சாகேத் குஷ்வாஹா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாகேத் குஷ்வாஹா
பிறப்பு28 ஆகத்து 1963 (1963-08-28) (அகவை 60)
கான்பூர், உத்தரப் பிரதேசம், இந்தியா
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்பனாரசு இந்து பல்கலைக்கழகம்

சாகேத் குஷ்வாஹா (Saket Kushwaha) என்பவர் இந்தியக் கல்வியாளர் மற்றும் விவசாய பொருளாதார நிபுணர் ஆவார். இவர் அருணாச்சல பிரதேசத்தின் ராஜீவ்காந்தி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மற்றும் பீகார் லலித் நாராயண் மிதிலா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஆவார்.

கல்வி[தொகு]

குஷ்வாஹா 1963ஆம் ஆண்டு ஆகத்து 28ஆம் தேதி இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள கான்பூரில் உள்ள பீம்செனில் பிறந்தார்.[1] இவரது தந்தை, சுரேந்திர சிங் குஷ்வாஹா, பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையில் பேராசிரியராக இருந்தார்.[1] இவர் ராஞ்சி பல்கலைக்கழகம், ஜார்கண்ட்[2] மற்றும் மகாத்மா காந்தி காசி வித்யாபீட்ம், உத்தரப் பிரதேசம் ஆகியவற்றின் துணைவேந்தராகவும் பணியாற்றியுள்ளார்.[3] சாகேத் குஷ்வாஹா விவசாயத்தில் இளநிலை (1983) மற்றும் முதுநிலை (1986) மற்றும் முனைவர் (1992) பட்டங்களை பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் பெற்றுள்ளார். இவரது முனைவர் பட்ட ஆய்வு விவசாயப் பொருளாதாரம் குறித்தது.[4]

பணி[தொகு]

குஷ்வாஹா நைஜீரியாவின் கூட்டாச்சிதொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில், மேலாண்மைப் பள்ளி புலத்தலைவராகப் பணியாற்றியுள்ளார்.[5] 2006-ல் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியில் சேர்ந்தார்.[5] 2014-ல் இவர் லலித் நாராயண் மிதிலா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.[6][7] இங்கு இவர் 2017 வரை பணியாற்றினார். பின்னர் 2017 முதல் 2018 வரை பனாரசு பல்கலைக்கழக ராஜீவ்காந்தி தெற்கு வளாகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார்.[8] From 2017 to 2018 he served as professor-in-charge for Rajiv Gandhi South Campus Banaras Hindu University.[4][9] இதனைத் தொடர்ந்து 2018ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.[10]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Vice Chancellor". www.rgu.ac.in. Archived from the original on 11 ஜனவரி 2020. பார்க்கப்பட்ட நாள் 12 September 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "List of Vice-Chancellors". www.ranchiuniversity.ac.in. Ranchi University. பார்க்கப்பட்ட நாள் 12 September 2020.
  3. "Former vice chancellors MGKVP". Mahatma Gandhi Kashi Vidyapith. Archived from the original on 9 டிசம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 12 September 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. 4.0 4.1 "Prof. Saket Kushwaha at Banaras Hindu University". new.bhu.ac.in. Banaras Hindu University. பார்க்கப்பட்ட நாள் 12 September 2020.
  5. 5.0 5.1 "Faculties: Agricultural Economics". www.bhu.ac.in. Banaras Hindu University. பார்க்கப்பட்ட நாள் 12 September 2020.
  6. "Acting VCs for eight Bihar universities". https://www.hindustantimes.com/patna/acting-vcs-for-eight-bihar-universities/story-6jffrO5JwqOwiBQXS346yO.html. பார்த்த நாள்: 12 September 2020. 
  7. "VCs of LNMU, JP univ likely to be removed". https://timesofindia.indiatimes.com/city/patna/VCs-of-LNMU-JP-univ-likely-to-be-removed/articleshow/45127821.cms. பார்த்த நாள்: 12 September 2020. 
  8. Kumar, Arun (31 January 2017). "Acting VCs for eight Bihar universities" (in en). ஹிந்துஸ்தான் டைம்ஸ். https://www.hindustantimes.com/patna/acting-vcs-for-eight-bihar-universities/story-6jffrO5JwqOwiBQXS346yO.html. பார்த்த நாள்: 12 September 2020. 
  9. Singh, Binay (13 September 2017). "South Campus of BHU will have new facilities" (in en). The Times of India. https://timesofindia.indiatimes.com/city/varanasi/south-campus-of-bhu-will-have-new-facilities/articleshow/60498804.cms. பார்த்த நாள்: 12 September 2020. 
  10. "Prof Saket Kushwaha appointed new VC of RGU". https://www.business-standard.com/article/pti-stories/prof-saket-kushwaha-appointed-new-vc-of-rgu-118100200532_1.html. பார்த்த நாள்: 12 September 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாகேத்_குஷ்வாஹா&oldid=3742818" இலிருந்து மீள்விக்கப்பட்டது