சாகியுர் ரகுமான் லக்வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாகியுர் ரகுமான் லக்வி (Zakiur Rehman Lakhvi[1]) அல்லது சாக்கி-உர்-ரஹ்மான் லகாவி (Zaki-ur-Rehman Lakhavi[2]) (பிறப்பு ஏறத்தாழ 1960), லஷ்கர்-ஏ-தொய்பாவின் உயர் தலைவர்களில் ஒருவராவார். தற்போது அதன் காஷ்மீர் செயற்பாடுகளுக்கு தலைமைத் தளபதியாகவும் அதன் பொதுக்குழு உறுப்பினராகவும் பணியாற்றுகின்றார்.[3] இந்தியத் தேசியப் புலனாய்வு முகமையின் மிகவும் தேவைப்படுபவர் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

திசம்பர் 2008இல் 48 அகவையினராக கருதப்பட்ட லக்வி பாக்கித்தானின் பஞ்சாப் மாநிலத்தில் ஒக்காரா மாவட்டத்தில் பிறந்தவர்.[4] செச்சினியா, பொசுனியா எர்செகோவினா, ஈராக் மற்றும் தென்கிழக்காசியா பகுதிகளில் படைத்துறை நடவடிக்கைகளில் பங்கேற்றுள்ள லக்வியை பயிற்சி பெறும் இளைஞர்கள் சாச்சூ, மாமா, என்று அழைக்கின்றனர்.[4][5]

1999இல் முரிடிகெயில் நடைபெற்ற மாநாட்டில் கார்கில் போருக்குப் பின்னரான தற்கொலைத் தாக்குதல்களை இவ்வாறு நியாயப்படுத்தினார்: "கார்கிலிலிருந்து பாக்கித்தான் விலகிக்கொண்ட பிறகும் வாசிங்டனில் நவாஸ்-கிளின்டன் கூட்டறிக்கைக்குப் பிறகும் தாழ்ந்திருந்த காசுமீர் மக்களின் மன உறுதியை வலுப்படுத்தவும் இவை மேற்கொள்ளப்பட்டன... கார்கில் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்த இந்தியாவிற்கு படிப்பினை புகட்ட இந்த தற்கொலைப்படைத் தாக்குதல்கள் துவக்கப்பட்டன`` [6] தனது அடுத்த இலக்காக புது தில்லி இருக்கும் என்றார்.[7]

2006இல் இலாசுக்கர் தொய்பா உறுப்பினர்களை தற்கொலை குண்டுவெடிப்புகளுக்கு பயில்விக்க வற்புறுத்தினார்.[4] மக்கள் நெரிசல் மிக்க இடங்களில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த அறிவுறுத்தினார். 200 பேர்கள் உயிரிழக்கவும் 700 பேர்கள் காயமடைவும் காரணமான 2006 மும்பை தொடர்வண்டி குண்டுவெடிப்புகளுக்குத் தலைமையேற்ற அசம் சீமாவிற்கு மேற்பார்வையாளராக லக்வி இருந்ததாக இந்திய அதிகாரிகள் கருதுகின்றனர்.[4]

2008ஆம் ஆண்டு மே மாதம் ஐக்கிய அமெரிக்க நிதித் துறை நான்கு லஷ்கர்-ஏ-தொய்பா தலைவர்களின் சொத்துக்களை முடக்கியது; இதில் சாக்கியுர் லக்வியின் சொத்துக்களும் அடக்கம்.[5]

நவம்பர் 2008 மும்பை தாக்குதல்களில் பங்கேற்பு[தொகு]

இலக்வியை 2008 ஆண்டு நடந்த மும்பை தாக்குதல்களை திட்டமிட்ட முதன்மையான நால்வரில் ஒருவராக திசம்பர் 3, 2008இல் இந்திய காவல் அதிகாரிகள் அறிவித்தனர்.[8] இந்தத் தாக்குதல்களை நடத்தியதற்காக அஜ்மல் கசாப் குடும்பத்திற்கு பாக்கித்தானி ரூபாய் 150,000 தருவதாக இலக்வி அறிவித்திருந்தார்.[9] திசம்பர் 7, 2008 அன்று பாக்கித்தானின் படைத்துறை பாக்கித்தானி காசுமீரின் முசாஃபராபாத் அருகே லஷ்கர்-ஏ-தொய்பா பயிற்சி முகாம் மீது நடத்திய தேடல் தாக்குதலின்போது சாகியுர் ரகுமான் லக்வியை கைது செய்தது.[10] கைது செய்யப்பட்ட பன்னிருவரில் இவரும் ஒருவராக இருந்தார்.[11] இந்தக் கைதை உறுதி செய்த பாக்கித்தான் அரசு தனது எந்தவொரு குடிமகனையும் இந்தியாவிற்கு கையளிக்க மறுத்து விட்டது.[12] தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் பாக்கித்தானிய குடிமக்கள் அந்நாட்டிலேயே குற்றவிசாரணைக்கு உட்படுத்தப்படுவர் என அரசுக் கூறியது.[13]

பெப்ரவரி 12, 2009 அன்று பாக்கித்தான் பிரதமரின் உள்நாட்டு அறிவுரைஞர் ரகுமான் மாலிக் மும்பை தாக்குதல்களைத் திட்டமிட்ட முதன்மை சூத்திரதாரியாக லக்வி குற்றஞ்சாட்டப்பட்டு விசாரிக்கப்படுவதாக அறிவித்தார்.[14][15]

மும்பை தாக்குதல்கள் நடந்து ஓராண்டு நிறைவிற்கு ஒருநாள் முன்பாக நவம்பர் 25, 2009இல் பாக்கித்தானின் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் இலக்வியுடன் சேர்த்து ஏழு பேர் மீது மும்பை தாக்குதல்களை திட்டமிட்டதாகவும் இயக்கியதாகவும் முறையாக குற்றஞ் சாட்டியது.[16]

திசம்பர் 18, 2014 அன்று பாக்கித்தானின் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் ரூ. 500,000 பெறுமான உறுதித்தொகை ஆவணங்களுக்கு எதிராக பிணை வழங்கியது.[17] ஆனால் இந்தப் பிணையை திசம்பர் 19, 2014இல் உயர்நீதிமன்றம் மறுத்தது.[18] பாக்கித்தான் அரசு இலக்வி விடுவிக்கப்படவில்லை என்றும் சிறையிலேயே இருப்பதாகவும் உறுதி கூறியது.[19] இந்த செயற்பாட்டை 'ஆக்கபூர்வ' செயற்பாடாக இந்திய அரசு ஏற்றது.[20] சனவரி 7, 2015இல் லக்வியின் பிணை உச்ச நீதிமன்றத்தால் மறுக்கப்பட்டது.[21][22] உயர் நீதி மன்றத்திற்கு மாற்றப்பட்ட வழக்கில் பிணை மீண்டும் வழங்கப்பட்டது;[23] ஆனால் வேறொரு ஆட்கடத்தல் வழக்கின் காரணமாக சிறையிலேயே இருக்க வேண்டியதாயிற்று.[24][25][26]

பாக்கிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர் 10 ஏப்ரல் 2015 அன்று இவ்வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.[27] இவரின் விடுதலையின் மூலம் இந்திய பாக்கிஸ்தான் உறவு பாதிக்கும் என இந்தியா தெரிவித்தது.[28] மேலும் பிரான்சும் இவரின் விடுதலைக்கு எதிராக கருத்து தெரிவித்தது.[29]

மேற்சான்றுகள்[தொகு]

  1. http://timesofindia.indiatimes.com/topic/Zakiur-Rehman-Lakhvi
  2. http://www.ndtv.com/world-news/pakistan-court-adjourns-zaki-ur-rehman-lakhvi-hearing-as-judge-on-leave-749843
  3. "Terrorist Organization Member Profile: Zaki ur Rehman Lakhwi". National Consortium for the Study of Terrorism and Responses to Terrorism, University of Maryland. 2008-03-01. Archived from the original on 2008-12-15. பார்க்கப்பட்ட நாள் 2008-12-04.
  4. 4.0 4.1 4.2 4.3 Buncombe, Andrew (2008-12-08). "'Uncle' named as Mumbai terror conspirator". The Independent. http://www.independent.co.uk/news/world/asia/uncle-named-as-mumbai-terror-conspirator-1057699.html. பார்த்த நாள்: 2008-12-17. 
  5. 5.0 5.1 "US freezes assets of Lashkar leaders". The Economic Times. 2008-05-29. http://economictimes.indiatimes.com/PoliticsNation/US_freezes_assets_of_Lashkar_leaders/articleshow/3081444.cms. பார்த்த நாள்: 2009-01-27. 
  6. "The Fidayen -- faithful to the death". Indian Express Newspapers (Bombay) Ltd.. 1999-11-12. http://www.indianexpress.com/res/web/pIe/ie/daily/19991112/ige12049.html. பார்த்த நாள்: 2009-01-27. 
  7. "Zaki-ur-Rehman Lakhvi, Ameer, Mujahideen-e-Lashker-e-Taiba" இம் மூலத்தில் இருந்து 2000-01-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20000126211247/http://www.dawacenter.com/ijtimah/zaki-e.html. பார்த்த நாள்: 2009-01-27. 
  8. Rondeaux, Candace (2008-12-04). "Rice Increases Pressure on Pakistan". Washington Post. http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2008/12/03/AR2008120300586.html?nav=rss_nation/special. பார்த்த நாள்: 2008-12-04. 
  9. Swami, Praveen (2008-12-01). "Pakistan now holds the key to probe: investigators". The Hindu இம் மூலத்தில் இருந்து 2008-12-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081201173633/http://www.hindu.com/2008/12/01/stories/2008120157370100.htm. பார்த்த நாள்: 2008-12-01. 
  10. Singh, Harmeet Shah (2008-12-08). "Pakistan raids camp over Mumbai attacks". CNN. http://edition.cnn.com/2008/WORLD/asiapcf/12/08/pakistan.india.mumbai.arrests/index.html#cnnSTCText. பார்த்த நாள்: 2008-12-08. 
  11. Ahmad, Munir (2008-12-08). "Pakistan arrests suspected Mumbai plotter". AP. http://news.yahoo.com/s/ap/20081208/ap_on_re_as/as_pakistan. பார்த்த நாள்: 2008-12-08. 
  12. "Pakistan snubs India over arrests". BBC News. 2008-12-09. http://news.bbc.co.uk/2/hi/south_asia/7772554.stm. பார்த்த நாள்: 2008-12-09. 
  13. "Pakistan arrests Mumbai suspects". Al Jazeera. 2008-12-10. http://english.aljazeera.net/news/asia/2008/12/2008121085228795428.html. பார்த்த நாள்: 2008-12-10. 
  14. Masood, Salman (2009-02-12). "Pakistan Announces Arrests for Mumbai Attacks". New York Times. http://www.nytimes.com/2009/02/13/world/asia/13pstan.html?partner=permalink&exprod=permalink. பார்த்த நாள்: 2009-02-12. 
  15. Haider, Kamran (2009-02-12). "Pakistan says it arrests Mumbai attack plotters". Reuters. http://www.reuters.com/article/topNews/idUSTRE51B25820090212?pageNumber=1&virtualBrandChannel=10112. பார்த்த நாள்: 2009-02-12. 
  16. "Pak anti-terror court declares Lakhvi as 26/11 mastermind". Express India. 2009-11-25 இம் மூலத்தில் இருந்து 2012-01-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120121125647/http://www.expressindia.com/latest-news/Pak-antiterror-court-declares-Lakhvi-as-26-11-mastermind/546107/. பார்த்த நாள்: 2009-11-26. 
  17. "ATC approves bail of Zakiur Rehman Lakhvi in Mumbai attacks case". Dawn News. 2014-12-18. http://www.dawn.com/news/1151617/atc-approves-bail-of-zakiur-rehman-lakhvi-in-mumbai-attacks-case. பார்த்த நாள்: 2014-12-18. 
  18. "Government detains Zakiur rehman lakhvi under maintenance of public order". Express Tribune. 2014-12-19. http://tribune.com.pk/story/809289/maintenance-of-public-order-federal-govt-takes-zakiur-rehman-lakhvi-into-custody/. பார்த்த நாள்: 2014-12-19. 
  19. "Pakistan assures Lakhvi in jail". Zee news. 2014-12-21. http://zeenews.india.com/news/south-asia/arrest-warrant-against-taliban-chief-pakistan-assures-lakhvi-in-jail_1517953.html. பார்த்த நாள்: 2014-12-21. 
  20. "Ajit Doval terms detention of Zaki-ur-Rehman Lakhvi as 'positive'". Zee news. 2014-12-20. http://zeenews.india.com/news/india/ajit-doval-terms-detention-of-zaki-ur-rehman-lakhvi-as-positive_1517468.html. பார்த்த நாள்: 2014-12-20. 
  21. "26/11 mastermind Zakiur Rehman Lakhvi to remain in jail, Pakistan Supreme Court rejects bail order". Ibnlive. 2015-01-07. http://m.ibnlive.com/news/2611-mastermind-zakiur-rehman-lakhvi-to-remain-in-jail-pakistan-supreme-court-rejects-bail-order/521696-56.html. பார்த்த நாள்: 2015-01-07. 
  22. "26/11 plotter Zaki-ur-Rehman Lakhvi to remain in jail". Times of India. 2015-01-07. http://timesofindia.indiatimes.com/world/pakistan/26/11-plotter-Zaki-ur-Rehman-Lakhvi-to-remain-in-jail/articleshow/45790732.cms. பார்த்த நாள்: 2015-01-07. 
  23. "Pak court grants bail to Mumbai terror attack accused Lakhvi". Yahoo! News. Yahoo India (Yahoo!). 9 January 2015. https://in.news.yahoo.com/pak-court-grants-bail-to-mumbai-terror-attack-accused-lakhvi-061534426.html. பார்த்த நாள்: 11 January 2015. 
  24. "Pakistan court grants bail to 26/11 mastermind Zakiur Rehman Lakhvi but he may stay in jail". CNN IBN. Jan 9, 2015 இம் மூலத்தில் இருந்து 12 ஜனவரி 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150112061333/http://ibnlive.in.com/news/pakistan-court-grants-bail-to-2611-mastermind-zakiur-rehman-lakhvi-but-he-may-stay-in-jail/522007-56.html. பார்த்த நாள்: 9 January 2015. 
  25. "Lakhvi gets bail, again". Dawn, Pakistan. http://www.dawn.com/news/1155805. பார்த்த நாள்: 9 January 2015. 
  26. "26/11 mastermind Zaki-ur-Rehman Lakhvi granted bail, but will remain in jail". Zee Media. January 10, 2015. http://zeenews.india.com/news/south-asia/26/11-mastermind-zaki-ur-rehman-lakhvi-granted-bail-but-will-remain-in-jail_1527192.html. பார்த்த நாள்: 10 January 2015. 
  27. "Lakhvi, a free man for now". பாக்கிஸ்தானிலிருந்து இயங்கும் 'டான்' இணையத்தளம். பார்க்கப்பட்ட நாள் 11 ஏப்ரல் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  28. "லக்வி விடுதலையால் உறவு பாதிக்கும்: ராஜ்நாத் சிங்". தினமலர்' இணையத்தளம். பார்க்கப்பட்ட நாள் 11 ஏப்ரல் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  29. "லக்வி விவகாரத்தில் இந்தியாவுக்கு பிரான்ஸ் ஆதரவு". தினமலர்' இணையத்தளம். பார்க்கப்பட்ட நாள் 11 ஏப்ரல் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாகியுர்_ரகுமான்_லக்வி&oldid=3553293" இலிருந்து மீள்விக்கப்பட்டது