உள்ளடக்கத்துக்குச் செல்

சாகை மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாகை
ضلع چاغی
چاگۓ دمگ
மாவட்டம்
சைந்தக் ஏரி
சைந்தக் ஏரி
பலூசிஸ்தான் மாகாணத்தில் சாகை மாவட்டம்
பலூசிஸ்தான் மாகாணத்தில் சாகை மாவட்டம்
நாடுபாக்கித்தான்
மாகாணம்பலூசிஸ்தான்
தலைமையிடம்தல்பந்தின்
அரசு
  வகைமாவட்ட நிர்வாகி
பரப்பளவு
  மாவட்டம்44,748 km2 (17,277 sq mi)
மக்கள்தொகை
 (2023)
  மாவட்டம்2,69,192
  அடர்த்தி6.0/km2 (16/sq mi)
  நகர்ப்புறம்
20,054
  நாட்டுப்புறம்
2,49,138
சராசரி எழுத்தறிவு
  எழுத்தறிவு33.15%
நேர வலயம்ஒசநே+5 (பாகிஸ்தான் நேரம்)

சாகை மாவட்டம் அல்லது சாகி மாவட்டம் (Chaghi District), பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தின் 37 மாவட்டங்களில் ஒன்றாகும்.[2] இதன் நிர்வாகத் தலைமையிடம் தல்பந்தின் நகரம் ஆகும். தல்பந்தின் நகரம், மாகாணத் தலைநகரான குவெட்டாவிற்கு தென்மேற்கில் 339 கிலோமீட்டர் தொலைவிலும்; நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்துக்கு 752.6 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

அமைவிடம்

[தொகு]

பலூசிஸ்தானின் வடமேற்கில் அமைந்த சாகை மாவட்டத்தின் வடக்கில் ஆப்கானித்தான், மேற்கில் ஈரான், வடகிழக்கில் நுஸ்கி மாவட்டம், கிழக்கில் காரன் மாவட்டம், தெற்கில் வாசூக் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2023 பாக்கித்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 38,213 குடியிருப்புகள் கொண்ட சாகை மாவட்டத்தின் மக்கள் தொகை 2,69,192 ஆகும். பாலின விகிதம் 100 பெண்களுக்கு 108.24 ஆண்கள் வீதம் உள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 33.15% ஆகும்.[3][4]10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 101,423 (37.76% உள்ளனர்.[5] 20,054 (7.45%) மக்கள் நகர்புறங்களின் வாழ்கின்றனர்.[3]

சமயம்

[தொகு]

இசுலாம் சமயத்தை 99.3% பேரும், சிறுபான்மையோர் இந்து மற்றும் கிறித்துவ சமயங்களை பின்பற்றுகின்றனர்.[6]

மொழிகள்

[தொகு]

பலூச்சி மொழி 73.77%, பிராகுயி மொழி 16.79%, பஷ்தூ மொழி 8.93% மற்றும் பிற மொழிகளை 0.51% மக்கள் பேசுகின்றனர்.[7]

மாவட்ட நிர்வாகம்

[தொகு]
பலூசிஸ்தான் மாகாணத்தின் மாவட்டங்கள்

சாகை மாட்டம் கீழ்கண்ட வருவாய் வட்டங்களையும், ஒன்றியக் குழுக்களையும் கொண்டுள்ளது.[2]

வருவாய் வட்டம் பரப்பளவு

(km²)[8]

மக்கள் தொகை

(2023)

மக்கள்தொகை அடர்த்தி

(ppl/km²)

(2023)

எழுத்தறிவு

(2023)[9]

ஒன்றியக் குழுக்கள்
தல்பந்தின் வட்டம் 7,791 122,918 15.78 39.10%
நோக் குண்டி வட்டம் 16,092 30,625 1.90 48.57%
தப்தன் வட்டம் 9,318 19,259 2.07 19.70%
சாகை வட்டம் 3,975 73,482 18.49 23.77%
அமூரி வட்டம் ... ... ... ...
சில்காஜி வட்டம் ... ... ... ...
யாக்மச் வட்டம் 7,572 22,908 3.03 24.36%

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Literacy rate, enrolments, and out-of-school population by sex and rural/urban, CENSUS-2023, BALOCHISTAN" (PDF).
  2. 1 2 Tehsils & Unions in the District of Chaghi - Government of Pakistan
  3. 1 2 "7th Population and Housing Census - Detailed Results: Table 1" (PDF). Pakistan Bureau of Statistics.
  4. "7th Population and Housing Census - Detailed Results: Table 12" (PDF). Pakistan Bureau of Statistics.
  5. "7th Population and Housing Census: Population by Mother Tongue, Sex and Rural/Urban" (PDF). Pakistan Bureau of Statistics.
  6. "7th Population and Housing Census - Detailed Results: Table 9" (PDF). Pakistan Bureau of Statistics.
  7. "Population by Mother Tongue, Sex and Rural/Urban, Census-2023" (PDF). Pakistan Bureau of Statistics.
  8. "TABLE 1 : AREA, POPULATION BY SEX, SEX RATIO, POPULATION DENSITY, URBAN POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE, CENSUS-2023, BALOCHISTAN" (PDF).
  9. "LITERACY RATE, ENROLMENT AND OUT OF SCHOOL POPULATION BY SEX AND RURAL/URBAN, CENSUS-2023, BALOCHISTAN" (PDF).

உசாத்துணை

[தொகு]
  • 1998 District census report of Chagai. Census publication. Vol. 38. Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan. 1999.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாகை_மாவட்டம்&oldid=4522948" இலிருந்து மீள்விக்கப்பட்டது