சாங்டி பள்ளத்தாக்கு அதன் அழகிய காட்சிகள் மற்றும் வானிலைக்கு பெயர் பெற்றதாகும். இந்த பள்ளத்தாக்கு மலையேற்றம் செய்பவர்களுக்கு ஒரு சுற்றுலா தலமாகவும் உள்ளது.[2]

சாங்டி கிராமம் பள்ளத்தாக்கின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது மற்றும் திராங்கு கிராமத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.[3] திராங்கு திசோங்கு கிராமத்தில் சாங்டி ஆறு திராங்கு நதியைச் சந்திக்கிறது. இந்த கிராமம் திராங்கு நகரத்திற்கு அருகில் அமைந்துள்ளது

போக்குவரத்து

[தொகு]

சாலை

[தொகு]

இந்த கிராமம் போம்டில்லா - தவாங் நெடுஞ்சாலை வழியாக இணைக்கப்பட்டுள்ளது. திராங்கு திசோங்கு கிராமத்தை சாங்டி கிராமத்துடன் இணைக்க ஒரு சாலை இங்குள்ளது. இச்சாலை சுமார் 10 கி.மீ நீளம் கொண்டது.[4]

முக்கிய இடங்கள்

[தொகு]

சாங்டி கிராமம்: பள்ளத்தாக்கின் உள்ளே அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இந்த கிராமம் மேற்கு காமெங் மாவட்டத்தின் திராங்கு வட்டத்தின் கீழ் வருகிறது. போம்டிலாவில் உள்ள மாவட்ட தலைமையகத்திலிருந்து 45 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.[5] சாங்டி கிராமம் பெரும்பாலும் மகாயான பௌத்தத்தைப் பின்பற்றும் மோன்பா மக்களால் தடைசெய்யப்பட்டுள்ளது.[6] கிராமத்தின் மக்கள் தொகை 630 ஆகும்.[7]

புத்த மடாலயங்கள்: பள்ளத்தாக்கின் ஓரத்தில் பல மோன்பா வழிபாட்டு மடங்கள் அமைந்துள்ளன.[8][9]

சாங்டி பள்ளத்தாக்கு ஆட்டுப்பண்ணை: திராங்கு கிராமத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் சாங்டி ஆற்றின் கரையில் இந்த ஆடு வளர்ப்பு பண்ணை அமைந்துள்ளது.

முகாம் தளம்: ஆற்றின் கரையோரப் பள்ளத்தாக்கில் பல முகாம் தளங்கள் அமைந்துள்ளன. அவை உள்ளூர்வாசிகளுக்குச் சொந்தமானவையாகும். இவற்றை அவர்களே பராமரிக்கிறார்கள்.[10]

வனவிலங்கு

[தொகு]
கருப்பு கழுத்து கொக்கு

இந்தப் பள்ளத்தாக்கு அழிந்து வரும் கருப்பு கழுத்து கொக்குகளின் இனப்பெருக்க மையமாகும். பள்ளத்தாக்கில் வசிக்கும் மோன்பா சமூகங்களில் இந்தப் பறவை புனிதமாகக் கருதப்படுகிறது.[11][12][13] The bird is considered holy in Monpa communities resides in valley.[14]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sangti Valley | District West Kameng, Government of Arunachal Pradesh | India" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-03-08.
  2. "The Magic of Sangti Valley, Dirang, Arunachal Pradesh" (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-11-29. Retrieved 2023-03-08.
  3. "Sangti Village". Kalpavriksh (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-05-07. Retrieved 2023-03-08.
  4. "Sangti Valley Travel Guide & Travelogue | The Travelling Slacker". travellingslacker.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2021-01-16. Retrieved 2023-03-08.
  5. Pal, Suchismita (2022-10-26). "Sangti Valley In Arunachal Pradesh Is A Hidden Paradise With Lush Green Pastures And Misty Hills". Curly Tales (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-03-08.
  6. Jones, Rachel (2016-01-18). "Secret Little Sangti Valley in NE India". Hippie In Heels (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-03-08.
  7. "Sangti village in Dirang taluka, West Kameng, Arunachal Pradesh". vill.co.in (in ஆங்கிலம்). Retrieved 2023-03-08.
  8. Shah, Jahnavi. "Explore A Unique Cultural & Community Experience In Arunachal Pradesh This March". Homegrown (in ஆங்கிலம்). Retrieved 2023-03-08.
  9. "Sangti Valley Dirang, Arunachal Pradesh - A Hidden Paradise" (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-12-06. Retrieved 2023-03-08.
  10. "Sangti Valley - 7 Reasons To Discover This Secluded Wonder In Arunachal Pradesh!". thirdeyetraveller.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2020-01-19. Retrieved 2023-03-08.
  11. "Black-necked cranes shortening their stay in Sangti | The Arunachal Times" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-03-08.
  12. Correspondent, Special (2021-12-04). "In Arunachal, picnickers, feral dogs threaten black-necked crane wintering site" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/other-states/in-arunachal-picnickers-feral-dogs-threaten-black-necked-crane-wintering-site/article37837168.ece. 
  13. "Human activity disturbs quiet habitat of black-necked cranes in Arunachal Pradesh". Mongabay-India (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-06-02. Retrieved 2023-03-08.
  14. "As black-necked cranes return to Tawang, expert says awareness key for survival". www.downtoearth.org.in (in ஆங்கிலம்). Retrieved 2023-03-08.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாங்டி_பள்ளத்தாக்கு&oldid=4191025" இலிருந்து மீள்விக்கப்பட்டது