சாங்கி அருங்காட்சியகம்
சாங்கி அருங்காட்சியகம் சிங்கப்பூரில் நடந்த இரண்டாம் உலக போருடைய வரலாற்றை அர்ப்பணித்து செய்யப்பட்ட ஓர் அருங்காட்சியம் ஆகும்.
1988 ஆம் ஆண்டில், சிங்கப்பூர் சாங்கி சிறைச்சாலையின் அருகில் ஓர் கிறித்துவ பிரதி சிற்றாலயமும் அருங்காட்சியகமும் கட்டப்பட்டது. சாங்சிச் சிறைச்சாலை 2001 ஆம் ஆண்டில் விரிவாக்கப்பட்ட போது, சேப்பலும் அருங்காட்சியகமும் 1 கிலோமீட்டர் தொலைவில் ஒரு புதிய தளத்திற்கு இடம் மாற்றப்பட்டு, சாங்கி சேப்பல் மற்றும் அருங்காட்சியகம் அதிகாரப்பூர்வமாக 15 பிப்ரவரி, 2001 இல் நிறுவப்பட்டது.
சார்ஜெண்ட் ஹாரிஸ்டோஜிடேனின் மகன் பெர்னார்ட் ஸ்டோஜிடேன், அவரது தந்தையால் செய்யப்பட்ட சிலுவையை புதிய சிற்றாலாயத்தின் பலிபீடத்தின் மீது வைக்க அழைக்கப்பட்டார். ஹார்ரி ஸ்டோஜிடேன் மரணம் அடைந்ததால் இப்பணி மூலம் மட்டுமே தன் அப்பாவுடன் (அவரின் பணி மூலம்) தொடர்புகொள்ள முடிந்த ஒரு வாய்ப்பாக அமைந்தது என்ற காரணத்தால் இவ்வாறு செய்யும்பொழுது பெர்னார்ட் ஸ்டோஜிடேன் அழுதிருக்கிறார் என அறியப்படுகிறது.
இந்த அருங்காட்சியகத்தில் முந்தைய போர் கைதிகள் அளித்த ஓவியங்கள், புகைப்படங்கள் தனிப்பட்ட விளைவுகள் உள்ளன. இங்குள்ள சேகரிப்புகளில் சிறையில் கைதிகளின் அன்றாட வாழ்க்கை பற்றித் தெரிக்கும் வில்லியம்ஹஸ்ஒர்த் என்ற போர்க்கைதி வரைந்த மதிப்புமிக்க ஓவியங்களும் வரைவுகளும் இருக்கின்றன.
1986 ஆம்ஆண்டில், ஹஸ்ஒரத்தின் மனைவி சிங்கப்பூர் தேசியஆவணப் பெட்டகத்திற்கு அவரது கணவர் வரைந்த 400 க்கும் மேற்பட்ட ஓவியங்கள் மற்றும் வரைப்படங்களை நன்கொடையாகக் கொடுத்தார். மேலும் அருங்காட்சியகத்தில் போரின்போது மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சாங்கி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் அங்கிருந்த மேரி ஆஞ்சலா பேட்மேன் வரைந்த நீர்வண்ண ஓவியங்களின் ஓர் தொகுப்பு இருக்கிறது.[1]
இலக்கியம்
[தொகு]• லென்ஸ்ய் லோலா லென்ஸ்ய் லோலா (2004). தென்கிழக்கு ஆசியாவின் அருங்காட்சியகம்: சிங்கப்பூர்: ஆர்ச்சிபேலேகோ பிரஸ். பக். 200 பக்கங்கள்.ஐஎஸ்பிஎன்[[1]].
வெளி இணைப்புகள்
[தொகு]- Changi Chapel and Museum பரணிடப்பட்டது 2013-05-16 at the வந்தவழி இயந்திரம் - அதிகாரபூர்வ இணையதளம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Nick Meo (2006-08-23). "Singapore war internee's art on show". BBC. http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/5274472.stm.