சாக் எப்ரான்
சாக் எபிரோன் | |
---|---|
பிறப்பு | சேக்கரே டேவிட் அலெக்சாண்டர் எபிரோன் 1987-10-18 சன் லஸ் ஓபிஸ்போ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
பணி | நடிகர், பாடகர் |
செயற்பாட்டுக் காலம் | 2002 - அறிமுகம் |
சாக் எபிரோன் இவர் ஒரு ஐக்கிய அமெரிக்க நடிகர் மற்றும் பாடகர் ஆவார். இவர் 2006ம் ஆண்டு ஹை ஸ்கூல் மியூசிகல் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பரிசியமான நடிகர் ஆனார்.
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]இவர் ஒரு சாதாரண நடுதரகுடும்பதில் சன் லஸ் ஓபிஸ்போ, கலிபோர்னியாவில் பிறந்து, அர்ரோயோ கரண்டே கலிபோர்னியாவில் வளந்தார். இவரின் தந்தை டேவிட் எபிரோன்ஒரு மின் நிலையத்தில் மின் பொறியாளர் ஆவார் மற்றும் இவரின் தாய் ஸ்டார்ல பேஸ்கட் அதே மின் நிலையத்தில் பணிபுரிந்த ஒரு செயலாளர் ஆவார். இவருக்கு டிலான் என்ற சகோதரர் உண்டு.
தொழில்
[தொகு]2002ம் ஆண்டு பிறேப்லி என்ற தொலைக்காட்சி தொடரில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். அதை தொடர்ந்து கார்டியன், ER போன்ற பல தொடர்களில் நடித்தார்.
2007ம் ஆண்டு டிஸ்னி சேனல் தயாரித்த ஹை ஸ்கூல் மியூசிகல் திரைப்படத்தில் நடித்தார், இந்த திரைப்படம் இவருக்கு மிக வெற்றி திரைப்படமாகும். இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பல விருதுகளை வென்றார். ஹை ஸ்கூல் மியூசிகல் திரைப்பட வரிசையில் 3 பகுதிகள் நடித்தார் என்பது குறிப்படத்தக்கது. அதை தொடர்ந்து 17 அகெய்ன், தட் அவக்வர்ட் மொமென்ட், நெய்பர்ஸ் போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார்.
இவர் தற்பொழுது நெய்பர்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துகொண்டு இருக்கின்றார். இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருகின்றது.
திரைப்படம்
[தொகு]இவர் நடித்த திரைப்படங்கள் சில:
- மெலிண்டா வேர்ல்ட்
- மிராக்கிள் ரன்
- டெர்பி ஸ்டாலியனில்
- ஹை ஸ்கூல் மியூசிகல் - நிக்கலோடியோன் இங்கிலாந்து கிட்ஸ் சாய்ஸ் விருது சிறந்த தொலைக்காட்சி நடிகர், 5 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு 4 விருதுகளை வென்றார்.
- ஹேர்ஸ்பிரே - 13 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு 7 விருதுகளை வென்றார்.
- ஹை ஸ்கூல் மியூசிகல் 2 – 7 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு 4 விருதுகளை வென்றார்.
- ஹை ஸ்கூல் மியூசிகல் 3 – 10 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு 7 விருதுகளை வென்றார்.
- 17 Again – 6 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு 3 விருதுகளை வென்றார்.
- தட் அவக்வர்ட் மொமென்ட்
- நெய்பர்ஸ்
குறிப்புகள்
[தொகு]- http://www.tvguide.com/celebrities/zac-efron/bio/192497
- http://www.zefron.com/gallery/displayimage.php?album=352&pos=5