சாங்கேசூர் தேசியப் பூங்கா

ஆள்கூறுகள்: 39°09′44″N 45°55′47″E / 39.16222°N 45.92972°E / 39.16222; 45.92972
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாங்கேசூர் தேசியப் பூங்கா
அமைவிடம்ஓர்டுபாத் பிராந்தியம்
ஆள்கூற்றுகள்39°09′44″N 45°55′47″E / 39.16222°N 45.92972°E / 39.16222; 45.92972
பரப்பளவு42,797 எக்டேர்கள் (427.97 km2)
நிர்வகிக்கும் அமைப்புஅசர்பைஜான்
சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சகம்
சாங்கேசூர் தேசியப் பூங்கா is located in அசர்பைஜான்
சாங்கேசூர் தேசியப் பூங்கா
அசர்பைஜான் இல் சாங்கேசூர் தேசியப் பூங்கா அமைவிடம்

சாங்கேசூர் தேசிய பூங்கா (Zangezur National Park) என்பது அஜர்பைஜானின் தேசியப் பூங்காவாகும். இது சூன் 16, 2003 அன்று நக்சிவன் தன்னாட்சி குடியரசின் ஓர்டுபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்தப் பூங்கா 12,131 எக்டேர் (121.31 கி.மீ 2) பரப்பளவில் ஓர்டுபாத் தேசிய பூங்காவாக நிறுவப்பட்டது. 25 நவம்பர் 2009 அன்று இந்தப் பூங்கா 42,797 எக்டேர்கள் (427.97 km2) விரிவுபடுத்தப்பட்டது. மேலும், சாங்கேசூர் தேசியப் பூங்கா எனவும் மறுபெயரிடப்பட்டது. இந்தப் பூங்கா ஒரு மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இது குளிர்காலத்தில் குளிர்ச்சியாகவும் கோடையில் வெப்பமாகவும் இருக்கும். சனவரி மாதத்தில் -30 ° C முதல் -10 ° C வரையிலும் சூலை மாதத்தில் 10 ° C 25 ° C வரையிலும் வெப்பநிலை மாறுகிறது. ஆண்டு மழையளவு 300–800 மி.மீ என்ற அளவில் பொழியும். இதன் நீர் ஆதரங்களாக கிலான்சாய், வனாட்சே, துய்லுஞ்சே, அய்லிஷ்சே, கன்சாச்சே, கோட்டாம்சே, கிலிட்சே, ஓர்டுபாத்சே போன்ற ஆறுகளிலிருந்து வருகிறது. மழை மற்றும் உருகும் பனி இந்த நதிகளின் முக்கிய பகுதியாகும்[1].

தாவரங்கள்[தொகு]

இந்தப் பூங்காவில் சில அரிதான தாவரங்கள் வளர்கின்றன. [1] இங்கு வளரும் 39 வகையான தாவரங்கள் அசர்பைஜானின் சிவப்புப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

விலங்குகள்[தொகு]

இந்தப் பூங்கா வளமான உயிரியல் பன்முகத்தன்மையால் வகைப்படுத்தப்படுகிறது. இதில் 58 வகையான விலங்குகள் (அதில் 35 முதுகெலும்புப் பிராணிகள் மற்றும் 23 பூச்சிகள்) பதிவு செய்யப்பட்டுள்ளன. தேசியப் பூங்காவில் பாரசீக சிறுத்தை, மலை செம்மறி, ஆடு, வெள்ளை வால் கடல் கழுகு, பொன்னாங் கழுகு போன்ற பறைவை இனங்கள் அருகிவரும் நிலையில் காணப்படுகின்றன.

மேலும், நச்சிவன் பகுதி 62 பாலூட்டி இனங்கள் மற்றும் கிளையினங்களைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. அவற்றில் 32 வௌவால், முள்ளம்பன்றி, , பெசோர் ஆடு, காக்கேசிய மஃப்ளான் போன்றவை இருக்கின்றன. கூடுதலாக, சிறுத்தை, ஓநாய், குள்ளநரி, நரி, கழுதைப்புலி, பேட்ஜர், காட்டுப்பூனை போன்ற பிற வேட்டை விலங்குகள் போன்ற சுமார் 12 மாமிச பாலூட்டிகள் பூங்காவின் விலங்கினங்களின் முக்கியமாகும்

பாலூட்டிகளைத் தவிர, பூங்காவில் 217 பறவை இனங்களும் அவற்றின் கிளையினங்களான யுரேசியக் கழுகு, வெள்ளை கூழைக்கடா, வெள்ளை வால் கழுகு, குறுகிய கால் கழுகு, பெரிய பஸ்டர்ட் மற்றும் சிறிய பஸ்டர்ட் போன்றவற்றை இப்பகுதியில் காணலாம். அவற்றில் 15 இனங்கள் சிவப்பு புத்தகத்தில் சேர்க்கப்பட்டன. [1]

2010 சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க நிறுவனத்தின் (யுஎஸ்ஐஐடி) அறிக்கையியில், "அசர்பைஜானின் பூங்காக்கள் வெறும் பூங்காக்களாகவே இருக்கிறது. ஓர்டுபாத் தேசிய பூங்காவில் பொதுமக்களுக்கான அணுகல் என்பது சாத்தியமற்றது" என அந்த அறிக்கை தெரிவிக்கிறது. அதற்கு தனிப்பட்ட அனுமதி கோரப்பட்டாலும் பெரும்பாலும் "அசர்பைஜானின் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வள அமைச்சகத்திடமிருந்து மறுக்கப்படுகிறது. எனவே அனுமதி என்பது தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சர்வதேச நன்கொடையாளர்கள் அல்லது அரசாங்கத்திற்கு வெளியே உள்ள எவருக்கும் பெறுவது மிகவும் கடினமாகவே உள்ளது. [2]

ஜங்காசூர் தேசிய பூங்காவின் வளமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் தவிர கூடுதலாக இயற்கை மற்றும் வரலாற்று நினைவுச்சின்னங்களும் இங்கு உள்ளன. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "Azerbaijan". www.azerbaijan.az. Archived from the original on 2019-02-22. பார்க்கப்பட்ட நாள் 2017-05-31.
  2. United States Agency for International Development, "Biodiversity Analysis Update For Azerbaijan" 2010.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Zangezur National Park
என்பதில் ஊடகங்கள் உள்ளன.