சாகிவால் மாவட்டம்
சாகிவால் மாவட்டம்
ضِلع ساہِيوال மாண்டிகோமெரி மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் சாகிவால் மாவட்டத்தின் அமைவிடம் | |
நாடு | பாக்கித்தான் |
மாகாணம் | பஞ்சாப் |
கோட்டம் | சாகிவால் |
தலைமையிடம் | சாகிவால் |
அரசு | |
• வகை | மாவட்ட நிர்வாகம் |
• துணை ஆணையாளர் | பாபர் பசீர் |
பரப்பளவு | |
• மொத்தம் | 3,201 km2 (1,236 sq mi) |
மக்கள்தொகை (2017) | |
• மொத்தம் | 25,13,011 |
• அடர்த்தி | 790/km2 (2,000/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்) |
தாலுகாக்கள் | 2 |
இணையதளம் | www.sahiwal.gov.pk |
சாகிவால் மாவட்டம் (Sahiwal District), இதன் பழைய பெயர் மாண்டிகோமெரி மாவட்டம் ஆகும். இம்மாவட்டம் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் சாகிவால் ஆகும். இம்மாவட்டம் சாகிவால் மாட்டினங்களுக்கு பெயர் பெற்றது.[1] இம்மாவட்டம் இரண்டு தாலுகாக்களைக் கொண்டது. சிந்துவெளி நாகரித்தின் அரப்பா தொல்லியல் களங்களை இம்மாவட்டம் கொண்டுள்ளது.[2]சிந்து ஆறு பாய்வதால் இம்மாவட்ம் நீர் வளம் மிக்கது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 3,201 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சாகிவால் மாவட்டத்தின் மக்கள் தொகை 25,13,011 ஆகும். அதில் ஆண்கள் 1,276,646, பெண்கள் 1,236,119 மற்றும் திருநங்கைகள்/நம்பிகள் 246 அக உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 785.1 பேர் வீதம் வாழ்கின்றனர். இதன் மக்கள் தொகையில் சராசரி எழுத்தறிவு உடையோர் 1,143,059 மட்டுமே. இம்மாவட்டத்தில் மேற்கு பஞ்சாபியை பேசுபவர்கள் 24,63,603 (98%) ஆகும். உருது, சிந்தி, பலூச்சி, காஷ்மீரி, சராய்கி, இந்துகோ, பிராய்கி, பஷ்தூ போன்ற மொழிகளைப் பேசுபவர்கள் 2% ஆகவுள்ளனர்.[3]
தட்ப வெப்பம்
[தொகு]இம்மாவட்டத்தின் கோடைக்கால வெப்பம் 45–50 பாகை செல்சியஸ் ஆகவும்; குளிர்கால வெப்பம் 5-10 பாகை செல்சியசாகவும் இருக்கும். இதன் சராசரி ஆண்டு மழைப்பொழிவு 2000 மில்லி மீட்டர் ஆகும்.
கல்வி
[தொகு]- சாகிவால் பொது பள்ளி & கல்லூரி
- அரசு பட்டமேற்படிப்புக் கல்லூரி, சாகிவால்
- இராணுவப் பொதுப்பள்ளி & கல்லூரி, சாகிவால்
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Synthetic Dairy Breed Proposal பரணிடப்பட்டது 20 சனவரி 2012 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Harappaபரணிடப்பட்டது 22 ஆகத்து 2007 at the வந்தவழி இயந்திரம்
- ↑ SAHIWAL District Population Census 2017 of Pakistan