சஸ்மிதா லோகா அகமத் யானி அருங்காட்சியகம், மத்ய ஜகார்த்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சஸ்மிதா லோகா அகமத் யானி அருங்காட்சியகம்
அருங்காட்சியக முகப்பு
Map
அமைவிடம்ஜேஎல். லெம்பாங் 58, மென்டெங், மத்ய ஜகார்த்தா, இந்தோனேசியா
வகைஇந்தோனேசிய தேசிய நாயகர் அருங்காட்சியகம்

சஸ்மிதா லோகா அகமத் யானி அருங்காட்சியகம் (Sasmita Loka Ahmad Yani Museum) இந்தோனேசியாவின் மத்திய ஜகார்த்தாவில் உள்ள ஜலான் லெம்பாங் 58 அல்லது ஜலான் லதுர்ஹரி 65 என்னும் இடத்தில் அமைந்துள்ள அருங்காட்சியகம் ஆகும். இந்த அருங்காட்சியகத்தில் அகமத் யானி அவர்களின் சேகரித்து வைத்துள்ள 30 செப்டம்பர் 1965 ஆம் நாளோடு தொடர்புடைய 30 செப்டம்பர் இயக்கத்தைச் சேர்ந்த டியோராமாக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

30 செப்டம்பர் இயக்கம்[தொகு]

30 செப்டம்பர் இயக்கம் இந்தோனேசிய தேசிய ஆயுதப்படை உறுப்பினர்களின் சுயமாக அறிவித்துக்கொண்ட ஓர் அமைப்பாகும். 1 அக்டோபர் 1965 ஆம் நாளின் விடியற்காலையில் ஆறு இந்தோனேசிய இராணுவ ஜெனரல்களை ஒரு முறைகேடான சதித்திட்டத்தின் அடிப்படையில் இந்த அமைப்பு படுகொலை செய்தது. இதனை 1 அக்டோபர் 1965 இயக்கம் என்றும் கூறுவர். [1] மறு நாள் காலையில் அந்த அமைப்பானது ஊடகங்கள் மற்றும் தகவல் தொடர்பு நிறுவனங்களை தம் கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததாக அறிவித்தது. ஜனாதிபதி சுகர்னோவை தன் பாதுகாப்பில் வைத்துக் கொண்டது. இருப்பினும் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியினை அடிப்படையாகக் கொண்ட போராட்டம் தோல்வியுற்றது. அந்த நாளின் முடிவில், ஜகார்த்தாவில் தோல்வியடைந்தது. இதற்கிடையில், மத்திய ஜாவாவில் ஒரு இராணுவப் பிரிவையும் மற்றும் பல நகரங்களின் கட்டுப்பாட்டையும் கொண்டுவர ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. போராட்டம் அடக்கும் சமயத்தில் மேலும் இரண்டு மூத்த அதிகாரிகள் இறந்துவிட்டனர்.

வரலாறு[தொகு]

1965 இல் அஹ்மத் யானி சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தைக் குறிக்கும் தகடு

இந்த அருங்காட்சியகம் முன்பு டச்சு அல்லது ஐரோப்பிய தனியார் நிறுவனத்தின் இல்லமாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. 1950 களில் இந்த வீட்டை இராணுவ அலுவலகத்திற்கான வீட்டுவசதிக்காக இந்த இல்லம் அவர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. பின்னர் இந்த வீட்டில் ஜெனரல் அஹ்மத் யானி வசித்து வந்தார். இந்த இடத்தில்தான் செப்டம்பர் 30 இயக்கத்தின் உறுப்பினர்களால் அஹ்மத் யானி சுட்டுக் கொல்லப்பட்டார்.[2] யானியின் மரணம் அடைந்த பிறகு அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த பிற உறுப்பினர்கள் வீட்டை விட்டு வெளியேறினர். அக்டோபர் 1965 ஆம் நாளன்று திருமதி யானி அவர்களின் முன்னாள் வீட்டை ஒரு பொது அருங்காட்சியகமாக மாற்ற பெரிதும் உதவி செய்தார். வீட்டின் உள் புறமானது உள்ளது உள்ளபடியே எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் வைக்கப்பட்டுள்ளது, இதில் அஹ்மத் யானி கொலை செய்யப்பட்ட இடத்தில் உள்ள கதவு மற்றும் சுவர்களில் உள்ள துப்பாக்கிக் குண்டுகள் சுடப்பட்டதற்கான துளைகள் உள்ளபடியே அமைந்துள்ளன. அதே நேரத்தில் வீட்டின் அலங்காரங்களும் அக்காலகட்டத்தில் இருந்தவாறே அப்படியே அமைக்கப்பட்டுள்ளன.

முகவரி[தொகு]

லெப்டினன்ட் ஜெனரலாக இருந்த யானி கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒரு கும்பலால் கடத்தப்பட்டார். பின்னர் கொலை செய்யப்பட்டார். அதற்குப் பிந்தைய காலகட்ட இந்தோனேசியாவின் வரலாற்றை வடிவமைத்த பல நிகழ்வுகளைக் கொண்டமைந்துள்ள இந்த சஸ்மிதா லோகா அகமத் யானி அருங்காட்சியகம், ஜேஎல். லெம்பாங் 58, மென்டெங், மத்ய ஜகால்த்தா, இந்தோனேசியா என்ற முகவரியில் செயல்பட்டு வருகின்ற இந்தோனேசிய நாட்டுத் தலைவருக்கான அருங்காட்சியகமாகும். இந்தோனேசியாவைப் பற்றியும் மற்றும் அதன் இராணுவத்தைப் பற்றியும் அறிந்துகொள்வதற்கு இந்த இராணுவ அருங்காட்சியகம் ஒரு அற்புதமான இடமாக அமைந்துள்ளது.[3]

பார்வையாளர் நேரம்[தொகு]

இந்த அருங்காட்சியகம் செவ்வாய்க்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை காலை 8.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை வரை பொதுமக்களின் பார்வைக்காக இலவசமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்திற்கு மிக அருகில் மெர்டேகா சதுக்கம், கெபுலாவன் செரிபு (ஆயிரம் தீவுகள்), மெஸ்ஜித் இஸ்திக்லால், தமன் மினி இந்தோனேசியா இந்தா போன்ற இடங்கள் உள்ளன.[3]

குறிப்புகள்[தொகு]

  1. Crouch 1978, ப. 101.
  2. "Sumpah Pemuda, Museum" (in Indonesian). Dinas Komunikasi, Informatika dan Kehumasan Pemprov DKI Jakarta இம் மூலத்தில் இருந்து ஜூன் 11, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120611154735/http://www.jakarta.go.id/jakv1/encyclopedia/detail/2751/museum+gajah. 
  3. 3.0 3.1 Sasmita Loka