சாகித் பர்வேசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாகித் பர்வேசு பர்வேசு
பிறப்புசாகித் பர்வேசு கான்
14 அக்டோபர் 1958 (1958-10-14) (அகவை 62)
மும்பை, இந்தியா
பணிஇந்துஸ்தானி இசையில் சித்தார் மேதை
செயற்பாட்டுக்
காலம்
1965 – தற்போது வரை
விருதுகள்பத்மசிறீ விருது, 2012
சங்கீத நாடக அகாதமி விருது, 2006
வலைத்தளம்
Official site

உஸ்தாத் சாகித் பர்வேசு கான் (Shahid Parvez Khan) (பொதுவாக சாகித் பர்வேசு) (பிறப்பு:14 அக்டோபர் 1958) ஒரு இந்துஸ்தானி இசையின் சித்தார் கலைஞராவார். [1] இவர் எட்டாவா கரானாவின் ஏழாவது தலைமுறையைச் சேர்ந்தவர். "கயாகி ஆங்" என்று அழைக்கப்படும் இவரது இராக மேம்பாடுகளின் குரல்வளர்ப்புக்காக இவர் குறிப்பாக பாராட்டப்படுகிறார். இது சித்தார் மேதை உஸ்தாத் விலாயத் கானால் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சித்தார் வகையாக அறிமுகப்படுத்தப்பட்டது. [2]

கிசன் மகாராஜுடன் ஒரு இசை நிகழ்ச்சியில் சித்தார் மேதை உஸ்தாத் சாகித் பர்வேசு கான்

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இளம் சாகித் பர்வேசு கான், பனாரசு கரானாவின் சித்தார் கலைஞர் சம்தா பிரசாத்துடன் ஒரு இசை நிகழ்ச்சியில்

இந்தியாவின் மும்பையில் பிறந்த இவருக்கு இவரது தந்தை உஸ்தாத் ஆசிசு கான் பயிற்சி அளித்தார். [2] இவரது தந்தை சித்தார் மற்றும் சுர்பகார் கலைஞரான வாகித் கானின் மகனாவார். [3] [4] வழக்கம்போல, இவரது தந்தை தனது மகனை பல ஆண்டுகளாக சித்தாரில் பயிற்றுவிப்பதற்கு முன்பு குரலிசையிலும், கைம்முரசு இணையிலும் பயிற்சி அளித்தார். [1] மேலும், பாடகரும் சுர்பகார் மற்றும் சித்தார் கலைஞரான தனது மாமா அபீசு கானிடமிருந்து குரலிசை மற்றும் சுர்பகார் பயிற்சியையும் பெற்றார். தில்லி கரனாவின் முன்னு கானிடமிருந்து பல ஆண்டுகளாக கைம்முரசு இணையில் பயிற்சி பெற்றார்.

இம்தாத் கான் (இவரது தாத்தா), இனாயத் கான், வாகித் கான் (இவரது தாத்தா) மற்றும் விலாயத் கான் உள்ளிட்ட பல இசைக்கலைஞர்களை இந்துஸ்தானிய பாரம்பரிய இசையில் இவரது குடும்பத்தினர் உருவாக்கியுள்ளனர். [1]

தொழில்[தொகு]

அமெரிக்கா, ஐரோப்பா, சோவியத் ஒன்றியம், கனடா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆத்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்ற இந்திய விழா உட்பட இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள அனைத்து முக்கிய இசை விழாக்களிலும் பர்வேசு கான் நிகழ்ச்சியினை நிகழ்த்தியுள்ளார். இந்தியாவிலும் உலகெங்கிலும் ஒரு சிறப்பான செயல்திறன் வாழ்க்கையைப் பெற்றுள்ளார். [1]

விருதுகளும் கௌரவங்களும்[தொகு]

மாணவர்கள்[தொகு]

இவரது மாணவர்களில் சாகீர் கானும் சமீப் குல்கர்னியும் ஆகியோர் அடங்குவர். [7]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாகித்_பர்வேசு&oldid=3092823" இருந்து மீள்விக்கப்பட்டது