சாகிவால் மாடு
சாகிவால் மாடு (Sahiwal) என்பது முதன்மையாக பால் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் நாட்டு மாட்டு இனமாகும். இம்மாட்டினம் பாக்கித்தானின் பஞ்சாப் மாகாணத்தின் சாகிவால் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவை. [1] இவற்றின் பால் சிவப்பு சிந்தி மற்றும் புட்டனா இனங்களின் பாலைப் போலவே இருக்கும். சாகிவால் மாடுகள் பஞ்சாப்பில் அருகிவரும் உள்நாட்டு மாட்டு இனமாக கருதப்பட்டு, இந்த மாடுகளை வளர்க்க 'ராஷ்டிரிய கோகுல் மிஷனின்' கீழ் சலுகைகள் வழங்கப் படுகிறது. [2]
விளக்கம்[தொகு]
இந்த மாட்டுகள் லோலா, லம்பி பார், மான்டிகோமெரி, முல்தானி, டெலி என்ற வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இவற்றின் தோல் நிறம் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்துடன் அல்லது வெளிறிய சிவப்பு நிறத்துடன் காணப்படும் சில சமயங்களில் தோலில் வெள்ளைத் திட்டுகளும் இருக்கும்.[3]
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Oklahoma State University breed profile". 2007-05-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-01-08 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter
|=
ignored (உதவி) - ↑ "For desi breed 'Sahiwal', Punjab luring farmers with special benefits | punjab$bhatinda". Hindustan Times. 2016-05-06. 2016-10-19 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "சாஹிவால்". அறிமுகம். தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம். 8 சனவரி 2017 அன்று பார்க்கப்பட்டது.