உள்ளடக்கத்துக்குச் செல்

சாகித் கபூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாகித் கபூர்
An upper body shot of Shahid Kapoor, looking away from the camera
2017 , பன்னாட்டு திரைப்பட விருதுகள் விழாவில் சாகித் கபூர்
பிறப்பு25 பெப்ரவரி 1981 (1981-02-25) (அகவை 43)
புது தில்லி, இந்தியா
மற்ற பெயர்கள்சாகித் கபூர்
சாகித் கட்டார்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2003–தற்போது வரை
பெற்றோர்பங்கஜ் கபூர்
நீலிமா அசீம்
வாழ்க்கைத்
துணை
மிரா ராத்புத் (தி. 2015)
பிள்ளைகள்2
உறவினர்கள்சுப்ரியா பதக்

சாகித் கபூர் (Shahid Kapoor: பிறப்பு 25 பிப்ரவரி 1981) ஓர் இந்திய நடிகர் ஆவார். இவர் பாலிவுட் திரைப்படங்களில் தோன்றுகிறார். ஆரம்பத்தில் காதல் வேடங்களில் நடித்ததற்காக அங்கீகரிக்கப்பட்ட இவர், பின்னர் அதிரடித் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தனது நடிப்பிற்காக மூன்று பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கையும் பின்னணியும்

[தொகு]

சாகித் கபூர் பிப்ரவரி 25,1981 அன்று புதுதில்லியில் நடிகர் பங்கஜ் கபூர் மற்றும் நடிகையும்-நடனக் கலைஞருமான நீலிமா அசீம் ஆகியோருக்கு பிறந்தார்.[1][2] இவருக்கு மூன்று வயதாக இருந்தபோது இவரது பெற்றோர் விவாகரத்து செய்தனர். கபூர் தனது தாயார் மற்றும் தாய்வழி தாத்தா பாட்டிகளுடன் தில்லியில் தொடர்ந்து வசித்து வந்தார்.[3][4] கபூருக்கு 10 வயதாக இருந்தபோது, நடனக் கலைஞரான ஒரு நடிகையாக பணியாற்ற மும்பைக்கு குடிபெயர்ந்தார்.[5]

கபூர் தில்லியில் உள்ள கியான் பாரதி பள்ளி, மும்பையில் உள்ள ராஜன்ஸ் வித்யாலயா ஆகியவற்றில் கல்வி பயின்றார். பின்னர் மும்பையின் மிதிபாய் கல்லூரியில் பட்டம் பெற்றார்.[6]

திருமண வாழ்க்கை

[தொகு]

7 ஜூலை 2015 இல், கபூர் தன்னைவிட 13 வயது இளையவரான புதுடெல்லியைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவியான மீரா ராஜ்புத் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.[7] இவர்களுக்கு ஆகஸ்ட் 2016 இல் மிஷா என்ற ஒரு மகளும், செப்டம்பர் 2018 இல் ஜெய்ன் என்ற ஒரு மகனும் பிறந்தனர்.[8]

நடிப்பு வாழ்க்கை

[தொகு]

நடிகர்கள் பங்கஜ் கபூர் மற்றும் நீலிமா அசீம் ஆகியோரின் மகனான சாகித் கபூர், சியாமக் தாவரின் நடனப் பள்ளியில் நடனக் கலைஞராகப் பயிற்சி பெற்றார். 1990களில் ஒரு சில படங்களில் பின்னணி நடனக் கலைஞராக தோன்றினார். ஒருசில இசைக் காணொளிகள் மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களில் தோன்றினார். 2003 ஆம் ஆண்டில் இஷ்க் விஷ்க் என்ற காதல் நகைச்சுவைத் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் அறிமுகமானார். இதற்காக இவர் சிறந்த ஆண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருதை வென்றார். அதைத் தொடர்ந்து சூரஜ் பர்ஜாத்தியாவின் அதிக வசூல் செய்த விவாஹ் (2006) என்ற குடும்ப நாடகத் திரைப்படத்தில் நடித்தார். இது இவருடைய முதல் வணிக ரீதியிலான வெற்றிப் படமாகும். அதைத் தொடர்ந்து 2007 இல் ஜப் வி மெட் மற்றும் 2009 இல் வெளிவந்த காமினி ஆகியவை வணிக ரீதியிலான மிகப்பெரிய வெற்றி படங்களாகும்

கபூர் சிறு வயதிலிருந்தே நடனத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். தனது 15 வயதில் சியாமக் தாவரின் நடன நிறுவனத்தில் சேர்ந்தார்.[9] அங்கு ஒரு மாணவராக இருந்தபோது, தில் தோ பாகல் ஹை (1997) மற்றும் தால் (1999) ஆகிய படங்களில் கபூர் பின்னணி நடனக் கலைஞராக தோன்றினார். இப்படங்களில் தாவர் நடன இயக்குனராக பணியாற்றினார்.[9] பின்னர் அதே நிறுவனத்தில் பயிற்றுவிப்பாளராக ஆனார்.[9] இந்த நேரத்தில், சாருக் கான், கஜோல் மற்றும் ராணி முகர்ஜி ஆகிய நட்சத்திரங்கள் நடித்த பெப்சி விளம்பரத்திற்கான நடிகர் தேர்வில் கலந்து கொண்டார். ஆனால் இவர் தேர்தெடுக்கப்படவில்லை.[5] பின்னர், கிட் கேட் மற்றும் குளோஸ்-அப் பொருட்களுக்கான தொலைக்காட்சி விளம்பரங்களில் தோன்றினார். பின்னர் ஆரியன்ஸ் இசைக்குழு மற்றும் பாடகர் குமார் சானு உட்பட பல கலைஞர்களுக்கான இசைக் காணொளிகளில் இடம்பெற்றார்.[10] 1998 ஆம் ஆண்டு மோகன்தாஸ் B.A.L.L.B என்ற தொலைக்காட்சித் தொடரில் தனது தந்தைக்கு உதவி இயக்குனராகப் பணியாற்றினார்.[10][11]

விருதுகள்

[தொகு]

கபூர், இஷ்க் விஷ்க் படத்திற்கான சிறந்த ஆண் அறிமுக விருது (2003), ஹைதர் படத்திற்கான சிறந்த நடிகர் விருது (2014) மற்றும் உட்தா பஞ்சாப் படத்திற்கான சிறந்த நடிகருக்கான விமர்சகர்கள் விருது (2016) என மூன்று பிலிம்பேர் விருதுகளைப் பெற்றுள்ளார்.[12][13][14] ஜப் வி மெட் (2007) கமினி (2009) உட்தா பஞ்சாப் (2016) மற்றும் கபீர் சிங் (2019) ஆகிய திரைப்படங்களில் நடித்ததற்காக மேலும் நான்கு சிறந்த நடிகருக்கான பரிந்துரைகளையும் பெற்றுள்ளார்.[12][15]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Happy Birthday Shahid Kapoor: Simply Shaandaar@35". என்டிடிவி. 25 February 2016. Archived from the original on 7 March 2016. பார்க்கப்பட்ட நாள் 7 March 2016.
  2. Masand, Rajeev (19 November 2006). "Kareena says I oversleep: Shahid". சிஎன்என்-ஐபிஎன். Archived from the original on 11 October 2020. பார்க்கப்பட்ட நாள் 7 March 2016.
  3. "I am tired of dating heroines: Shahid Kapoor". 5 September 2013 இம் மூலத்தில் இருந்து 13 November 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151113152113/http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Shahid-Kapoor-32-is-a-simple-guy-who-doesn%27t-like-complications-in-life/articleshow/22288243.cms. 
  4. "Ishaan's not a Kapur: Rajesh Khattar". 30 November 2007 இம் மூலத்தில் இருந்து 30 July 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130730111131/http://articles.timesofindia.indiatimes.com/2007-11-30/news-interviews/27953547_1_neelima-azim-shahid-kapur-pankaj-kapur. 
  5. 5.0 5.1 Gupta, Priya (5 September 2013). "I am tired of dating heroines: Shahid Kapoor". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 13 November 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151113152113/http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Shahid-Kapoor-32-is-a-simple-guy-who-doesn%27t-like-complications-in-life/articleshow/22288243.cms. 
  6. "Just how educated are Bollywood stars". ரெடிப்.காம். 12 January 2012. Archived from the original on 16 July 2015. பார்க்கப்பட்ட நாள் 17 July 2015.
  7. "Shahid-Mira's daughter is Misha: Meet Bollywood's newest baby brigade". Archived from the original on 19 September 2016. பார்க்கப்பட்ட நாள் 19 September 2016.
  8. "Shahid Kapoor and Mira Rajput blessed with a baby girl". Bollywood Hungama. 26 August 2016. Archived from the original on 27 August 2016. பார்க்கப்பட்ட நாள் 27 August 2016.
  9. 9.0 9.1 9.2 Bhattacharya, Roshmila (14 January 2010). "Come dance with me: Shahid Kapoor". ஹிந்துஸ்தான் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து 7 July 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150707235112/http://www.hindustantimes.com/entertainment/come-dance-with-me-shahid-kapoor/article1-497328.aspx. 
  10. 10.0 10.1 "All smiles and success...". தி இந்து. 26 May 2003 இம் மூலத்தில் இருந்து 7 November 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20051107190427/http://www.thehindu.com/thehindu/mp/2003/05/26/stories/2003052600820100.htm. 
  11. "Cloak 'n' dagger". இந்தியா டுடே. 12 January 1998 இம் மூலத்தில் இருந்து 5 July 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150705180636/http://indiatoday.intoday.in/story/actor-pankaj-kapur-make-his-directorial-debut-with-mohandas-b.a.l.l.b./1/262890.html. 
  12. 12.0 12.1 Khan, Ujala Ali (27 January 2015). "Trophy time at Filmfare Awards". The National இம் மூலத்தில் இருந்து 29 April 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150429190243/http://www.thenational.ae/arts-lifestyle/trophy-time-at-filmfare-awards. 
  13. "60th Britannia Filmfare Awards 2014: Complete list of winners". The Times of India. 31 January 2015 இம் மூலத்தில் இருந்து 3 February 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150203081332/http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/60th-Britannia-Filmfare-Awards-2014-Complete-list-of-winners/articleshow/46080277.cms. 
  14. "62nd Filmfare Awards 2017: Winners' list". The Times of India. 15 January 2017 இம் மூலத்தில் இருந்து 14 January 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170114235906/http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/62nd-filmfare-awards-2017-winners-list/articleshow/56541241.cms. 
  15. "62nd Jio Filmfare Awards 2017 Nominations". Filmfare. 9 January 2017 இம் மூலத்தில் இருந்து 13 January 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170113122217/http://www.filmfare.com/news/nominations-for-the-62nd-jio-filmfare-awards-17987.html. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாகித்_கபூர்&oldid=4111749" இலிருந்து மீள்விக்கப்பட்டது