சாக்கு ஓட்டம்
Jump to navigation
Jump to search
சாக்கு ஓட்டம் விளையாட்டுப் போட்டிகளில் ஒன்று. விளையாட்டுப் போட்டியன்று பள்ளிகளில் மாணவர்களும், விழாக்காலங்களில் சங்கங்களில் உறுப்பினர்களும் பங்கேற்பர். கீழிருந்து இடுப்பு வரை சாக்குகளைப் போர்த்திக் கொண்டு கைகளால் பிடித்தபடி, தாவித் தாவி இலக்கை அடைய வேண்டும். கீழே விழுபவர் ஆட்டத்தில் இருந்து நீக்கப்படுவார். முதலில் இலக்கை அடைபவர் வெற்றியாளர் ஆவார். குறைந்த நீளத்திற்கு இந்தப் போட்டி நடைபெறும். இந்த போட்டி தமிழ்நாட்டில் நடைமுறையில் உண்டு.