சாகேதராமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாகேதராமன்
08FR S SAKATHARAMAN 22165g.jpg
பின்னணித் தகவல்கள்
பிறப்பு24 நவம்பர் 1982 (1982-11-24) (அகவை 37)
தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா
இசை வடிவங்கள்கருநாடக இசை
தொழில்(கள்)கர்நாடக இசையமைப்பாளர், வாய்ப்பாட்டுக் கலைஞர்
இசைத்துறையில்199 முதல் தற்போது வரை
இணையதளம்https://saketharaman.com

சாகேதராமன் (Saketharaman) (பிறப்பு: 1982 நவம்பர் 24) இவர் இந்தியாவில் கர்நாடக இசையின் சிறந்த இசைக்கலைஞர்களில் ஒருவராவார். இவர் பத்ம பூசண் சிறீ லால்குடி ஜெயராமனின் பிரதம சீடருமாவார். [1] மறைந்த திருவரங்கம் கிருட்டிணமூர்த்தி என்பவரிடம் தனது நான்கு வயதில் கர்நாடக வாய்ப்பட்டினைக் கற்கத் தொடங்கினார். பின்னர் இவர் மறைந்த திருமதி. சாவித்ரி சத்தியமூர்த்தி. திருமதி கீதா ராஜாவி போன்றவர்களிடமிருந்து பல பாடங்கள் மற்றும் ஜாவாலிகளைக் கற்றுக்கொண்டார். [2] இவர் தற்போது வித்வான் சிறீ நாகை முரளிதரனிடமிருந்து மும்மூர்த்திகளின் அரிய கீர்த்தனங்களையுகளையும், பாடல்களையும் கற்றுக்கொள்கிறார்.

இசையமைப்பாளர்[தொகு]

சாகேதராமனின் இசை நிகழ்ச்சிகளில் தவறாமல் இடம்பெறும் 100 க்கும் மேற்பட்ட பல்லவிகளை தானே சொந்தமாக இயற்றியுள்ளார். [3] இவை அரிய தாளங்களில் இயற்றப்பட்டுள்ளன. "சப்தஸ்வரம் சப்தராகம் சப்த தாளம்", "அஷ்ட கௌலவாம்", "சுவராக்சரம்", "ரஞ்சனி மாலா", "பஞ்ச ரங்கா சேத்திரம்" போன்ற பல கருப்பொருள் பல்லவிகளில் சாகேதராமன் இசையமைத்துள்ளார். சாகேதராமன் ஒரு பிரபலமான பாடல்களின் இசையினை வழங்குகிறார். இவர் பல மீரா பஜனைகள், புரந்தரதாசர் தேவர்நாமங்கள், அன்னமாச்சார்யார், கனகதாசர், சதாசிவ பிரமேந்திரர் மற்றும் சுப்பிரமணிய பாரதியார் ஆகியோரின் பாடல்களை பாடி வருகிறார். [4] பெங்களூர் கயானா சமாஜத்தில் சிறீ ஆதி சங்கராச்சாரியாரின் படைப்புகளின் முழுமையாக 2.5 மணி நேர இசை நிகழ்ச்சியை இவர் வழங்கினார். [5]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

சாகேதராமனின் தாயார் விஜயா சந்தானம் வேதியியலில் முதுகலை பட்டதாரியாவார். இவர் சிறீ கிருட்டிண பிரேமி சுவாமிகளை பின்தொடர்பவராவார். [6] இவரது தந்தை சந்தானம் ஒரு பட்டய கணக்காளராவார். இவரது மூத்த சகோதரி விசாகா ஹரி நன்கு அறியப்பட்ட ஹரிகத கலாட்சேப நிபுணராவார். [7][8] இவரது மனைவி வித்யா ஒரு மருத்துவர். இந்த தம்பதியினர் சென்னையில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.


மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாகேதராமன்&oldid=2917948" இருந்து மீள்விக்கப்பட்டது