உள்ளடக்கத்துக்குச் செல்

சாகன் (சடங்கு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெள்ளியால் செய்யப்பட்ட சுகுண்டா எண்ணெய் விளக்கு
சாகன் காலத்தில் அரிசி மதுவை பரிமாறுதல், இடது கையில் முட்டை மற்றும் புகைபிடித்த மீனை வைத்துள்ளார்.

சாகன் (Sagun) என்பது ஒரு நேபாளத்தின் ஒருவகை சடங்கு ஆகும். இது ஒருவருக்கு நல்ல அதிர்ஷ்டத்தை அளிக்கவும் மரியாதை காட்டவும் மங்களகரமான உணவை வழங்குவதை உள்ளடக்கியது. இது காத்மாண்டு சமவெளியின் நேவார் சமூகத்தில் மிகவும் மதிக்கப்படும் விழாவாகும். வேகவைத்த முட்டை, மீன், இறைச்சி, பருப்பு சூப் மற்றும் அரிசி ஒயின் போன்றவை உணவாகப் பரிமாறப்படுகிறது. இந்த ஐந்து பொருட்கள் முறையே ஒளி, பூமி, நீர், காற்று மற்றும் வானம் ஆகிய ஐந்து தாந்த்ரீக கருத்தாக்கங்களைக் குறிக்கின்றன.[1]

பிறந்த நாள், திருமணங்கள் மற்றும் முதியோர் சடங்குகள் போன்ற வாழ்க்கைச் சுழற்சி நிகழ்வுகளின் போது சாகன் வழங்கப்படுகிறது. நேபாள சகாப்தத்தின் புத்தாண்டு தினத்தன்று நடைபெறும் மகா பூஜை விழாவிலும் இது வழங்கப்படுகிறது. பயணிகளுக்கு நீண்ட பயணத்திற்கு புறப்படுவதற்கு முன்பும், ஒரு பயணத்திலிருந்து திரும்பியதும் சாகன் வழங்கப்படுகிறது. ஒரு சிறப்பு சாதனையை நிகழ்த்தியவர்கள் அல்லது உயிருக்கு ஆபத்தான விபத்தில் இருந்து தப்பியவர்கள் இதைப் பெறுகிறார்கள். ஒருவரை கௌரவிக்கும் வகையில் இந்த விழா நடத்தப்படுகிறது. சாகன் சடங்கு இந்து மற்றும் பௌத்த நேவார் மக்களால் நிகழ்த்தப்படுகிறது.

விழா

[தொகு]

பொதுவான நடைமுறையின்படி, சாகனைப் பெறும் நபர் தரையில் சப்பணமிட்டு அமர்ந்திருப்பார். அவருக்கு உணவு பரிமாறும் இலையின் இலை மீது சுகுண்டா என்னும் எண்ணெய் விளக்கு முன்னும் பின்னுமாக வலதுபுறமும் வைக்கப்படுகிறது. வீட்டில் இருக்கும் மூத்த பெண் பூக்கள், அரிசி மற்றும் குங்குமம் ஆகியவற்றை ஒரு தட்டில் கொண்டு வந்து அதிர்ஷ்டக் கடவுளான பிள்ளையாரை வணங்குகிறாள். பின்னர் பங்கேற்பாளர் அனைவருக்கும் அந்த பிரசாதம் வழங்கப்படுகிறது.

19ஆம் நூற்றாண்டின் சுகுண்டா சடங்கு விளக்கு, நேபாளம்

பின்னர் முக்கியச் சடங்காக வீட்டிலுள்ள பெண் ஒரு வேகவைத்த முட்டை மற்றும் புகைபிடித்த மீனை இலையில் அமர்ந்திருப்பவருக்கு வழங்குகிறார். அதை அவர் இரு கைகளாலும் ஏற்றுக்கொள்கிறார். வேறொரு பெண் ஒரு ஜாடியில் இருந்து அரிசி மதுவை சிறிய கிண்ணங்களில் ஊற்றுகிறார். இவ்வாறு அனைவருக்கும் பரிமாறப்பட்ட பிறகுஅவர்கள் உணவை உண்ணலாம்

குடும்பப் பாரம்பரியம் மற்றும் புவியியலைப் பொறுத்து செயல்முறை மற்றும் பொருட்கள் மாறுபடலாம். வேகவைத்த முட்டைகளுக்கு பதிலாக லட்டு அல்லது லாக்வா (இறைச்சி உருண்டைகள்) வழங்கப்படலாம். இருக்கை தரையிலோ நாற்காலிகளிலோ அமைக்கப்படலாம்.

முக்கியத்துவம்

[தொகு]

சாகன் சடங்கில் பரிமாறப்படும் வேகவைத்த முட்டை, மீன், இறைச்சி, பருப்பு சூப் மற்றும் அரிசி ஒயின் போன்றவை முறையே ஒளி, பூமி, நீர், காற்று மற்றும் வானம் ஆகிய ஐந்து தாந்த்ரீக கருத்தாக்கங்களைக் குறிக்கின்றன.[2][3]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Vaidya, Tulasī Rāma; Mānandhara, Triratna; Joshi, Shankar Lal (1993). Social History of Nepal. Anmol Publications. p. 161. ISBN 9788170417996.
  2. Juju, Baldev; Shrestha, Surendra Man (1985). Nepa ya Tantric Dyah wa Tantric Puja [Nepal's Tantric Deity and Tantric Worship] (in Newari). Kathmandu: Baldev Juju and Surendra Man Shrestha. p. 19.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  3. Löwdin, Per (1985). Food ritual and society among the Newars. Uppsala University. p. 109. ISBN 9789150605938.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாகன்_(சடங்கு)&oldid=4221572" இலிருந்து மீள்விக்கப்பட்டது