சாகித் பெனாசீராபாத் கோட்டம்
சாகித் பெனாசீராபாத் கோட்டம்
நவாப்ஷா கோட்டம் | |
|---|---|
கோட்டம் | |
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சாகித் பெனாசீராபாத் கோட்டத்தின் அமைவிடம் | |
| நாடு | |
| மாகாணம் | சிந்து மாகாணம் |
| நிறுவிய ஆண்டு | 6 சூன் 2014 |
| தோற்றுவித்தவர் | சிந்து மாகாண அரசு |
| தலைமையிடம் | நவாப்ஷா நகரம் |
| அஞ்சல் குறியீட்டெண் | 67000 |
சாகித் பெனாசீராபாத் கோட்டம் (Shaheed Benazirabad Division) (இதன் பழைய பெயர்:நவாப்ஷா கோட்டம்), பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதம அமைச்சர் பெனசீர் பூட்டோ நினைவாக இக்கோட்டத்திற்கு பெயர் சூட்டப்பட்டது.
இக்கோட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நவாப்ஷா நகரம் ஆகும். [1][2]இக்கோட்டத்தின் நிர்வாகி ஆணையாளர் ஆவார்.
இக்கோட்டத்தில் 3 மாவட்டங்களும், 15 வருவாய் வட்டஙகளும் உள்ளது. இக்கோட்டம் சிந்து மாகாணச் சட்டமன்றத்திற்கு 13 தொகுதிகளையும், பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு 7 தொகுதிகளையும் கொண்டுள்ளது. இக்கோட்டத்தின் கிழக்கில் இந்தியா உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2023 பாக்கித்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கோட்டத்தின் மக்கள் தொகை ஏறத்தாழ 59,28,917 (5.9 மில்லியன்). ஆகும். இக்கோட்டத்தின் மக்கள் தொகையில் ஆண்கள் 3,010,350 மற்றும்2,918,315 பெண்கள் உள்ளனர்.
மொழி
[தொகு]இக்கோட்டம் மக்கள் தொகையில் சிந்தி மொழியை 83.74% மக்களும், உருது மொழியை 6.49% மக்களும், பஞ்சாபி மொழியை 3.86% மக்களும், பலூச்சி மொழியை 1.37% மக்களும், பிராகுயி மொழியை 1.19% மக்களும், சராய்கி மொழியை 0.94% மக்களும், இந்த்கோ மொழியை 0.81% மக்களும் மற்றும் பிற மொழிகளை 1.56% மக்களும் பேசுகின்றனர்.[3]
சமயம்
[தொகு]இக்கோட்டத்தில் இசுலாம் சமயத்தை 98%க்கும் மேற்பட்ட மக்கள் பின்பற்றுகின்றனர். இந்து சமயம், கிறித்தவம் போன்ற சிறுபான்மை சமயங்களை 2%க்கும் குறைவான மக்களே பின்பற்றுகின்றனர்.
மாவட்டங்களின் பட்டியல்
[தொகு]| # | மாவட்டம் | தலைமையிடம் | பரப்பளவு
(km²)[4] |
மக்கள் தொகை
(2023) |
மக்கள்தொகை அடர்த்தி
(ppl/km²) (2023) |
எழுத்தறிவு
(2023) |
|---|---|---|---|---|---|---|
| 1 | சங்கர் மாவட்டம் | சங்கர் நகரம் | 10,728 | 2,308,465 | 215.0 | 43.66% |
| 2 | நவாப்ஷா மாவட்டம் (தற்போதைய பெயர்:சாகித் பெனாசீராபாத் மாவட்டம்) |
நவாப்ஷா நகரம் | 4,502 | 1,845,102 | 409.5 | 50.86% |
| 3 | நௌசாரோ பெரோஸ் மாவட்டம் | நௌசாரோ பெரோஸ் | 2,945 | 1,777,082 | 603.2 | 57.15% |
வருவாய் வட்டங்கள்
[தொகு]| # | வருவாய் வட்டம் | பரப்பளவு
(km²)[5] |
மக்கள் தொகை
(2023) |
மக்கள்தொகை அடர்த்தி
(ppl/km²) (2023) |
மாவட்டங்கள் |
|---|---|---|---|---|---|
| 1 | பீரியா வட்டம் | 488 | 330,308 | 676.86 | நௌசாரோ பெரோஸ் மாவட்டம் |
| 2 | கண்டியாரோ வட்டம் | 771 | 356,506 | 462.39 | |
| 3 | மெஹ்ராப்பூர் வட்டம் | 361 | 273,764 | 758.35 | |
| 4 | மோரோ வட்டம் | 609 | 408,148 | 670.19 | |
| 5 | நௌசாரோ பெரோஸ் வட்டம் | 717 | 408,356 | 569.53 | |
| 6 | காஜி அகமத் வட்டம் | 972 | 402,834 | 414.44 | நவாப்ஷா மாவட்டம் (தற்போதைய பெயர்:சாகித் பெனாசீராபாத் மாவட்டம்) |
| 7 | தௌர் வட்டம் | 2,210 | 532,621 | 241 | |
| 8 | நவாப்சா வட்டம் | 435 | 481,978 | 1,108.00 | |
| 9 | சக்கராந்து வட்டம் | 885 | 427,669 | 483.24 | |
| 10 | ஜாம் நவாஸ் அலி வட்டம் | 440 | 171,598 | 390 | சங்கர் மாவட்டம் |
| 11 | கிப்ரோ வட்டம் | 5,933 | 366,748 | 61.81 | |
| 12 | சங்கர் வட்டம் | 2,118 | 482,560 | 227.84 | |
| 13 | ஷாதாத்பூர் வட்டம் | 890 | 525,164 | 590.07 | |
| 14 | சின்ச்ஹோரா வட்டம் | 907 | 354,709 | 391.08 | |
| 15 | தண்டோ ஆதம் கான் வட்டம் | 440 | 407,686 | 926.56 |
சட்டமன்ற & நாடாளுமன்ற தொகுதிகள்
[தொகு]| சிந்து மாகாணச் சட்டமன்றத் தொகுதி | பாகிஸ்தான் நாடாளுமன்றத் தொகுதி (National Assembly Constituency) |
மாவட்டம் |
|---|---|---|
| PS-32 நௌசாரோ பெரோஸ்-I | NA-205 நௌசாரோ பெரோஸ்-I | நௌசாரோ பெரோஸ் மாவட்டம் |
| PS-33 நௌசாரோ பெரோஸ்-II | ||
| PS-34 நௌசாரோ பெரோஸ்-III | NA-206 நௌசாரோ பெரோஸ்-II | |
| PS-35 நௌசாரோ பெரோஸ்-IV | ||
| PS-36 நவாப்ஷா-I | NA-207 நவாப்ஷா-I | நவாப்ஷா மாவட்டம் |
| PS-37 நவாப்ஷா-II | ||
| PS-38 நவாப்ஷா-III | NA-208 நவாப்ஷா-II | |
| PS-39 நவாப்ஷா-IV | ||
| PS-40 சங்கர்-I | NA-209 சங்கர்-I | சங்கர் மாவட்டம் |
| PS-41 சங்கர்-II | ||
| PS-42 சங்கர்-III | ||
| PS-43 சங்கர்-IV | NA-210 சங்கர்-II | |
| PS-44 சங்கர்-V |
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Karachi’s district status restored, notification issued, Published in The News Tribe on 11 July 2011, Retrieved on 7 August 2012
- ↑ Correspondent, The Newspaper's (2014-05-25). "Shaheed Benazirabad made division". DAWN.COM (in ஆங்கிலம்). Retrieved 2020-08-30.
{{cite web}}:|last=has generic name (help) - ↑ "TABLE 11 – POPULATION BY MOTHER TONGUE, SEX AND RURAL/ URBAN" (PDF). Pakistan Bureau of Statistics. Retrieved 20 July 2024.
- ↑ "TABLE 1 : AREA, POPULATION BY SEX, SEX RATIO, POPULATION DENSITY, URBAN POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE, CENSUS-2023, PUNJAB" (PDF).
- ↑ "TABLE 1 : AREA, POPULATION BY SEX, SEX RATIO, POPULATION DENSITY, URBAN POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE, CENSUS-2023, PUNJAB" (PDF).