சாங்கு சித்த சிவலிங்க நாயனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாங்கு சித்த சிவலிங்க நாயனார் என்பவர் சென்னை மாவட்டம் கிண்டியில் ஜீவசமாதியடைந்த சித்ராவார்.[1] இந்த சித்தர் நவகண்ட யோகத்தில் வல்லமை பெற்றவர்.[1]

இவரது இயற்பெயர் சிவலிங்கம் என்பதாகும். மெய்ஞான நூல்களை கற்று வள்ளலாரிடம் சமையல் வேலையில் இணைந்தார். அவர் மூலமே ஞானம் பெற்று யோக கலையில் சித்தி பெற்றார்.[1] இரண்டடி உயரத்தில் தியானம் செய்தல், நவகண்ட யோகம் எனும் உடல் பாகங்களை கூறு போட்டு சிவபெருமானை நோக்கி யோகம் செய்தல் போன்ற யோகங்களை செய்தார்.[1]

இவரது யோக வல்லமை பற்றி அறிந்த துரைமகனார் என்பவர் சித்தருக்கு கிண்டியில் சுப்பா காலனியில் இடம் கொடுத்தார். அங்கு பக்தர்களுக்கு பல்வேறு சித்துகளை செய்து அருளினார். தத்துவார்த்தம், பக்தி, சித்து, யோகம் போன்றவற்றை அறிந்திருந்தார். செப்புக் காசுகளை பொற்காசுகளாக மாற்றும் ரசவித்தை மூலமாக பொன்னாக பக்தர்களுக்கு தந்தார். அதை மறுப்பவர்களிடம் ஞான உபதேசம் செய்துள்ளார். சமாதி நிலையை அடையும் காலத்தினை முன்பே தெரிவித்து 1900ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி பவுர்ணமி நாளில் வியாழக்கிழமையன்று ஜீவசமாதியடைந்தார்.[1]

தற்போது இச்சமாதியில் சிவலிங்கம் வைத்து வழிபடுகின்றனர்.

ஆதாரங்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 சமையல்காரராக இருந்து சித்தரான நாயனார்! தினமலர்