உள்ளடக்கத்துக்குச் செல்

சாகர் அன்வேசிகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாகர் அன்வேசிகா (Sagar Anveshika) என்பது இந்தியாவின் புவி அறிவியல் துறையின் கீழான தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆராய்ச்சிக் கப்பலாகும். இந்த ஆராய்ச்சிக் கப்பலை இந்தியாவின் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் 2021 ஆம் ஆண்டு சனவரி 09 ஆம் நாள் நாட்டிற்கு ஒப்படைத்தார்.[1]இந்தக் கப்பலானது கடற்கரையோர ஆராய்ச்சிக்கான வரிசையில் சாகர் தாராவிற்கு அடுத்த முயற்சியாகும். இந்தக் கப்பலானது டைடாகார் வேகன்ஸ் லிமிடெட் என்ற தனியார் கப்பல் கட்டுமான நிறுவனத்தால் இந்திய அரசின் புவி அறிவியல் துறையின் கீழான தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்திற்காக தயாரித்து வழங்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "'Sagar Anveshika': Harsh Vardhan dedicates new coastal research vessel to nation". ANI News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாகர்_அன்வேசிகா&oldid=3090214" இலிருந்து மீள்விக்கப்பட்டது