சாகீர் கான் (ஆப்கானித்தான்)
ஜாஹிர் கான் (Zahir Khan பஷ்தூ: ظاهر خان ; பிறப்பு 20 டிசம்பர் 1998) ஒரு ஆப்கான் துடுப்பாட்ட வீரர் . இவர் செப்டம்பர் 2019 இல் ஆப்கானிஸ்தான் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார்.[1] இவர் ஆப்கன் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய போட்டிகளில் விளையாடி வருகிறார், மேலும் இவர் பட்டியல் அ துடுப்பாட்ட ம், முதல் தரத் துடுப்பாட்ட ம் மற்றும் இருபது20 ஆகிய உள்ளூர்ப் போட்டிகளிலும் விளையாடி வருகிறார் . 21 நவம்பர் 2015 அன்று 2015–17 ஐ.சி.சி இன்டர் கான்டினென்டல் கோப்பையில் பப்புவா நியூ கினியாவுக்கு எதிராக ஆப்கானிஸ்தானுக்காக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் அறிமுகமானார்.[2] இவர் 2016 ஆம் ஆண்டில் 19 வயதுக்குட்பட்ட துடுப்பாட்ட உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாடினார் .[3] அவர் ஆப்கனித்தான் தேசிய அணி தவிர 19 வயதிற்குட்பட்ட ஆப்கானித்தான் அணி, இஸ்லாமாபாத் யுனைட்டட், ஜமைக்கா தல்வாச், காபூல் ஈகிள்ஸ், லங்காசயர், மிஸ் ஐயினாக் பகுதி துடுப்பாட்ட அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆகிய அணிகளுக்காகௌம் விளையாடி வருகிறார்.
உள்நாட்டு போட்டிகள்
[தொகு]ஆகஸ்ட் 10, 2017 அன்று நடைபெற்ற காசி அமானுல்லா கான் பிராந்திய ஒருநாள் போட்டியில் பேண்ட்-இ-அமீர் பிராந்தியத்திற்காக இவர் பட்டியல் அ போட்டிகளில் அறிமுகமானார்.[4] இந்தத் தொடரில் மொத்தமாக 12 இலக்குகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் அதிக இலக்குகளைக் கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் முதல் இடம் பெற்றார்.[5] இவர் செப்டம்பர் 12, 2017 அன்று 2017 ஷ்பகீசா துடுப்பாட்ட லீக்கில் மிஸ் ஐனக் நைட்ஸ் அணிக்காக இருபதுக20 போட்டியில் இவர் அறிமுகமானார்.[6] 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற அகம்து ஷா அப்தாலி நான்கு நாள் போட்டித் தொடரில் ஐந்து போட்டிகளில் விளையாடி 30 இலக்குகளைக் கைப்பற்றினார்.இதன்மூலம் அதிக இலக்குகளைக் கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் முதல் இடம் பெற்றார்.[7]
இருபது20
[தொகு]செப்டம்பர் 2018 இல், ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் போட்டியின் முதல் பதிப்பில் நங்கர்ஹார் அணியில் இடம் பெற்றார்.[8] 2018–19 பங்களாதேஷ் பிரீமியர் லீக்கிற்கான வரைவு அணியில் இடம் பெற்றதனைத் தொடர்ந்து, அக்டோபர் 2018 இல் குல்னா டைட்டன்ஸ் அணியில் இடம் பெற்றார்.[9]
சர்வதேச வாழ்க்கை
[தொகு]டிசம்பர் 2017 இல், இவர் 19 வயதுக்குட்பட்ட துடுப்பாட்ட உலகக் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணியில் இடம் பெற்றார்.[10] ஜனவரி 2018 இல், 2018 ஐபிஎல் ஏலத்தில் இவரை ராஜஸ்தான் ராயல்ஸ் ஒப்பந்தத்தில் எடுத்தது.[11][12] டிசம்பர் 2018 இல், 2018 ஏ.சி.சி வளர்ந்து வரும் ஆசிய அணிகள் கோப்பைக்கான ஆப்கானிஸ்தானின் 23 வயதுக்குட்பட்ட அணியில் இடம் பெற்றார்.[13]
2018 ஜூன் மாதம் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடிய பதினொரு துடுப்பாட்ட வீரர்களில் இவரும் ஒருவர் ஆவார். ஆனால் விளையாடும் அணியில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.[14][15]
பிப்ரவரி 2019 இல், ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அதில் அயர்லாந்துத் துடுப்பாட்ட அனிக்கு எதிரான ஒருநாள் சர்வதேச (ஒருநாள்) மற்றும் இருபதுக்கு 20 சர்வதேச தொடரில் இடம் பெற்றார் .[16][17] இவர் மார்ச் 10, 2019 அன்று அயர்லாந்திற்கு எதிராக ஆப்கானிஸ்தானுக்காக ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.[18] ஒருநாள் தொடரில் சிறப்பான ஆட்டத் திறனை வெளிப்படுத்தியதால் இவர் அயர்லாந்திற்கு எதிரான ஆப்கானிஸ்தானின் தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் அணியில் சேர்க்கப்பட்டார், ஆனால் இவர் விளையாடவில்லை.[19]
குறிப்புகள்
[தொகு]- ↑ "Zahir Khan". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 January 2016.
- ↑ "ICC Intercontinental Cup, Afghanistan v Papua New Guinea at Sharjah, Nov 21-24, 2015". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 January 2016.
- ↑ "Afghanistan U-19s Squad". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 January 2016.
- ↑ "1st Match, Ghazi Amanullah Khan Regional One Day Tournament at Khost, Aug 10, 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 August 2017.
- ↑ "2017 Ghazi Amanullah Khan Regional One Day Tournament: Most Wickets". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 August 2017.
- ↑ "3rd Match, Shpageeza Cricket League at Kabul, Sep 12 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 12 September 2017.
- ↑ "Records: Ahmad Shah Abdali 4-day Tournament, 2019, Most wickets". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2 May 2019.
- ↑ "Afghanistan Premier League 2018 – All you need to know from the player draft". CricTracker. பார்க்கப்பட்ட நாள் 10 September 2018.
- ↑ "Full players list of the teams following Players Draft of BPL T20 2018-19". Bangladesh Cricket Board. Archived from the original on 28 மார்ச் 2019. பார்க்கப்பட்ட நாள் 29 October 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Mujeeb Zadran in Afghanistan squad for Under-19 World Cup". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 December 2017.
- ↑ "List of sold and unsold players". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 January 2018.
- ↑ "U19 World Cup stars snapped up in IPL auction". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 28 January 2018.
- ↑ "Afghanistan Under-23s Squad". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 December 2018.
- ↑ "Afghanistan Squads for T20I Bangladesh Series and on-eoff India Test Announced". Afghanistan Cricket Board. Archived from the original on 29 மே 2018. பார்க்கப்பட்ட நாள் 29 May 2018.
- ↑ "Afghanistan pick four spinners for inaugural Test". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 29 May 2018.
- ↑ "Mujeeb left out for Ireland Test, Shahzad out of T20Is". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 February 2019.
- ↑ "No Mujeeb in Tests as Afghanistan announce squads for Ireland series". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 7 February 2019.
- ↑ "5th ODI (D/N), Ireland tour of India at Dehra Dun, Mar 10 2019". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 March 2019.
- ↑ "Afghanistan add Zahir Khan and Sayed Shirzad to Test squad". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 12 March 2019.